14

அடுத்த நாள் காலை அழகாக விடிய அடுத்தடுத்து நடந்த அமானுஷ்ய சம்பவங்களால் பீதி அடைந்திருந்த அஜய் இன்னைக்கு என்ன நடக்கப்போகுதோ என்று புலற்பியபடி வெளியில் வர ஆதேஷோ coolaai sofaavil கால் மேல் கால் போட்டு காபீ குடித்துக்கொண்டிருந்தான் .

அவன் அருகில் சென்று அமர்ந்தவன் "அது எப்டிடா இப்படி casuality maintain பணம் எனக்கும் கத்துக்குடேன்"என்க

ஆதேகஷோ சிரித்தான் .

அஜயோ "ஹ்ம்ம் என்னத்த கேட்டாலும் சிரிச்சே மழுப்பிடு என்றவன் சுத்தி முத்தி பார்த்துவிட்டு "சரி ஆதிராவ எப்போ காட்டுக்கு கூட்டிட்டு போற ideaல இருக்க எத்தனை நாளைக்கு தான் அவள்ட இருந்து மறைக்கிறது "என்க

ஆதேஷோ சிரித்தவன் "நா கூட்டிட்டு போக வேண்டிய அவசியமே இல்ல அவளே வந்து கெளம்புங்கனு சொல்லுவா பாரு "என்க

அஜயோ நீ என்ன லூசா என்பதை போல் அவனை பார்த்தவன் "நீ லூசா இல்ல லூசு மாறி நடிக்கிறியா உனக்கு மட்டும் தெரிஞ்ச இடத்துக்கு அவ எப்பிடிடா போலாம்னு சொல்லுவா ?"என்க

அவனோ சிரித்தவன் ஆதிரா அறைக்கதவு திறப்பதை கண்ணால் காட்டிவிட்டு "பொறுத்திருந்து பார்" என்றான் .

அங்கே படிக்கட்டில் பின்னே ஒரு backpackகுடன் jeanum shirtum போட்டுக்கொண்டு high ponyil இறங்கினாள் ஆதிரா .கீழே வந்தவள் பொதுவாய் "எல்லாரும் போய் கிளம்புங்க "என்க

அப்பொழுதே குளித்துவிட்டு வந்த வேதித்யா "என்னடி காலங்காத்தால எங்க கிளம்ப சொல்ற? "என்க

ஆதிராவோ அவள் புறம் திரும்பியவள் "அந்த அருவிக்கரைல தான எல்லாப் பிரச்சனையும் ஆரம்பிக்குது. அந்த அருவிக்கரைக்கு தான் போக போறோம்"என்க

அஜயோ ஆதேஷை பார்க்க ஆதேஷோ சொன்னேன்ல என்பதை போல் பார்த்தான் அஜய் "ஆதிமா அதான் அவ்ளோ பிரச்னை இருக்குனு சொல்றாங்கள்ல அங்க கண்டிப்பா போகனுமாடா "என்க

ஆதிராவோ "கண்டிப்பா போகனும் அண்ணா .இப்போ வர்றியா இல்ல நா கெளம்பவா ?"என்க மற்ற மூவரும் கப் சிப்பென்று போய் தயாராகி வந்துவிட்டனர் .அஜய் அவனது ஜீப்பை எடுக்க நால்வரும் அந்த அடர்ந்த அமானுஷயங்கள் நிறைந்த காட்டை நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர் .

வடக்கு திசையில் நேராய் சென்றால் காட்டை அடையலாம் என்று அந்த வீட்டில் வேலைக்கு இருந்த அம்மா கூற வடக்கு திசையில் இவர்களது ஜீப்பும் பயணித்தது .அரை மணி நேரத்தில் அந்த ஜீப் காட்டுப்பகுதியை அடைய சற்று நேரத்திற்கெல்லாம் நின்று போனது அந்த ஜீப்.

முன்னிருக்கையில் அமர்ந்திருந்த அஜய் ஜீப்பை ஒட்டிக்கொண்டிருந்த ஆதேஷிடம் திரும்பியவன் "என்னாச்சுடா ?"என்க

அவனோ "தெரியலடா கீழ இறங்கி தான் பாக்கணும் என்று இறங்கி ஜீப்பின் முன்பக்கத்தை திறக்க உள்ளிருந்து புகையாய் வந்தது .

அதை பார்த்த அஜய் பதறிப்போய் "என்னதிது இப்டி புகையா வருது" என்று செக் செய்து பார்க்க என்ஜின் failure ஆகி இருந்தது .

அதை பார்த்து வேதித்யா அஜயை திட்ட துவங்கினால் "அட அறிவுகெட்டவனே முதல்லயே ஜீப் கண்டிஷன பாத்து எடுத்துட்டு வரமாட்டியா ?"என்று அவனை கடிந்து கொள்ள

அஜயோ "ஏய் வாங்கியே மூணு மாசம் தான்டி ஆவுது. Perfect கண்டிஷன்ல இருந்துச்சு. இப்டி failure ஆக வாய்ப்பே இல்ல "என்று கூற ஆதேஷின் கண்களோ அவர்கள் நின்றுகொண்டிருந்த காட்டுப்பகுதியை நோட்டம் விட்டது .

