27 நீங்கள் என்றுடையவர்
27 நீங்கள் என்னுடையவர்
சுமித்ராவிடம் இருந்து அழைப்பு வந்தது கமலிக்கு. அவளது பெயர் தனது கைப்பேசியில் ஒளிர்ந்ததை பார்த்தவுடன், கமலிக்கு சந்தோஷம் ஊற்றெடுத்தது. கமலி பேசத் துவங்கும் முன், அவளுக்கு தொலைபேசியின் வாயிலாக முத்தம் கொடுக்கத் துவங்கினாள் சுமித்ரா. ஒன்றும் புரியாமல், தனது கைபேசியை காதிலிருந்து பின்னால் இழுத்தாள் கமலி.
"ஐ லவ் யூ, கமலி" என்று கத்தினாள் சுமித்ரா.
"பயங்கர சந்தோஷமா இருக்க போல இருக்கு... உங்க வீட்டுக்காரர் உனக்கு ஏதாவது கிஃப்ட் கொடுத்தாரா?"
"என் ஹஸ்பண்ட் கொடுக்கல... நீ தான் கொடுத்த..."
"நானா? எனக்கு புரியல"
"நான் என்னோட ஸ்டடீஸ்ஸை கன்டினியூ பண்ண போறேன். என்னோட பாக்ஸிங் பிரக்டிஸ்ஸையும் ஆரம்பிக்கப் போறேன்..."
"வாவ்... இது உண்மையிலேயே சந்தோஷமான விஷயம் தான். எனக்கு ட்ரீட் வேணும்" என்று சற்று நிறுத்தியவள்,
"ஆனா, உனக்கு நான் என்ன கிஃப்ட் கொடுத்தேன்?"
"உன்னால தானே இதெல்லாம் நடக்குது..."
"தெளிவா சொல்லு"
"நேத்து என்ன நடந்தது தெரியுமா?"
"என்ன?"
"என்னோட ஹஸ்பண்டுக்கு இன்ட்காம்ல ப்ரமோஷன் கிடைச்சிருக்கு. எனக்கும் ஸ்பான்சர் பண்ண போறாங்களாம். எனக்கு தெரியும், இது எல்லாம் உன்னால தான். நீ தானே உங்க ஹஸ்பண்ட்கிட்ட எனக்காக பேசி, இதையெல்லாம் செய்ய வச்ச? தேங்க்யூ சோ மச், கமலி. நீ எனக்கு எவ்வளவு பெரிய உபகாரம் செஞ்சிருக்கன்னு உனக்கு தெரியாது. நீ என்னுடைய கனவை மீட்டுக் கொடுத்திருக்க. இந்த உதவியை நான் சாகுற வரைக்கும் மறக்க மாட்டேன், கமலி.."
ஒன்றும் சொல்லாமல் சிலை போல் நின்றாள் கமலி.
"நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என் வாழ்க்கையோட இந்த எதிர்பாராத, மிகப்பெரிய திருப்பத்தை நான் கொண்டாட நினைக்கிறேன். எனக்கு ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்ஸை மட்டும் எங்க வீட்டுக்கு நாளைக்கு கூப்பிடலாம்னு இருக்கேன். நீ, லாவண்யா, என்னோட ஸ்கூல் ஃப்ரெண்ட் இரண்டு பேர். அவ்வளவு தான். நீ நிச்சயம் வரணும். நான் உனக்காக காத்திருப்பேன்."
"கண்டிப்பா" என்றாள் தடுமாற்றத்துடன் கமலி.
அவர்கள் அழைப்பை துண்டித்து கொண்டார்கள். பேச்சிழந்து அமர்ந்திருந்தாள் கமலி. யாருக்குமே சாத்தியமில்லாத விஷயத்தைக்கூட, சாதித்துக் காட்ட ஆதித்யாவால் முடியும் என்று அவளுக்கு தெரியாது. அவளுக்கு நன்றாகத் தெரியும், சுமித்ராவின் கணவன், அவளை மறுபடியும் கல்லூரிக்கு அனுப்ப கூடாது என்று எவ்வளவு பிடிவாதமாய் இருந்தான் என்று. ஆம், ஒரு முறை அவள் ஆதித்யாவிடம் இதைப் பற்றி பேசி இருக்கிறாள். ஆனால், ஆதித்யா அவளை சார்ந்தவர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் வழங்குவான் என்று அவள் எதிர் பார்க்கவில்லை. ஆதித்யா தன்னை காதலிக்கிறான் என்று அவளுக்கு தெரியும். ஆனால், இதையெல்லாம் கூட, அவளை காதலிப்பதால் தான் அவன் செய்கிறானா?
