பாகம் 21
கவி ரொம்ப மும்முரமாக யாருடனோ பேசிக்கொண்டிருந்ததும் நிர்வாகிகள் நடந்து கொண்ட விதங்களும் அவளுக்கு ஏதோ கண்ணை கட்டி காட்டில் விட்டாற்போல் இருந்தது. லதா ஏதோ தப்பு செய்து விட்டால் என்பது மட்டும் புரிந்தது. கவி போனை வைத்துவிட்டு இவளிடம் வந்தான். நிலா வா உன்ன நம்ப வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். அங்க போய் எல்லாம் பேசிக்கலாம். என்னடா எல்லாம் கொழப்பறீங்க எனக்கு ஒண்ணுமே புரியல. நீ வீட்டுக்கு வாப்பா எல்லாம் பேசிக்கலாம். ஏண்டா ஆபீஸ் போக வேண்டாமா காளம்பறேலேந்து உங்கூடவே சுத்திட்டு இருக்கேன் நான் ஆபீஸ் போறேன் நீ என்ன கொண்டுபோய் விட்டுட்டு. இல்லப்பா ஆபீஸ் இப்ப போக முடியாது. நிலவரம் கொஞ்சம் சரியில்ல. நீ வீட்டுக்கு வாயேன். இல்ல கவி என்னால வர முடியாது. சரி இரு என்று அண்ணனுக்கு போன் செய்தான். இந்தா அண்ணா பேசறேங்கறார். முறைத்தாள் நிலா. ஹலோ அண்ணா நிலா நீ கொஞ்சம் கவி கூட வீட்டுக்கு போடா நான் வந்து எல்லாம் பேசறேன். அண்ணா சொன்ன நல்லதுக்கு தான் இருக்கும்னு நம்புடா. சரி அண்ணா போறேன். போனை வைத்து விட்டாள். வந்து தொலைடா பக்கி என்றுவிட்டு அவனுடன் வண்டி ஏறச்சென்றாள். அவனும் சிரித்து விட்டு அவளை வீட்டிற்கு கூட்டிசென்றான். மதிய உணவு நேரம் வந்திருந்தது. அவளுக்கும் சேர்த்து சமைக்கப்பட்டு இருந்தது. அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. எல்லாம் பக்கா பிளான் போல. என்றாள் கவியிடம். இல்லம்மா அண்ணா காலம்பரையே சொல்லிட்டு தான் போனாங்க, நீ மதியம் சாப்பிட வருவான்னு. சாப்புடும்மா. என்ன அண்ணி சமைச்சுருக்கீங்க. முருங்கை சாம்பார், ரசம், உருளைக்கிழங்கு பொரியல், சௌ சௌ கூட்டு அப்பளம், பாயசம் அப்பறம் மோர் போதுமா தம்பி இல்ல வேற எதனாச்சும் பண்ணட்டா. என்ன அண்ணி இத்தனை பண்ணிருக்கீங்க. இன்னைக்கு உன்னோட நண்பர்களும் சாப்பிட வராங்க போல அண்ணா தான் சமைக்க சொன்னாரு. நீங்க ரெண்டு பெரும் மொதல்ல சாப்ட்ருங்க. அப்பறம் அவங்க வந்தா நிலா சாப்பிடாம போய்டுவா. அவனுங்க வம்பு அவளுக்கு தாங்காது. சரி அண்ணி நீங்க சொல்றதும் சரி தான். ஒட்டி எடுத்துருவானுங்க. எனக்கே கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். டேய் இன்னைக்கு அவனுங்கள என்ன பண்றேன் பாரு. என்ன எத்தனை நாள் வெச்சு செஞ்சானுங்க இன்னைக்கு இருக்கு. அண்ணி நீங்களும் ஹெல்ப் பண்றீங்க. என்றாள். இந்த 2 நாளில் கொஞ்சம் சாதாரணமாக மாறி இருந்தாள். கவிக்கு இது கொஞ்சம் நிம்மதியை கொடுத்தது. ஆனாலும் அவ்வப்போது ஒரு வலி இதயத்தில் இருந்தது. தான் காதலிக்கும் பெண் தனது காதலை நிராகரித்தாள், எல்லோருக்கும் இருக்கும் வலி தான். சாப்பிட உக்கார்ந்தாள். நிலாவிற்கு சாப்பாட்டிலும் இப்படித்தான் சாப்பிட வேண்டும் என்ற procedure உண்டு. அவளை வளர்த்த விதம் அப்படி. பருப்பு, சாம்பார், ரசம் மோர் என்று சாப்பிடுவாள். எல்லாவற்றிலும் கொறிப்பாள். அவள் மொத்த சாப்பாடே ஒரு ஆளின் முதல் பருப்பு சாதம் தான். பாயசத்தை ஒரு கப்பில் வாங்கிக்கொண்டு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். அச்சோ அண்ணி சாப்பிடவெச்சே சாகடிக்கறீங்க. எவ்ளோ சாப்பிடறது. அண்ணி ப்ளீஸ் கொஞ்சம் அவளை வாய மூட சொல்லுங்க அவ சாப்பிட்டதும் பேரு சாப்பாடுன்னு சொன்ன நான் அழுதிருவேன். என்றான் கிண்டலாக. அவள் எழுந்து வந்து அவனை அடிக்க ஆரம்பித்தாள். அதற்குள் அவனின் நண்பர்கள் படையும் அண்ணனும் வந்து சேர்ந்தார்கள்.ஆனால் யாரிடமும் எந்த துடுக்கு தனமும் இல்லை. எல்லோரிடமும் அமைதி. டேய் வாங்கடா. வந்து சாப்பிடுங்க டா. அண்ணி அவனுங்களுக்கும் இல்லை போடுங்க. சாப்பிடட்டும். நிலா நீ கொஞ்சம் உதவி பண்ணேன் அண்ணிக்கு. போடா அந்த பக்கிங்களுக்கு நான் சாப்பாடு போட மாட்டேன். ஹேய் இவனுங்களுக்கு சாப்பாடு போட சொல்லல அண்ணிக்கு ஹெல்ப் பண்ண சொன்னேன். சரி போறேன். ஆனாலும் யாரும் பேச வில்லை. எல்லோருக்கும் நிலா மீது கோவம். சரிடா எல்லாரும் போய் சாப்பிடுங்க. நாம அப்பறம் பேசலாம். என்றார் அண்ணன். சாப்பிட அமர்ந்தார்கள் அண்ணா நீங்களும் உக்காருங்க சாப்ட்ருங்க. சரிம்மா கை கால் அலம்பிட்டு வரேன் இல்லை போடு. எல்லோருக்கும் பரிமாறப்பட்டது. நிலா நீ மாடிக்கு கவியோட போம்மா அம்மா எனக்கு சாதம் போடுவாங்க. சரி அண்ணா. கவியிடம் ஏதோ கண் ஜாடை செய்தார். நிலா அவனுடன் ஊஞ்சல் ஆடும் ஆசையில் மேலே சென்று விட்டாள். நிலா பாயசம் கப் வெச்சுட்டு வந்துட்ட அண்ணி குடுத்தனுப்பினாங்க. இந்தா. தேங்க்ஸ் டா. சாப்பிட்டுக்கொண்டே அவனிடம் பேச ஆரம்பித்தாள். கவி உனக்கு என் மேல கோவம் வரலையா. எதுக்கு இப்போது இந்த கேள்வி என்பது போல் பார்த்தான் கவி.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top