28
நீயாக அழைத்தாய் உன் வெற்றியைக் கொண்டாட
நீயாக ஆடினாய் என்னையும் ஆட வைத்தாய்
நீயாக குறுந்தகவல் அனுப்பி , காலையும் மாலையும் வணக்கம் வைத்தாய்
நீயாக உன் குடும்பத்திடம் என்னை விருந்துக்கு அழைத்தாய்
நீயாக மதிய உணவு உன்னுடன் உன்ன அழைத்துச் சென்றாய்
நீயாக சாப்பாட்டையும் தட்டில் மாற்றிக் கொண்டாய்
நீயாக சிரித்தாய்
நீயாக குலைந்தாய்
நீயாக பேசினாய்
நீயாக நீ தான் நல்லவன் என்கிறாய்
நீயாக என்னக்கு ஆடியும் BMW வும் பிடிக்கும் என்கிறாய்
நீயாக பணக்காரன் தான் எனக்கு கணவனாக வர வேண்டும் என்கிறாய்
நீயாய் என்னை கோமாளி ஆக்கும்முன்
நீயாய் என்னைக் கிறுக்கன் என்றே சொல்லிவிடு தோழியே..........!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top