ஆதித்யாவிடம் உடனே பேசவேண்டும் என்று தோன்றியது அவளுக்கு. அவன் ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருந்தான். தனது கைபேசி ஒளி பெற்றவுடன், அதில் தனது மனைவியின் பெயர் ஒளிர்ந்ததை பார்த்து, அவன் இதழ்கள் அனிச்சையாய் புன்னகை பூத்தன. தன்னை சுற்றி அமர்ந்திருந்தவர்களை பார்த்து,
"ஐ வாண்ட் எ ஷார்ட் பிரேக்" என்றான்.
அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். காரணமின்றி ஆதித்யா மீட்டிங்கை நிறுத்த மாட்டான் என்பது அவர்களுக்கு தெரியும். எல்லோரும் அங்கிருந்து கலைந்து செல்ல தொடங்கினார்கள். சரவணனும், தீபக்கும் கூட காரணம் புரியாமல் விழித்தார்கள்... பிரபாகரனைத் தவிர. அவனும் புன்னகையுடன் அங்கிருந்து சென்றான். அழைப்பை ஏற்று பேசினான் ஆதித்யா.
"எப்படி இருக்க கமலி?"
"நம்ம காலையில தானே பேசினோம் ஆதிஜி?" என்றாள் மெல்லிய குரலில்.
அவளது குரலில் ஏதோ புதிதாய் உணர்ந்தான் ஆதித்யா.
"என்ன ஆச்சு, ஏன் என்னவோ மாதிரி பேசுற?"
"ஒன்னுமில்ல ஆதிஜி. சுமித்ரா என்னை நாளைக்கு அவங்க வீட்டுக்கு கூப்பிட்டிருக்கா"
ஆதித்யாவுக்கு விஷயம் புரிந்து போனது.
"ஓ அப்படியா...?"
"எங்களை ஒரு கெட்-டு-கெதர்க்காக கூப்பிட்டிருக்கா"
"ம்ம்ம் "
"அவளோட படிப்பை கண்டினியூ பண்ண போறா"
"நல்ல விஷயம்"
"அவளை மறுபடி பாக்சிங் ப்ராக்டிஸ் பண்ண சொல்லி அவங்க ஹஸ்பன்ட் சொல்லிட்டாராம்"
"ம்ம்ம்"
"அதை அவ எங்க கூட கொண்டாட நினைக்கிறா"
"ம்ம்ம்"
"சுரேஷ் அண்ணனுக்கு ப்ரமோஷன் கிடைச்சிருக்கு. அதை நீங்க தான் அவருக்கு கொடுத்தீங்கன்னு எனக்கு தெரியும்"
அமைதியாக இருந்தான் ஆதித்யா.
"தேங்க்யூ சோ மச், ஆதிஜி"
"நான் அவருக்கு அடிஷ்னலா எதுவும் செய்யல. சுரேஷ் திறமைசாலி தான்"
"நீங்க சுமித்ராவுக்கு ஸ்பான்சர்ஷிப் கொடுக்க ஒத்துக்கிட்டிங்கன்னு சொன்னா"
"ஆமாம் நம்ம கம்பெனிக்கு அது பாப்புலாரிட்டியை கொடுக்கும்"
"இன்ட்காம் ஏற்கனவே ரொம்ப பாப்புலரா தான் இருக்கு"
"விடு கமலி"
"என்னோட தேங்க்ஸை அக்செப்ட் பண்ணிக்கோங்க"
"நீ ரொம்ப ஃபார்மலா இருக்க வேண்டிய அவசியமில்ல"
"அப்படின்னா உங்களுக்கு நான் பதிலுக்கு என்ன கொடுக்கிறது?"
அமைதியானான் ஆதித்யா.
