அத்தியாயம் - 9 💫


"யார் அது? " பயத்தில் போர்வையை இழுத்துப் பிடித்துக் கொண்டே தயங்கி தயங்கிக் கேட்டாள், ரதி.

"அம்மு நான் தான் பட்டு வந்திருக்கேன்." கொஞ்சலாகப் பேசியபடி " நீ இன்னும் தூங்களையா , நானும் உங்க கூடையேத் தூங்குறேன் " என்று ஆதவணும் அவர்களுடன் சேர்த்துத் தூங்குவதற்காக கையில் தலையணை போர்வை என அனைத்தையும் எடுத்துக் கொண்டு வந்தான்.

"அதுக்குன்னு இப்படியா நடுராத்திரி கதவ திறந்து வந்து நிப்ப ? லைட் போட வேண்டியதுத் தான" என்று எரிச்சலில் கத்தினாள் ரதி.

"நீ தூங்கிருபணு நினைச்சேன். நான் வந்தது உனக்கு பிடிக்கலை. அதானே, நான் என் ரூம்க்கு போறேன் " என்று கோவமாகச் சொல்லி விட்டு திரும்பினான்.

"நீ தான் மனுஷன் என் கூட படுக்க மாட்டானு சொன்ன " என்று மெத்தைக்கு அருகில் கைக்கு எட்டும் தூரம் இருந்த லைட் ஸ்விட்சையைப் போட்டாள், ரதி.

"அது என்னமோ நிசம் தான், ஆனால் கதைப் பேசிக்கிட்டுத் தூங்கி ரொம்ப நாள் ஆச்சுன்னு வந்தேன் , தனியா படுத்துப் போர் அடிக்குது " என கதவுக்கு அருகிலையே நின்றுக் கொண்டு கூறினான்.

"ஆமால, வா ரொம்ப நாள் ஆச்சு " என கையைக் காட்டி செய்கைச் செய்தாள்.

"போ.. நீ என் மேல கோவமா இருக்க, நான் போறேன் " என்று சொல்லி அங்கையே தான் நின்றுக் கொண்டு இருந்தான், ஆதவன்.

"கோவம் லாம் இல்ல ஒழுங்கா வாடா "

" நீ சிரிச்சு கிட்டேச் சொல்லு, அப்படியான தான் வருவேன் "

"சரி, வாடா ஈஈஈ "

"இல்ல, நீ கொஞ்சி கூப்பிடல "

"டேய் படுத்தாத வா"

"ரெண்டு பேரும் நிம்மதியா என்ன தூங்க கூட விட மாட்டீங்களா ? ரெண்டு முதுகுல வச்சா தான் தூங்கிவீங்களா? " சொல்லிக் கொண்டே புரண்டுப் படுத்தாள், தேன்மொழி.

"சரி நான் போறேன்"

இந்த நேரத்துல தான் இவனுக்கு பாசம் பொங்கிட்டு வரும் என்று மனதில் எண்ணிக் கொண்டு
"பட்டு குட்டி இங்க வாங்க அக்கா கூப்டுறேன் செல்லம்ல" என மெதுவாக ஆதவனை அழைத்தாள் ரதி.

ஆதவனும் அமைதியாக வந்து மெத்தையில் படுத்துக் கொண்டான். இருவரும் பல நாள் கழித்துக் கதை கதைத்துக் கொண்டே உறங்கிப் போனார்கள்.

ரதிக்கு ஆதவன் என்றால் பாசம் மிகவும் அதிகம். அதும் ஆதவன் பிறக்கும் முன்னதாகவே ரதி, அவளுக்கு தம்பி தான் வேண்டும் என்று அழுது ஏங்கியவள். அவள் ஏக்க குரல் கடவுளுக்கு கேட்டது போல் ஆதவன் நான்கு ஆண்டுகள் கழித்துப் பிறந்தான். அவன் நிறைய நேரம் அழுதால் அவனுக்கு மூச்சு நிற்கும் குறைபாடு இருந்தது. இரண்டு முறை அப்படித் தான் நிகழ்ந்தது, ஏதும் தெரியாத சிறு வயதிலியே ரதி அவளுக்கு மூச்சு நின்றாள் கூட பராயில்லை, தம்பி எனக்கு வேண்டும் என்று கடவுளிடம் மன்றாடுவாள்.

