paguthi 16

அவினாஷ் கையில் இருந்த பந்து பட்டு ஓவியம் பலகையை விட்டு வெளியில் வந்தது .சத்தம் கேட்டு அங்கு வந்த பிரியா ஓவியம் பலகையோடு வேறொரு பொருளும் இருப்பதைக் கண்டு அவ்விடம் நோக்கி செல்கிறாள்.

அந்த ஓவியத்தின் பலகையிலிருந்து ஒரு சின்ன பெட்டிபோன்று ஒரு பொருள் தரையில் விழுந்து இருந்தது.அதை பிரியா கையில் எடுத்து பார்க்கின்றாள்.அது ஒரு சிறிய மரப் பெட்டி.அப்பெட்டி எங்கும் பல வேலைப்படுகள் இருந்தது அதன் மேல்பகுதியில் ஒரு கல் பதிக்கப்பட்டு இருந்தது.

அது என்ன என்று பார்த்தவள் அதைத் திறக்க முற்பட அவளால் அதை திறக்க முடியவில்லை .பின் அவளது தோளில் யாரோ கை வைப்பதைப் போல் இருக்க அவள் திரும்பி பார்க்க அங்கு அவினாஷ் "சாரி அக்கா" என்று கூறினான் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு .

அவனிடம் விளையாட நினைத்தவள் "இல்ல அவி நீ எவ்ளோ பெரிய தப்பு பண்ணிருக்க சாரி மட்டும் கேட்டா எப்படி உன்ன விடுறது??" என்று கேட்க 

அவனோ அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு "அப்போ பனிஷ்மென்ட் குடு"என்று கூற

 அவளோ "சரி எனக்கு ஒரு கிஸ் குடு அதான் உனக்கு பனிஷ்மென்ட்" என்று சிரித்த முகத்துடன் கூற அவனோ முகம் மலர்ந்து அவளது இரு கன்னத்திலும் முத்தமிட்டுவிட்டு ஓடினான்.

பின் அவள் அந்த பெட்டியுடன் வெளி வர அர்ஜுனோ "தப்பு பண்ணா மேடம் இப்டி தான் பனிஷ்மென்ட் குடுப்பீங்களா??"என்று விஷமமாக கேட்க அ

வளோ அவன் முகபாவனையை கவினிக்காமல் "எனக்கு புடிச்சவுங்க சின்ன தப்பு பண்ணா அப்டி தான் ஏன் கேக்குறீங்க?" என்று கேட்க அ

வனோ "அப்போ நா இப்போ ஒரு தப்பு பண்ணவா??"(தப்பா யோசிக்க கூடாது முழுசா dialoguah கேக்கணும்) என்று அவளது சடையை பிடித்து இழுக்க போக அவள் அஸ்கு புஸ்கு என்று கூறிவிட்டு ஓடிவிட்டாள்.

பின் அப்பெட்டியை தன்அறையின் ஜன்னலருகே வைத்தவள் நிவேதா மித்ராவுடன் சுமங்களிப் பூஜைக்கு சென்றால்.அங்கு கோவிலில் திருமணமான பெண்கள் மற்றும் திருமணமாகாத பெண்கள் அனைவரும் விளக்கு பூஜையை ஆரம்பித்தனர்.அர்ஜுன் ப்ரியாவை நேரடியாக நின்று ரசித்துக் கொண்டிருக்க கார்திக்கோ காவலர்களிடம் பேசி விட்டு அப்பொழுது தான் உள்ளே வந்தான்.


உள்ளே வந்தவன் கண்டதோ பூ போன்ற கரங்களில் பூவை எடுத்து விளக்குக்கு பூஜை செய்து கொண்டிருக்கும் தன்னவளை தான்.

அவளது சிவந்த மேனியை அவள் கட்டி இருந்த தங்க நிற பட்டு சேலையும் விளக்கின் ஒளியும் மேலும் தங்கமென ஜொலிக்க செய்தது.கார்த்திக் அவளது அழகில் தன்னை தொலைத்து தன்னவள் இவள் என்னும் கர்வத்தோடு நோக்கி கொண்டிருந்தான்.