"சொல்லுங்க ஆதிஜி"
"நீ தான் உன்னையே எனக்கு கொடுத்திருக்கியே..."
"ஆமாம் ஆதிஜி. நான் உங்களுடையவள்... நீங்க என்னுடையவர். ஆனாலும் நீங்க எனக்கு நிறைய செய்றீங்க"
*நான் உங்களுடையவள்... நீங்க என்னுடையவர்* என்ற அவள் வார்த்தையை கேட்டு ஆதித்யா புன்னகை பூத்தான்.
"ஆமாம், நீ என்னுடையவள்... நான் உன்னுடையவன்... அதனால தான், உனக்கு வேண்டியதை செஞ்சு உன்னை சந்தோஷப்படுத்த நினைக்கிறேன்"
"அதே மாதிரி தான், உங்களுக்கு பிடிச்சதை நானும் செஞ்சு உங்களை சந்தோஷப்படுத்த நினைக்கிறேன்"
"நீ எது செஞ்சாலும் நான் சந்தோஷப்படுவேன்"
"ஆனா, உங்களுக்கு ரொம்ப பிடிச்சதுன்னு ஏதாவது இருக்கும்ல்ல?"
"ஆமாம்... இருக்கு..."
"என்ன அது?"
"நீயே கெஸ் பண்ணிடலாம்"
"ஒரு க்ளூ குடுங்களேன்"
"நமக்கு யாரை ரொம்ப பிடிக்குதோ, அவங்களுக்காக தான் நம்ம எல்லாத்தையும் செய்ய விரும்புவோம்"
"அதைத் தான் நான் கேட்கிறேன்... அது என்ன..." என்று முடிக்காமல் நின்றாள், அவன் கூற வருவது என்ன என்பது புரிந்து விட்டதால்.
அவள் புரிந்து கொண்டுவிட்டதை புரிந்து கொண்ட ஆதித்யா, புன்னகைத்தான்.
கமலியின் நாக்கு அவள் வாயில் ஒட்டிக்கொண்டது. அவளால் வாயை கூட திறக்க முடியவில்லை. வழக்கம் போல அவளது பாவப்பட்ட இதயம் எகிற துவங்கியது. தன் நெஞ்சை கையால் அழுத்திப் பிடித்துக் கொண்டாள். அவள் வாயிலிருந்து ஒன்றும் வரவில்லை... காற்று தான் வந்தது.
"ஆதி...ஜி..."
"ரிலாக்ஸா இரு, கமலி. உன் இதயத்தை தொட்டு அழுத்தி அதை கஷ்டப்படுத்தாதே "
கமலியின் விழிகள் அகல விரிந்தது. அவள் இங்கு என்ன செய்கிறாள் என்பது அவனுக்கு எப்படி தெரியும்?
"நான்... உங்ககிட்ட அப்புறமா பேசறேன்" என்று அழைப்பை துண்டித்தாள் கமலி.
தனது கைப்பேசியை நெற்றியில் தட்டியபடி சிரித்தான் ஆதித்யா. நகத்தை கடித்தபடி அமர்ந்திருந்தாள் கமலி.
*நமக்கு யாரை ரொம்ப பிடிக்குதோ, அவங்களுக்காக தான் நம்ம எல்லாத்தையும் செய்ய விரும்புவோம்* என்ற ஆதித்யாவின் வார்த்தைகளை அவள் எண்ணிப் பார்த்தாள். *என்னை ரொம்ப பிடிக்குமா?* உதடு கடித்து சிரித்தாள் கமலி.
அப்போது அங்கு வந்த செல்வி, அவளிடம் ஏதோ கூறுவதற்காக அவள் தோளைத் தட்டினார். அவரைப் பார்த்தவுடன், சந்தோஷமாய் கட்டி அணைத்து, அவர் கண்ணத்தில் முத்தமிட்டாள் கமலி. அது செல்வியை குழப்பி விட்டது என்று கூற வேண்டியதில்லை. திடீரென்று அவளுக்கு என்னவானது?
"பைத்தியக்காரி... யாரு வந்திருக்கான்னு போய் பாரு" என்றார்.
தன் அறையிலிருந்து வெளியே ஓடிவந்த கமலி, ஆதித்யாவின் பாட்டி, சுந்தரியுடன் பேசிக்கொண்டிருந்ததை பார்த்தாள்.
