Part20

பாகம் 20

*ஈஸ்வர் வில்லா*

"யாழினி உன்னை கூப்பிட்டப்ப,  எதுக்கு நீ வரலன்னு சொன்னே?" என்று கிரீஷை பார்த்து கேட்டார் லலிதா.

"நல்லா கேட்டிங்க போங்க. நான் அங்க போவதும் ஒன்னு தான்,  சிங்கத்தோட குகையில சோலோ டான்ஸ் ஆடுறதும்  ஒன்னுதான்".

"நான்,  உன்கிட்ட ஏற்கனவே சொன்னேன்,  நீ யாழினி கூட இருக்கும்போது,  அபி உன்னை ஒன்னும் செய்ய மாட்டான்னு"

"அபி வேணும்னா என்னை எதுவும் செய்யாமல் இருக்கலாம். ஆனா,  அவங்க பாட்டி ஒருத்தறே போதும்,  என்னை பார்வையாலேயே எரிச்சிடுவாங்க. மத்தவங்களை பற்றிக் கேட்கவே வேண்டாம்"

"நீ இந்த மாதிரி இருக்கிறது நல்லதே இல்லை. எல்லாத்தையும் எதிர்த்து நிற்க பழகணும்".

"உங்களுக்கு என்ன?  நீங்க ஈஸியா சொல்லிடுவீங்க. ஒவ்வொரு நாளும்,  நான் தான் அபியோட  கோபப் பார்வைய பார்த்துகிட்டு இருக்கேன். அவன் என்னைக்கு என்னோட எலும்பை எண்ண போறான்னு தெரியல." நிஜமான கவலையுடன் சொன்னான் கிரிஷ்.

"ஒன்னும் கவலைப்படாதே. எல்லாம் சரியாயிடும். நான் இருக்கேன்ல"

"லவ் யு மாம். நீங்க தான் பெஸ்ட்"

"இத உன் கல்யாணத்துக்கு அப்புறமும் ஞாபகம் வச்சுக்கோ"

"ஏன்மா இப்படி பேசுறீங்க?  உங்களுக்கு தெரியாதா, எனக்கு வரப்போகிற ஒய்ஃப் எவ்வளவு நல்லவன்னு"

"அவளை நான் என்னைக்குமே சந்தேகப்பட மாட்டேன்"

"அப்போ,  நீங்க என்ன சந்தேகபடுறிங்களா?"

"சந்தேகமே இல்லை. நிச்சயமா சொல்றேன். கல்யாணத்துக்கு அப்புறம் நீ நிச்சயமா மாற தான் போறே" சொல்லிவிட்டு கலகலவென்று சிரித்தார் லலிதா.

"போங்கம்மா,  நீங்க எப்ப பாத்தாலும் இப்படித்தான் என கிண்டல் பண்ணிக்கிட்டே இருப்பீங்க"

அவர்கள் இருவரின் பார்வையும் அங்கு நின்றிருந்த ஈஸ்வர் மீது விழுந்தது.

"நீங்க ரெண்டு பேரும் யாழினிய பத்தி பேசிக்கிட்டு இருக்கா  மாதிரி தெரியுது? " என்றான்.

"நீங்க கிளம்பிட்டீங்களா? " என்றார் லலிதா.

"ஆமா,  நிறைய வேலை இருக்கு. போயாகணும்"

"ஆமா,  செஞ்ச தப்ப சரி கட்ட, நிறைய வேலை செய்ய வேண்டி இருக்கு. அதோட,  அபி அடுத்து என்ன செய்வான்னு  தெரியல"  என்று குத்தலாக கூறினான் கிரிஷ்.

"அவன் பேரை என் முன்னாடி சொல்லாதே" என்று எரிந்து விழுந்தார் ஈஸ்வர்.

"இதுல அபியோட தப்பு என்ன இருக்கு?  அவனுடைய இடத்தில் யார் இருந்தாலும்,  இதைத்தான் செய்வாங்க. அதிலும் அவன் ஒன்னும் முட்டாளில்லை,  இப்படி ஒரு அருமையான சந்தர்ப்பத்தை நழுவ விட"

"போதும் நிறுத்து"

"உண்மைய சொன்னா கசக்குதா உங்களுக்கு?  எது எப்படி இருந்தாலும் நீங்க செஞ்சது படு முட்டாள்தனம். எந்த அனுபவசாலி,  நீங்க செஞ்ச மாதிரி செய்வான்?" என்றான் கடுப்பாக.