சுற்றி எங்கிலும் கொடிகளாலும், ஓங்கி வளர்ந்திருந்த மரங்களாலும் அந்த காலை வேளையிலும் சற்று கருமை நிறம் பூசி இருந்த அக்காட்டில் பறவைகளின் சத்தத்துடன் கூடிய மற்ற விலங்குகளின் சத்தங்களும் சேர்ந்து ஒரு வித பயத்தை ஏற்படுத்த சலனமின்றி அமைதியாய் அந்த நொடி அவர்கள் உரையாடல்களை தவிர்த்து எந்த சத்தமும் இல்லாதிருக்க ஆபத்தேதும் இல்லை என்று ஓர் பெருமூச்சுடன் திரும்பிய ஆதேஷ் ஆதிராவின் பின்னே பார்த்தவனின் கண்கள் அகண்டு விரிய அவன் "ஆரா" என்று கத்திய கத்தலில் அஜயும் வேதித்யாவும் அவள் புறம் திரும்ப அங்கே அவர்கள் கண்ட காட்சியில் பனிச்சிற்ப்பமாய் உறைந்தனர் .

ஆதிராவின் தலைக்கு பின்னே வாயிலிருந்து ஒழுகிடும் எச்சிலுடன் அவள் மேல் பாய தருணம் பார்த்து காத்துக்கொண்டிருந்தன இரு ஓநாய்கள்.

ஆதேஷ் ஆதிராவை நோக்கி அடியெடுத்து வைக்கப்போகும் நேரம் அவள் அவனிடம் கண்களாலேயே அங்கேயே நில் என்பதை போல் சைகை செய்ய அவன் அங்கேயே நின்றான் .அந்த இரண்டு ஓநாய்களும் இரை கிடைத்த களிப்பில் அவளை கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்க அவை அவள் மேல் இரு திசையிலிருந்தும் பாயப்போன தருணம் சட்டென்று கீழே குனிந்தவள் அந்த ஜீப்பிலிருந்து ஒரே தாவில் கீழே இறங்க அவை தலைகள் இரண்டும் மோதிக்கொள்ள ஏமாந்த கோபத்தோடு மீண்டும் அவளை முறைத்தது .

அவை அவளை நெருங்கிக்கொண்டே ஊளை இட அவை ஊளை இடுவதை பார்த்து பதறிய அஜய் " ஓநாய் ஊளையிட்டா அந்த இடத்துல கொஞ்ச நேரத்துல 50 60 ஓநாய் கூடிரும் ஒடுங்க "என்று ஆதேஷிடம் கூறியவன் வேதித்யாவை இழுத்துக்கொண்டு ஓட ஆதேஷோ ஆதிராவின் கையை பற்றிக்கொண்டு அஜயை முந்திக்கொண்டு ஓட ஆரம்பிக்க ஆதிராவிற்கோ ஓட ஓட மூளைக்குள் பல்வேறு தெளிவில்லாத நிகழ்வுகள் போட்டிபோட்டுக்கொண்டு தாக்க கால்கள் தொய்ய அவன் இழுத்த இழுப்பிற்கு சிலை போல் சென்றாள்.

அவர்கள் ஓடிக்கொண்டே இருக்க அந்த ஓநாய்கள் துரத்துவதை விட்ட பாடாய் இல்லை .அஜய் மாட்டினால் இறப்பது நிச்சயம் என்ற பதட்டத்துடன் ஓட ஆதேஷோ முகத்தில் ஏதோ ஒரு விதமான நினைத்ததை முடித்துவிட்ட பாவனையுடன் ஓடிக்கொண்டிருந்தான் .

அதை கவனித்த அஜய் "ஆஹா இந்த பயபுள்ள இப்போ என்ன பண்ண போகுதோ "என்று பின்னே பார்க்க அந்த ஓநாய்கள் இன்னுமே அவர்களை துரத்திக்கொண்டே தான் இருந்தன இதுங்க வேற என்று நினைத்தவன் முன்னே பார்க்க அடுத்த பத்து அடியிலோ அசுர வேகத்தில் நிரம்பி வழிந்த நீருடன் ஆழிப் பிரவாகத்தை ஒத்த ஆறொன்று ஓடிக்கொண்டிருந்தது .

அஜய் "ஆதேஷ் முன்னாடி ஆறு "என்க

ஆதேஷோ "தெரியும் குதி "என்றுவிட்டு ஆற்றில் ஆதிராவுடன் குதித்துவிட அஜய் சற்று தயங்கி நிற்க அவனுடன் வந்த வேதித்யாவோ அவனையும் இழுத்து ஆற்றுக்குள் குதித்துவிட்டாள்.ஆற்றின் வேகம் அசுரத்தனமாக மாற அந்த ஆற்றின் திசையிலேயே அடித்துச்செல்லப்பட்டனர் நால்வரும்.

அவர்கள் ஆற்றில் குதித்துவிட இதுவரை அவர்களை துரத்திக்கொண்டு வந்த ஓநாய் கூட்டம் நின்று அந்த ஆற்றையே வெறித்தவை சட்டென்று கரும்புகை உருவமாய் உருமாறி அவர்கள் சென்ற திசையையே வெறிக்க ஆதிராவை தன் கைஅணைப்பில் வைத்துக்கொண்டே ஆற்றின் வேகத்தோடு அதன் திசையில் அடித்துச்செல்லப்பட்ட ஆதேஷ் அவற்றை நோக்கி ஓர் விஷமச்சிரிப்பை சிந்த ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்திருந்த சுயம்பு லிங்கத்தின் நெற்றிக்கண் ஒரு முறை மின்னி மறைந்தது . 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top