❤️ அஆ 8 ❤️
மனதிலே மலர்வளையம் கொண்டு உன் கரம் சேர்ந்த மென்மையும் நான் தானே...
தினம் தினம் உன்னை நெருங்கி காதல் செய்யும் என்னை தள்ளி நிற்கும் மன்னவன் நீ தானே...
புரியாத புதிராய் உன் மீது காதல் கொண்டேன் எனதுயிரே...
அன்பே ஆருயிரே...❤❤
அன்று கௌதமின் திருமண நாள்...
'அவனோட மேரேஜ்க்கு நான் எப்படி போறது... அவன் வேற ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்டுறத என்னால பார்க்க முடியுமா??? அவன் வேற ஒருத்திக்குச் சொந்தமாகுவத என்னால தாங்கிக்க முடியுமா???அத்தம்மா என்னை வர சொல்லி ஸ்ரிக்டா ஆர்டர் போட்ருக்கங்க... நான் போலன அவங்க மனசு கஷடப்படும்... வேற வழி இல்ல.. போய்ட்டுதான் வருவோம்...' தன்னுள் குழம்பி தெளிந்தவளாய் பார்வதி கூறிப்பிட்டிருந்த திருமண மண்டபத்தை நோக்கி தன் ஸ்கூட்டியை விரட்டினாள்...
மண்டபத்தை நெருங்க நெருங்க அவள் இதய துடிப்பு அதிகரித்தது... ஏதோ பெரிய தவறு செய்ய போவது போல் மனம் நிலை கொள்ளாமல் அலைய தொடங்கியது...
'அடச்சி... இந்த துப்பு கொட்ட மனசு எவ்வளோ சொன்னாலும் கேட்க மாட்டுதே... உன் கிட்ட சொல்லிதான கூட்டிட்டு வந்தன்... அவன் இன்னிக்கு வேற ஒருத்திக்கு புருஷனாவ போறன்... அவனுக்கு உன்ன யாருனு கூட தெரியாது... ஓவரா கற்பன பண்ணி அவன் கிட்ட அடி வாங்கிக்காத...' மனதுக்குக் கடிவாளமிட்டவள் பிரமாண்டமாய் வீற்றிருந்த அந்த மண்டபத்திலுள் நுழைந்தாள்...
சுற்றிலும் தெரியாத முகங்களே குழுமியிருக்க சத்தமின்றி பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டவள் நடந்து கொண்டிருந்த கல்யாண சடங்குகளில் தன் கவனத்தை பதித்தாள்...
ஆறடி உயரத்தில் வசிகரமான முகத்தோடு வேட்டி சட்டையில் கம்பிரமாக இருந்தான் கௌதம்... அக்னி குண்டத்திலிருந்த வெளிப்பட்ட தீயின் ஜூவாலை அவன் முகத்திற்கு மேலும் தேஜசை கொடுத்தது...
என்னதான் மனதுக்கு கடிவாளமிட முயன்றாலும் அது நிஷாவின் பேச்சை கேளாமல் துள்ளி குதித்து அவனிடம் சரணடைந்தது... இமைக்காது அவனையே நோக்கினாள்... வினாடிகள் நிமிடங்களாகி கறைந்து போக நிஷா எந்தவித மாறுதலுமின்றி அவனின் மீதே தன் பார்வையை பதித்திருந்தாள்...
நிஷா கனவு லோகத்தில் சஞ்சரித்து கொண்டிருக்க அங்கு கௌதமின் கையில் விலங்கு மாட்டப்பட்டது...
நிஷா என்ன நடக்கிறது என உணரும் முன்னே அவன் அந்த சபையில் குற்றவாளியாக நிறுத்தப்பட்டான்...
அவன் முகத்திலிருந்த கடினத்தன்மை அவளை அச்சுறுத்தியது... பார்வதியை நோக்கி அவன் வீசிவிட்டு போன ஒற்றை பார்வையில் நிஷா சுக்கு நூறாய் உடைந்து நொருங்கினாள்...