"அவன் இதுவரைக்கும் நம்மளுடைய பாதையில் குறுக்கிட்டதே இல்ல. ஆனா இந்த தடவ அவன்  ரொம்ப தப்பு பண்ணிட்டான்"

"தப்பு பண்ணது அபியா?  நான் அப்படி நினைக்கல. நீங்க தான் அவனை குறைச்சி மதிப்பிட்டுடிங்க".

"நிறுத்து உன் நான்சென்ஸ்ஸை"

"நான்சென்ஸா?  நானா? "

" தயவுசெய்து,  ரெண்டுபேரும் நிறுத்துறீங்களா?  நடந்தது நடந்து போச்சு. அடுத்தது என்னன்னு யோசிங்க"

"கல்யாணம். அபிமன்யுவ தடுத்து நிறுத்த ஒரே வழி" என்றார் ஈஸ்வர்.

"அதுக்கு,  முதல்ல, அபி  கல்யாணத்த நடக்க விடணும் இல்ல?" என்றான் கிரிஷ்

"நடக்கும். நான் அதை நடத்திக் காட்டுவேன்".

"என்னமோ,  அபி  அவன் கைய கட்டிகிட்டு வேடிக்கை பார்க்கிற மாதிரி பேசுறீங்க"

"நிச்சயமா மாட்டான். ஆனா,  ஒரு வேலை அவனுக்கு தெரியாமல் நடந்தா? "

"என்ன சொல்றீங்க நீங்க?"

"அது நடக்கும்போது,  நீயே  புரிஞ்சுக்குவ"

லலிதாவும், கிரிஷும் ஒருவரை ஒருவர் பார்த்து,  சந்தோஷமாக சிரித்துக் கொண்டனர்.

*சாந்தி நிலையம்*

அனைவரும் காலை சிற்றுண்டிக்காக ஒன்று கூடினார்கள். வழக்கம்போல யாழினி,  அபிமன்யுவிற்கு எதிரில் அமர்ந்து கொண்டாள். அப்போது,  அவள் கையில் இருந்த அவளுடைய கைப்பை,  தவறி கீழே விழுந்தது. அதிலிருந்து ஆதிகேசவனின் பிறந்த நாள் பரிசு கீழே விழுவதை அஞ்சலி பார்த்தாள்.

"இது யாரோட கிஃப்ட் யாழினி?

"அப்பா கொடுத்தார்"

அவள் அதைப் பிரிக்க துவங்க,  அதிலிருந்த பொருளை பார்த்தவுடன்,  அனைவருடைய முகமும் தொங்கிப் போனது. அது ஒரு லேட்டஸ்ட் மாடல் ஐஃபோன்.

"வாவ்... எங்க அப்பா எப்பவுமே பெஸ்ட். அவருக்கு தெரியும் எனக்கு என்ன வேணும்னு"

"உண்மையிலேயே,  உனக்கு என்ன வேணும்னு அவருக்கு புரிஞ்சிருந்தா,  ரொம்ப சந்தோஷமா  இருந்திருக்கும்" என்றான்  நந்தா கடுகடுப்புடன்.

"அஃப்கோர்ஸ்... அவருக்கு நிச்சயம் தெரியும். நான் எது கேட்டாலும்,  அவர் இல்லைன்னு சொல்ல மாட்டார். அவர் என்ன ரொம்ப நேசிக்கிறார்" பெருமையாக சொன்னாள் யாழினி.

"ஆமா,  அவர்  உன்னை  ரொம்ப அளவுக்கு அதிகமாக நேசிக்கிறார். அதுதான் பிரச்சினையே" என்றான் அபிமன்யு.

"அப்படின்னா? "

என குழப்பமாய் கேட்ட யாழினிக்கு, அபி பதிலளிக்க முயல,  அவனை தடுத்து நிறுத்தினான் ஷியாம்.

"அவரு,  உன்ன ரொம்ப பொத்தி பொத்தி வைப்பார். அதை பத்தி தான் அபி சொல்றான்" என்றான்.

"ஓஹோ"

"நீ உன்னோட மொபைலை  தேடி பாக்கலையா?" என்றாள் பிரியா.

"எனக்கு அப்பாவுடைய பீரோவிலிருந்து கிடைச்சுது. அபி தான்,   மறுபடி அங்கேயே  வைக்க சொல்லிட்டாரு"

"ஆமா,  அவளோட அப்பா தான் அவளோட மொபைல ஒளிச்சி வச்சிருந்தார்" என்றான் கோபமாக அபி.