பிறந்ததில் இருந்தும் பள்ளி வரை அவனை கவனமாகப் பார்த்துக் கொள்வாள், அப்படித் தான் ஆதவன் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது அவன் வகுப்பறையில் யாரோ ஒருவன் வேண்டும் என்று தள்ளி விட்டதால், அன்றே லஞ்ச் பிரேகில் சென்று, அந்த பையனின் தலையை உடைத்து விட்டு வந்தாள் ரதி. அது பெரிய குற்றச்சாட்டாக மாறிப் போய், ஸ்கூல் மாற்றம் செய்யும் நிலமையில் முடிந்தது. இப்போது வரை அப்படிதான், அவளைத் தாண்டி தான் ஆதவனிடம் யாராக இருந்தாலும் செல்ல முடியும். பார்க்க அமைதியாக தெரியும் இவள், அவளுக்கு நெருங்கிய உறவுகளுக்கு ஏதாவது நிகழ்ந்தால் ருத்ரகாளியக மாறிடுவாள்.

அடுத்த நாள் காலை சூரியன் உதிக்க, அவனைப் பார்த்து, இலையின் மேல் இருந்த பனித்துளிகள் எல்லாம் நானம் கொண்டு உருகிப் போனது.

ரதியின் வீடு ஒரு குட்டி அரண்மனை என்றே சொல்லலாம். அவ்வீடைச் சுற்றி தேன்மொழியால் நன்கு பராமரிக்கப்பட்டு வழந்து வரும் செடிகள் , காய்கறிக் கொடிகள், பழங்கள் நிறைந்த மரக் கன்றுகள் மற்றும் கண் கவரும் வண்ணப் பூக்கள் நிறைந்து சிரித்துக் குலுங்கும் அழகிய தோட்டம் அது. அத்தோடத்தில் ஒரு ஓரத்தில் அழகிய மூங்கில் ஊஞ்சல் அவ்வீட்டில் வருபவரைக் கண் அகல விடாது.

புல்லட், ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் , இரண்டு கார்கள் வரிசையில் எப்போதும் பளிச்சென்று நின்றுக் கொண்டு இருக்கும். ரதியின் அறையில் இருக்கும் பால்கனி வழியாக இவ்வனைத்தையும் பார்த்தால் பறவைகள் உலாவந்துக் கொண்டு இருக்கும். அப்பறவைகளுக்கும் தானியங்களும் , மண் குவளையில் தண்ணீரும் நிறைந்தே இருக்கும்.

கண்ணன் இல்லாததால் ரதி கார் எடுக்க ஆதவனை பள்ளியில் விட்டுட்டு கிளினிக் சென்றார்கள். முதல் நாள் இரவு தேன்மொழியிடம், இரண்டு நாள் காலேஜ்க்கு விடுப்பு விட்டு ஒரேடியாக திங்கட் கிழமையில் இருந்து காலேஜ் செல்லுமாருக் கண்ணன் கூறியதால், ரதியும் காலையிலேயே வகுப்பு ஆசிரியரிடம் அழைப்பில் லீவ் எடுப்பதற்கான காரணத்தைக் கூறி விட்டாள்.

சிவப்பு நிற காட்டன் குர்தாவும் வெள்ளை நிற பட்டியாலப் பேண்ட் , இவ்விரு நிறங்களும் கலந்த துப்பட்டாவை அணிந்திருந்தாள். அவளின் நீண்ட கேசத்தை பிரெஞ்ச் பின்னல் போட்டு , நன்கு தூங்கியதால் நேற்றை விட இன்று அவளின் மாநிற முகம் சற்றுப் பொலிவு பெற்றுப் பிரகாசமாக இருந்தது.

காரைப் பார்கிங்கில் நிறுத்திவிட்டு மாடிப் படி ஏரியவளுக்கு உள்ளுக்குள் நித்விக் அவளை இப்பிரச்சினையில் இருந்து மீட்டு எடுப்பான் என்ற நம்பிக்கை பிறந்தது. ராத்திரி நல்லத் தூக்கத்தின் விளைவாகக் கூட இருக்கலாம். யாரையும் அவ்வளவு எளிதில் ரதி நம்பமாட்டாள் அதனால் தான் என்னவோ தெரிய வில்லை அவளின் நட்பு வட்டாரம் மிகவும் குறுகியது.

