புதுக்கவிதை

துறவி போல் திரிந்து வந்த என் கால்தடங்கள்

உனை கண்டவுடன் சட்டென நின்றதேனோ??

காடு மலை என கடந்து வந்து

உன் காலடியில் தஞ்சமடையத்தானோ!!

பார்ப்பவரை சுண்டி இழுக்கும் உன் செவ்விழிகள்

எனை பார்த்தவுடன் அகண்டு விரிந்ததேனோ????

கருவெள்ளை கலந்த அந்த சொர்கத்தில்

எனை அடைத்து ஆழத்தானோ!!!

அந்த பூவிதழ் குவிந்து புன்னகைத்த போது

என் இதயதுடிப்பு இருமடங்கானதேனோ???

என்னவளை கண்டுவிட்டேன் என என் இதயம்

இவ்வுலகிற்க்கு காட்டிய அறிகுரிதானோ!!!

இருவிழிகள் மட்டுமல்ல இரு மனம் இனைந்து

காதலெனும் புதுக்கவிதை தீட்டியதோ!!!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top