*12*

நான் என் அவளைப்பற்றி நினைக்கவேணும்?............................   "நான் அவளப்பற்றி
நினைக்கமாட்டன்."  என மனதுக்குள் நினைத்ததை வெளியே அவனையும்  அறியாமல்  சத்தமாக  கூறினான் அபி.
அண்ணா........ யாரப்பற்றி நினைக்க  கூடாது  என கயலின் குரல் கேட்டு அதிர்ந்தான்  அபி. நான் மனதுக்குள் நினைத்ததை இவளுக்கு  எவ்வாறு  தெரிந்தது  என குழம்பினான். ஏய் நான்..... என்ன....பரப்பத்.....நான் ஒன்றும்  நினைக்கிலேயே  என தடுமாறி கூறினான் அபி.
ஓகே  நீங்க ஒன்னும் சொல்லவும்  இல்ல நான் அத கேட்கவும்  இல்ல  இப்ப ஓகேயா. என கூறி சிரித்தாள் கயல். அவளை கோவமாக பார்க்க நினைத்து முடியாமல் தானும் இணைந்து சிரித்தபடியே வா நான் இன்று நேரத்துடன்  வீட்டுக்கு வரக்கூறினர்  பாட்டி . எனக்கூறி  கயலுடன்  காரில்  ஏறி புறப்பட்டான்.

பாட்டி ஏன் என்னை நேரத்துடன் வரக்கூறினீர்கள் என்று இப்பொழுதாவது சொல்லுங்க என கேட்டான். 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top