நீ இன்றி

நினைக்கவும் முடியாத...
மறக்கவும் முடியாத...
உறவொன்று உண்டு என்றால்...
அது உனக்கும் எனக்குமான
உறவாக தான்
இருக்க கூடும்...

விழியில் பொங்கிய
வெறுப்போடும்...
மனதில் தேங்கிய
வெறுமையோடும்...
உன்னை நான் நித்தமும் வெறுத்தேன்...

வருடக்கணக்கில் என்னுடன்
வந்த உறவு நீ...
சத்தமின்றி என் வாழ்வை விட்டு அகன்று விட்டாய்...

விடையில்லா விடுகதையாய் என்னைத் தத்தளிக்க விட்டு சென்றாய்...

இனி நான் யாரிடம் கோபம் கொள்வேன்...
யாரை நான் மனமுவந்து வெறுப்பேன்...

எதிரும் புதிருமாய் இருந்த
நம் ஒட்டியும் ஒட்டாத உறவுக்கு
இது தான் சிறந்த
முற்றுப்புள்ளி என்று நினைத்து விட்டாயோ...

உரிமையற்ற இடத்தில் நான்
தங்குவது இல்லை...
நீயற்ற இடத்தில் இனி
எந்தவித உரிமையும்
எனக்கில்லை...

விட்டு சென்றாய்...
என் விழி நீரை தட்டிச் சென்றாய்...

வார்த்தையற்ற மௌனமாய் சிலகணம் என்னை
நானே கேள்வியோடு
நோக்கினேன்...

நேற்று இருந்த நீ இன்று இல்லை... 
நாளையும் நீ என்னோடு இருக்க போவதில்லை...

நேற்றுவரை உன்மீது வெறுப்பு கொண்டேன்...
சில நேரம் காரணத்தோடு
சில நேரம் காரணங்கள்
இன்றியே...

உன்னோடு அந்த வெறுப்பையும்
உடன் எடுத்து
சென்று விட்டாய் போல...

விருப்பும் இன்றி
வெறுப்பும் இன்றி
இனி உன்னை நான்
நினைவது தகுமா???

காலம் கடந்த பின்
கண்ணீருக்கு மதிப்பில்லை...

நீ மறைந்த பின் நான் கண்ணீர் சிந்தியும் பயனில்லை...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top