பள்ளித் தோழி, பாரதி. பாரதியோட அண்ணன் தமிழ், ரதிக்கும் உடன் பிறவா அண்ணன். அவனின் மனைவி மதுமிதா. அவ்வளுவு தான் அவளின் நட்புப் பூக்கள். ஆனால், அவர்கள் அனைவரிடமும் இவள் இங்கு இப்படி pschyologists யிடம் கவுன்சிலிங் வருவதை மறைத்திருந்தாள்.

இவ்வாறு அவள் யாரையும் அவள் எல்லைக்குள் அவ்வளவு எளிதில் அனுமதிக்க மாட்டாள். நித்தவிக்கிடம் இப்படி பேசி பழகுவது அவளின் மனதிற்கு பிடித்தாலும் மூளை அது தவறு என்று கூறிக் கொண்டு இருந்தது. ரதி சொல்லும் அனைத்தையும் நித்விக் ஒருவன் மட்டும் கேட்பதால் அவனுடன் பேசிப் பழக ரதிக்கு அடிமனதில் பிடித்து போயிருந்தது.

ஆனால், அவனைப் பற்றி உண்மைத் தெரிந்தால், அவனிடம் அவள் பேசுவாளா என்று கூட தெரியவில்லை. காலம் தான் பதில் கூற வேண்டும்.

"அம்மு, பாரதி கிட்ட நீ பேசவே இல்லையா ? " என கிளினிக்கின் உள்ளே போடப் பட்டிருந்த சோஃபாவில் அமர்ந்தாள் தேன்மொழி.

"பேசிட்டேன், லோ பிபி அப்படினு சொல்லி முடிச்சிட்டேன், இங்க வரது எல்லாம் சொல்லலை. இனிக்கு மார்னிங் வரேன்னு சொன்னா, நான் தான் ஈவ்னிங் வானு சொல்லிட்டேன். இன்னிக்கு புராஜக்ட் ரிவ்யூ இருக்கு அவளுக்கு ஆள் தே பேஸ்ட் சொல்லி வச்சுடேன். " என கூறிக் கொண்டு தேன்மொழி அருகில் வந்து அமர்ந்தாள்.

"ஆமா சொல்லாத, உங்க அப்பாக்கு இங்க வரது சுத்தமா பிடிக்கல " என நேற்று கண்ணன் அவளிடம் கூறியதை ரதியிடம் கூறினாள், தேன்மொழி.

"ஏன்னாம், எனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சுனு யாரும் சொன்னாங்க லாக்கும் " தேன்மொழி பக்கம் தலையைச் சாய்த்துக் கேட்டாள், ரதி.

"ஏன் அம்மு நாங்க அப்படியா நினைப்போம், இந்த மாதிரி எல்லாம் பேசாத, உங்க அப்பாவுக்கு அவ்ளோ கோவம், டென்ஷன் வருது பொறுமையே இல்ல, நானே பேசாம அவருக்கும் கவுன்சிலிங் குடுதிர்லாம்னு இருக்கேன்" என ரதியைச் சமாதானப் படுத்தினாள் தேன்மொழி.

"இரு எங்க அப்பா கிட்ட உன்னை போட்டுக் குடுக்குரேன். ஆனால் எதுனாலத் தான் பிடிக்களையாம் ? அதச் சொல்லுமா " என்று கண்களை உருட்டினாள், ரதி.

"இது வேற விஷயம் உங்க அப்பா என்னன்னு சொல்ல மாடேங்குறாரு , நானும் எத்தனையோ வாட்டி கேட்டுட்டேன் " என எதையோ யோசித்துக் கொண்டே கூறினாள், தேன்மொழி.

"சரி விடுமா ரொம்ப யோசிக்காத, அப்பா சொன்னா ஏதாச்சும் காரணம் இருக்கும் " என வெளியில் சொல்லிக் கொண்டாலும், அவளின் மனதில் எழுந்த வருத்தம் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

"டாக்டர் தம்பி, உங்க ரெண்டு பேரையும் உள்ளே வர சொன்னார்" என்று அங்கு வேலைப் பார்த்துக் கொண்டு இருந்த சிவராம் தாத்தா இருவரிடமும் கூறினார்.