"பாட்டி..." என்று அவரிடம் ஓடினாள்.
அவளைப் பார்த்து புன்னகைத்தார் பாட்டி.
"எப்படி இருக்கீங்க பாட்டி?"
"நல்லா இருக்கேன். சத் சங்கத்துக்கு கிளம்பினேன். போற வழியில அப்படியே உன்னையும் பாத்துட்டு போகலாம்னு வந்தேன்"
"சத் சங்கத்துக்கு போறீங்களா? இன்னைக்கு என்ன டாபிக்?"
"இராமாயணம்... கணவனும் மனைவியும் எப்படி இருக்கணும்னு டாபிக்..."
"நெஜமாவா? அப்படின்னா உங்க கூட நானும் வரட்டுமா?" என்றாள் ஆர்வமாக.
அதைக்கேட்ட பாட்டிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. மூன்று நாளாய் கமலியை பார்க்காததால், அவளைப் பார்த்துவிட்டு செல்லலாம் என்று வந்தவருக்கு, அவள் உடன் வருவதாக கூறினால் கசக்குமா என்ன? அது தான் கமலி... நவ நாகரிகத்தை நாடும் இந்த காலத்து பிள்ளைகளிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவள்.
"தாராளமா வா, கமலி"
"அம்மா, அத்தை, நீங்களும் எங்க கூட வாங்களேன். நீங்க வீட்ல இருந்து என்ன செய்யப் போறீங்க?" என்றாள் கமலி.
சரி என்று தலையசைத்தார் செல்வி. அனைவரும் கிளம்பிச் சென்றார்கள். அது ராமன், சீதையின் அன்னியோன்னியத்தை பற்றி கூறிய சத்சங்கம். அதை கவனமாக கேட்டுக் கொண்டிருந்தாள் கமலி.
"மிகப்பெரிய பேரரசின் இளவரசியாக வளர்ந்தாலும் கூட, ராமன் காட்டுக்கு சென்ற போது, அனைத்து சுகபோகங்களையும் உதறித் தள்ளிவிட்டு, சீதையும் அவருடன் சென்றார். தன் கணவனுடன் சேர்ந்து அனைத்து கஷ்டங்களையும் அனுபவித்தார். ஒரு நல்ல மனைவியின் கடமை, எக்காலத்திலும் தன் கணவனைப் பிரியாமல் இருப்பதே. *ராமன் இருக்கும் இடம் தான் சீதைக்கு அயோத்தி* என்பதே சீதையின் தாரக மந்திரம்." என்று கூறி சத்சங்கம் நிறைவு பெற்றது.
பெரியவர்கள் அதை மிகவும் விரும்பி கேட்டார்கள். ஆனால், நமது கமலியோ அதை தீவிரமாய் ஆராய்ந்து கொண்டிருந்தாள். அவள் தன்னை சீதையுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் தான், தன் கணவனை தனியாய் விட்டுவிட்டு, அம்மாவுடன் சந்தோஷமாய் இருக்க புகுந்தகம் வந்துவிட்டாளே... தான் செய்தது சரியா என்பது தான் அவள் மனதில் எழுந்த கேள்வி.
கமலியையும் மற்றவரையும் அவர்கள் வீட்டில் இறக்கிவிட்டு, அமைதியகம் திரும்பினார் பாட்டி திருப்தியுடனும், சந்தோஷத்துடனும்.
அமைதியகம்
இரவு உணவை முடித்து விட்டு வழக்கம் போல அனைவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். கமலியும், அவளுடைய அம்மா, அத்தையும், பாட்டியுடன் சத்சங்கம் சென்றார்கள் என்பதை கேட்டு அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். முழுவதும் சோர்வடைந்த நிலையில் வீடு திரும்பிய ஆதித்யா, அதைக் கேட்டு ஆத்திரம் அடைந்தான்.
இவர்கள் மனதில் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? கமலிக்கு மாறுதல் தேவை என்று கூறி அவளை அவளது அம்மா வீட்டிற்கு அனுப்பிவிட்டு, ஒருவர் மாற்றி ஒருவராக சென்று, அவளுடன் காலம் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். இவன் ஒருவன் தான், இங்கு தனியாக அல்லாடிக்கொண்டு இருக்கிறான். எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, மறுநாள் மாலை கமலியை சென்று சந்திப்பது என்று தீர்மானித்தான் ஆதித்யா.