"அவர் ஏன் ஒளிச்சி வைக்கணும்?  ஒருவேளை அவர் எனக்கு கொடுக்க மறந்திருக்கலாம் " என்றாள்  யாழினி.

"அது உண்மைனா,  அவர் எதுக்காக உனக்கு புதுசா ஒரு மொபைல் வாங்கி கொடுக்கணும்?" என கேள்வி எழுப்பினான் அபி

"என் பிறந்த நாளுக்கு ஒரு புது மொபைல் கொடுக்க அவர் நினச்சிருக்கலாம்"

"உன்னுடைய பழைய ஃபோன்ல,  நீ எதுவுமே பாக்கலையா?" என்றான்  நந்தா.

"அதுல எதுவுமே இல்ல. நான் செக் பண்ணி பாத்துட்டேன்" என்றான் அபி.

"ஆமாம்,  அவர் செக் பண்ணினார். ஆனா,  எல்லாரும் ஏன் அதையே திரும்பத் திரும்ப கேக்கிறீங்க" என்றாள் யாழினி.

"என்னா,  உனக்கு அந்த போனை ரொம்ப பிடிக்கும்" என்றான் பொங்கி வந்த தன் கோபத்தை மறைத்துக்கொண்டு அபி.

அஞ்சலி அவனை அமைதியாக இருக்கும்படி சமிக்ஞை செய்தாள்.

அவனுக்கு மட்டும் தான் தெரியும் அந்த ஃபோன்,  அவனுடைய வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானது என்று. அவனுக்கு இருந்த ஒரே ஒரு மிகப்பெரிய துருப்புச் சீட்டு அந்த ஃபோன் தான். அதை அவன் இழந்து விட்டான். என்றாவது ஒருநாள்,  யாழினி அதை பார்க்கும் போது,  அனைத்தும் சரியாகிவிடும் என்று அபி  நம்பியிருந்தான்.  ஆனால்,  அது அவர்களுடைய கதையில் ஒன்றுமே இல்லாமல் போனதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

மறுநாள்

*ஏபி ஃபேஷன்ஸ்*

கதவைத் தட்டாமல் தனது அறையில் புயலென பிரவேசித்த அமரை,  அபி ஆச்சரியமாக பார்த்தான்.

"நீ ஏதோ அவசரத்தில் இருக்க மாதிரி தெரியுது? " என்றான் அபி.

"இந்த பைலை பார்த்தா உனக்கே புரியும்" என்றான் அமர்

அபி அந்த பைலை பார்க்கத் துவங்க,  நொடிக்கு நொடி,  அவனுடைய முகம் மாறிக்கொண்டே இருந்தது. அமரும்,  அவன் பார்த்து முடிக்கட்டும் என்று காத்திருந்தான்,  பார்த்து முடித்தவன்,  தன்னுடைய நாற்காலியில் இருந்து எழுந்து அமரை சந்தோஷமாக கட்டிக்கொண்டான்.

"இது எல்லாம்,  உன் ஒருத்தனால தான் முடியும்" என்றான் சந்தோஷமாக.

"நீ சொன்ன ஒரே ஒரு "எஸ்" தான் எல்லாத்துக்கும் காரணம்" என்றான் அமர்.

"நான் நிறைய பேருக்கு *எஸ்* சொல்றேன். ஆனா எல்லாரும் அமராகிட முடியாது.

"தேங்க்யூ அபி".

"எனக்கு உன்னோட திறமைல சந்தேகமே இல்ல. ஆனா... "

"நீ கவலை படவே வேண்டாம். நானே எல்லாத்தையும் தனிப்பட்ட முறையில் செக் பண்ணி பாத்துட்டேன். நீ எப்ப வேணாலும் ப்ரொசீட் பண்ணலாம். ஆனா,  நான் உனக்கு ஒன்னே ஒன்னு தான் சொல்ல நினைக்கிறேன்"

"நீ எது வேணாலும் தாராளமா சொல்லலாம்"

"அவசரப்படாதே. சரியான நேரத்துக்காக வெயிட் பண்ணு.  நின்னு அடிக்கலாம்"

"நீ சொல்றதும் சரிதான். அது சரி... நீ எப்படி இத சாதிச்ச? "

"சிம்பிள்...*ஹேக்* பண்ணி எடுத்துட்டேன்" என்று கண்ணாடித்தான் அமர்.

நண்பர்கள் இருவரும் மனமார சிரித்தார்கள்

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top