உனக்கு நானிருக்கிறேன் கண்ணா என அணைத்து ஆறுதல் கூற அவளின் மனம் பறபறத்தது...
நிஷாவின் உடல் மட்டும்தான் அங்கிருந்தது... உயிர் கௌதமின் கைப்பற்றி அவனோடு போய்விட்டது...
அதன் பின் வந்த நாட்களில் நிஷா பல முறை கௌதமை சந்தித்து விட்டாள்... அவன் அறியா வண்ணம் தான்...
அவன் முகத்திலிருந்த சிரிப்பு தொலைந்து... நடையிலிருந்த துள்ளல் குறைந்து... இறும்பு மனிதனாய் மாறியிருந்தான்...
தர்ஷனாவின் தவறால் பெண்கள் மீது அவனுக்கு வெறுப்பு தோன்றியிருந்தது...
நிஷாவால் அவனை நெருங்கவும் முடியவில்லை விலகவும் முடியவில்லை...
கௌதம் வெளிநாட்டிற்குச் சென்ற பின் அவனைப் பற்றிய தகவல்களைப் பார்வதியிடமிருந்து தெரிந்து கொள்வாள்...
பார்வதியும் நாளாக நாளாக நிஷாவின் மாற்றத்தையும் அவளுக்கு கௌதம் மீது ஏற்பட்டிருக்கும் நேசத்தையும் உணர்ந்து கொள்ளதான் செய்தார்...
கௌதமைப் பற்றி கூறும் பொழுது அவள் கண்களில் தோன்றும் ஒளி நிஷாவின் மனதை அவருக்கு வெளிச்சமிட்டு காட்டியது...
இப்படியாக பார்வதியும் நிஷாவும் அவர்கள் நினைவல் மூழ்கிருக்க... விஜய் அங்கு கௌதமோடு வாதிட்டு கொண்டிருந்தான்..
"நீ யான்டா இப்படி பண்ற... அம்மா பாவம்டா... உன்ன எவ்வளோ ஆவலா எதிர்பார்த்தாங்க... அவங்க எப்படி இருக்காங்கனாவது கேட்ருக்கலாமே... அதவிட்டுட்டு ஒரு வார்த்த கூட பேசாமா வந்துட்ட... அவங்க மனசு ரொம்ப கஷ்டப்பட்டுருக்கும்... நீ எப்பதான் எல்லாத்தையும் புரிஞ்சிக்க போற... உனக்கு திமிரு டா... ஒடம்பு பூரா திமிரு... ஈகோ வெச்சிப்போய் அலையுற... சிக்காமலா போவ... அப்போ பார்த்துக்குறன்டா உன்ன...", விஜய் கோபத்தில் பொறிந்து தள்ள கௌதமிடமிருந்த பதிலாய் வந்தது என்னமோ மௌனம் மட்டுமே...
"எது கேட்டாலும் இப்படி கல்லூளிமங்கன் மாதிரியே இருடா... உன்னை பழைய கௌதமா நாங்க எப்போ பார்க்க போறோம்னு தான் தெரியல...", சலித்து கொண்டவனாய் விஜய் அந்த அறையை விட்டு வெளியேறினான்...
அந்த அறையில் தனித்து விடப்பட்ட கௌதம் சூன்யத்தையே வெறித்து கொண்டிருந்தான்... 'என்னால் மீண்டும் அவர்களோடு சிரித்து பேசி மகிழ முடியுமா... அந்த பாக்கியம் எனக்கிருக்கிறதா???',
கேள்விகள் பிறப்பது நம்மிடையே ஆனாலும் அதற்கான விடைகள் நம்மிடம் இல்லையே....
❤️💜💜💜💜💜💜💜💜💜💜💜❤️
இணையுமா இருதயம்???
❤️💜💜💜💜💜💜💜💜💜💜💜❤️
தொடருமா ஒரு காதல் பயணம்???
❤️💜💜💜💜💜💜💜💜💜💜💜❤️
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top