.......
தொலைக்காட்சியில் ஏதோ ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் கமலியின் மனம், சத்சங்கத்தில் கேட்டதை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது. அது, அவளை தனது கணவனிடம் திரும்பி செல்வதே சரி என்ற முடிவுக்கு கொண்டு வந்தது.
திடீரென்று அவளது இதயம் வேகமாக துடிக்க தொடங்கியது, அவள் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த அந்த திரைப்படத்தில் காதலர்களின் நெருக்கமான காட்சியை கண்ட போது. மேலும் அவளுக்கு பதட்டத்தை கூட்டியது என்னவென்றால், அந்த காதலர்கள், திருமணம் ஆகாதவர்கள். தொலைக்காட்சிப் பெட்டியை அனைத்துவிட்டு, தனது அறைக்கு ஓடிச் சென்று, இழுத்து போர்த்திக் கொண்டு படுத்துக் கொண்டாள் கமலி.
திடீரென்று ஒலித்த கைப்பேசி ஒலியைக் கேட்டு திடுக்கிட்டாள். அந்த அழைப்பு அவளது தோழி ஜானகியிடம் இருந்து வந்தது. சந்தோஷமாய் அதை ஏற்றாள் கமலி.
"எப்படி இருக்க ஜானு? உன்னை நான் ரொம்ப மிஸ் பண்றேன்..."
"பல்லை உடைச்சிடுவேன்... புளுகு மூட்டை..."
"ஏன் ஜானு?"
"கல்யாணம் முடிஞ்சு போனதோட, ஒரு தடவை தான் எனக்கு நீ ஃபோன் பண்ண. அதுக்கு அப்புறம் எனக்கு ஃபோன் பண்ணி பேசணும்னு உனக்கு தோணுச்சா? இல்ல, நான் ஒரு ஃபிரண்ட் இருக்கேன்னு ஞாபகமாவுது வந்துதா?"
அமைதியாகிப் போனாள் கமலி. தனது படிப்பு, ஆங்கில வகுப்புகள் என்று நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்ததில் அவளுக்கு ஜானகியிடம் பேச நேரமே கிடைக்கவில்லை.
"இருக்கியா, இல்லையா...?"
"சாரி ஜானு..."
"பரவாயில்ல விடு... எனக்கு தெரியும், உன்னோட அழகான புருஷனை பார்த்து, நீ ரசிச்சிகிட்டு இருந்திருப்ப"
"என் புருஷனோட அழகை பத்தி எல்லாம் நீ பேசாத..."
"வாடி ராசாத்தி... நான் அவரை கலயாணம் பணிக்க மாட்டேன், நீயே அவரை கல்யாணம் பண்ணிக்கோன்னு ஒருத்தி என்கிட்ட சொன்னா... அந்த ரோஷக்காரி எங்க?"
"அப்போ அவர் எவ்வளவு நல்லவர்னு எனக்கு தெரியாது"
"இப்போ உனக்கு தெரிஞ்சிடுச்சா?"
"ம்ம்ம்"
"நான் தான் சொன்னேனே... நீ உன் புருஷன் பின்னாடி பித்துப் பிடிச்சி சுத்த போறன்னு..."
"சுத்துனா என்ன? அவர் என் புருஷன். ஆதிஜியே சொல்லிட்டாரு, அவர் என்னுடையவர்னு..."
"அந்த அளவுக்கு போயாச்சா...? எங்க உன்னோட ஆதிஜி?"
"அவர் என் கூட இல்ல. நான் லீவுக்காக அம்மா வீட்டுக்கு வந்திருக்கேன்"
"என்ன செஞ்சுகிட்டு இருக்க?"
சற்று முன் பார்த்த படம் அவள் நினைவுக்கு வந்தது.
"படம் பார்த்துக்கிட்டு இருந்தேன்" என்றாள் ரகசியமாக
"அதுல ரகசியமா சொல்றதுக்கு என்ன இருக்கு?"