அவர்கள் உள்ளேச் செல்ல , அவர்களைப் பார்த்து மெல்லிய சிரிப்புடன் நாற்காலியில் உட்காரும் மாருக் கூறிவிட்டு கையில் இருந்த கோப்பையைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

"குட் மார்னிங் ரதி, ஹவ் யு பீல்? "என் மூக்குக் கண்ணாடியை ஒற்றை விரலில் சரி செய்துக் கொண்டே, நித்விக் அவளிடம் கேட்டான்.

"குட் மார்னிங் சார் , பீலிங் பெட்டர் டாக்டர் சார்" என்று அவனின் கண்களைப் பார்த்துக் கூறினாள்.

"நேத்து நைட் நல்லா தூங்குனீங்களா?" என்று ரதியின் பெயர் கொண்ட கோப்பையயில் ஏதோ எழுதியவாரேக் கேட்டான் நித்விக்.

"எஸ் சார், நீங்க சொன்ன மாதிரியே நேத்து அம்மாவுடன் தான் தூங்கினேன். எந்த டிஸ்டார்பன்ஸும் இல்லாமல் நிம்மதியா தூங்கினேன் " என அவள் தலையை ஆட்டிக் கூறினாள்.

"உங்க தூக்கம் தான் ரொம்ப முக்கியம் ரதி, நம்ம உடம்புக்கு ரெஸ்ட் இல்லாட்டி எப்படி அது அடுத்த நாள் வேலைச் செய்யும். கண்டிப்பா எட்டு மணி நேரத் தூக்கம் உடலுக்குத் தேவை" என அவன் கூறி முடித்தான்.

"கண்டிப்பா சார், இனி கரெக்ட்டா தூங்கிருவேன்" என்று தேன்மொழி யையும் பார்த்துக் கூறினாள்.

"இன்னிக்கு அதிக்கபட்ஷம் இரண்டு மணி நேரம் ஆகும் மேடம் " என்றுக் கூறினான்.

கண்ணனிடம் இருந்து அழைப்பு வர, கையில் கைப்பேசியோடு தேன்மொழி வெளியில் காத்துக் கொண்டு இருப்பதாகக் கூறிவிட்டுச் சென்றாள்.

"ஓகே ரதி, இப்போ சொல்லுங்க, நேத்து எதும் பிரச்சனை வந்ததா ? " என்று மீண்டும் உறுதி படுத்தும் வகையில் நித்விக் கேட்டான்.

"இல்ல சார், உண்மையாவே நல்லா தூங்கிட்டேன்" என்றாள். அவள் முகத் தெளுச்சியை நித்விக் கவனிக்காமல் இல்லை.

"சரி ரதி, உங்க பிளட் பிரஷர் பார்த்திட்டு Hypnotherapy டீரீட்மென்ட் ஆரம்பிக்கலாம். மனச ரொம்ப லைட்டா வச்சுக்கோங்க உங்களுக்கு ஏதாவது அனீசியா ஃபீல் பண்ணா, உடனே என்கிட்ட சொல்லலாம் , டோண்ட் ஸ்ட்ரெஸ் யூர்செல்ப் , உங்களை மீறி ஏதும் நடக்காது." என அவளின் பிளட் பிரஷர் மற்றும் ஹார்ட் பீட் போன்ற எண்ணிக்கை எண்களைக் கோப்பையில் எழுதினான், நித்விக்.

"சரி டாக்டர் சார் " என்றாள். நேற்று ஒருமையில் பேசிப் பழகியப்பின் இப்போது அவன் அவளை வாங்க போங்க என்று அழைத்து பேசிவது ரதிக்கு உள்ளுக்குள் சற்று ஏமாற்றமாக இருந்தது.

ரதி ஏதும் பேசாமல் அமைதியாக பதில் தந்து கொண்டு இருந்தது, நித்விக்கிற்கு வருத்தமாக இருந்தாலும். இனி ரதியிடம் மருத்துவராக மட்டுமே பேச வேண்டும் என்று, நேற்று அவன் ராத்திரி எடுத்த முடிவு இது. அவனின் தாத்தா ஷ்யாம் தான் திட்டம் தீட்டி இந்தப் பொண்ணை இங்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும் என்று அவனின் உள் மனம் கூறியதின் விளைவு தான் இவனின் மாற்றத்திற்கு காரணம்.

~அவளின் உலகம் தொடரும்!

Hi Guys,

I value each one's feedback, so let me know what you think!

Any guesses on what happened between Rathi and Nithvik??

Thanks for Reading,

With lots of love,
Lolita!💙

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top