"அந்த படத்தில் ஹீரோவும், ஹீரோயினும் பேட் டச் பண்ணிக்கிட்டாங்க"
அதைக் கேட்டு அதிர்ந்தாள் ஜானகி.
"கமலி, இன்னும் நீ மாறவே இல்லையா?"
"அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் கூட ஆகாதவங்க தெரியுமா?"
"உனக்கு தான் கல்யாணம் ஆயிருச்சே, நீ உன் புருஷனை பேட் டச் பண்ணிட்டியா?"
"என்னோட ஆதிஜி என்னை தொட்டதே இல்ல. அவரு ரொம்ப நல்ல புருஷன் தெரியுமா?"
"நீ நல்ல மனைவியா, கமலி? ஒரு மனைவியா உன்னுடைய கடமை எல்லாம் நீ செய்றியா? உன் புருஷன் சொல்றத எல்லாம் கேட்கிறேன்னு சொல்லாத..."
"நான் செய்றேனே..."
"அவரை உன்னை தொட விட்டியா?"
"அவர் என்னை தொடவே முயற்சி பண்ணல"
"அதுக்காக, அவருக்கு உன்னை தொட விருப்பமில்லைன்னு அர்த்தமில்ல. உன்னை சங்கடப்படுத்த வேண்டாம்னு அவர் நினைச்சிருக்கலாம்."
"இல்ல ஜானு, ஆதிஜி என்னை தொட விருப்பம் காட்டவே இல்ல..."
"அதுக்காக அவர் விரும்பலன்னு அர்த்தம் இல்ல. நீ அவருக்கு சந்தர்ப்பம் குடுத்தியா? இதைப் பத்தி நீ எப்பவாவது அவர்கிட்ட கேட்டியா?"
"எனக்கு அவரைப் பத்தி தெரியும். அவர் என்னை ரொம்ப காதலிக்கிறார்"
"நீ நினைக்கறது தப்பு கமலி. அவர் உன்னை ரொம்ப காதலிக்கிறாருன்னா, உன்னை தொடணும்னு அவர் மனசுல நிச்சயம் ஆசை இருக்கும்"
அமைதியாய் போனாள் கமலி. அதே நேரம் அவளுக்கு பதட்டமாகவும் இருந்தது.
"குழந்தைத்தனமா இருக்காத கமலி. யாருக்கும் கிடைக்காத நல்ல புருஷன் உனக்கு கிடைச்சிருக்காரு. உனக்கு கிடைச்சிருக்குற அருமையான வாழ்க்கையைக் கெடுத்துக்காதே. எதார்த்தத்தை புரிஞ்சுக்கோ. நீ உன் ஆதிஜி மேல வச்சிருக்கிற அன்பு உண்மைன்னா நான் சொல்றதை நீ புரிஞ்சுக்கவ."
"ஆதிஜி என்னை பேட் டச் பண்ண விரும்புறார்ன்னு என்னால நம்ப முடியல"
"நேரடியாக கேட்கிறேன், உனக்கு உன் புருஷன் கூட இருக்க அருவருப்பா இருக்கா?"
"இல்ல, நிச்சயமா இல்ல... எனக்கு எப்பவும் அவர் கூட இருக்கணும்னு தான் தோணுது..."
நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் ஜானகி.
"ரெண்டு பேருக்கும் பிடிக்கும் போது, அதுல எதுவும் *பேட்* இல்ல. ஒரு வேலை பண்ணு..."
"என்ன?"
"உன்னுடைய புருஷனை கவனிச்சு பாரு. அவர் என்னவெல்லாம் செய்றார்னு கவனி. இப்போ இல்லனா கூட, இன்னும் கொஞ்ச நாள்ல நீ நிச்சயமா தெரிஞ்சுக்குவ"
"ம்ம்ம்"
"உன்னையும் உன் ஆதிஜியையும் பாத்துக்கோ"
"சரி "
ஆதித்யாவை பற்றி யோசிக்கத் துவங்கினாள் கமலி. ஜானகி கூறுவதெல்லாம் உண்மையாக இருக்குமோ? ஆதிஜி அவளை தொட வேண்டுமென்று விரும்புவாரா? என்று எண்ணினாள் கமலி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top