பின் விளக்கு பூஜை முடிவு பெற திருமணமான பெண்களுக்கு புது தாலி கோர்க்கப்பட்டு காலில் மஞ்சளும் குங்குமமும் கலந்த கலவை  பூசப் பட்டது .பின் அங்கிருந்த பூசாரி "கல்யாணம் ஆன பொண்ணுங்களோட ஆத்துகாரர்களாம் வாங்கோ" என்று அழைக்க இன்னும் தன் மோன  நிலையிலிருந்து வெளி வராத கார்திக்க்கை அர்ஜுன் தலையில் ஒரு கொட்டு கொட்டி அனுப்பி வைத்தான்.

பின் மித்ரா அருகில் சென்ற கார்த்திக் சற்று அதிக நெருக்கமாகவே அவளோடு நின்றுகொண்டான்.

அவன் மிகவும் நெருங்கி நிற்பதை பார்த்த மித்ரா என்ன இது வேதாளம் எனக்கு இவ்ளோ பக்கத்துல நிக்குது என்று nimirndhu அவனைப் பார்க்க அவனோ அவளை அத்தனை ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான் .

அவனது காந்த பார்வையில் அவன் கண்ணோடு தன் கண்களை கலந்தவள் கோவில் மணி ஓசையில் தன்னிலை அடைந்தாள் பின் அவனை அழைத்துக் கொண்டு அங்கிருந்த முதிய சாமியார் ஒருவரிடம் சென்று ஆசீர்வாதம் வாங்க அவரோ இருவரையும் நோக்கி விட்டு உங்கள் வாழ்க்கை நெல்லிக்காயை போன்று இருக்கும் என்று கூறி கார்த்திக்கிடம் குங்குமத்தைக் கொடுத்து அவள் வகிட்டில் இட சொன்னார்.

அவனும் மனதில் மகிழ்ச்சியுடன் இறைவன் சந்நிதியில் மித்ரா வகிட்டில் குங்குமம் வைத்தான் அதில் சிறிது அவளது மூக்கிலும் விழுந்தது (குங்குமம் மூக்குல விழுந்தா husbandku பொண்டாட்டி மேல லவ் அதிகமா இருக்கும்னு எங்க பாட்டி சொல்லுவாங்க எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியாது).

பின் அனைவரும் தங்கள் வீடு நோக்கி செல்ல எத்தனிக்க மித்ரா மற்றும் பிரியா அர்ஜுன் மற்றும் கார்திக்க்கிடம் ஜாடையில் பேச அவர்களைக் கண்ட நிவேதா" என்ன அண்ணி அண்ணா கிட்ட என்ன பேசுறீங்க ?"என்று வினவ 

அவர்களோ ஒன்றுமில்லை என்று மழுப்பி விட்டு அவளைக் கூட்டி சென்றனர் பின் வீட்டிற்கு சற்று முன் வண்டியை நிறுத்தியவர்கள் நிவேதா மற்றும் அவினாஷை ஜீப்பில் இருக்க சொல்லி விட்டு செல்ல அந்த இடமே சற்று நேரத்தில் மிகவும் இருளடைந்ததானது .

பின் நிவேதாவின் கண்களை யாரோ துணி கொண்டு கட்ட அவளோ பயத்தில் கத்த போனால் பின் அவளை அவினாஷ் "நான் தான் கா என் கூட வா" என்று கூறி அவளை அழைத்து செல்ல அங்கு அவளது கண்கட்டை அவிழ்த்த பிறகு அவள் கண்டதோ மிகவும் அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்த தோட்டமும் அதன் நடுவே வைக்கப் பட்டிருந்த cakeum அதை சுற்றி நின்று கொண்டிருந்த அர்ஜுன்,கார்த்திக்,மித்ரா,பிரியா வுமே ஆகும் .

இதைக் கண்டவள் ஓடி சென்று பிரியா மற்றும் மித்ராவை கட்டிக் கொண்டால்.பின் கேக் ஐ அவள் வெட்ட கார்திக்க்கும் மித்ராவும் ப்ரியாவும் அவினாஷும் அவளுக்கு பிறந்தநாள் பரிசுகள் கொடுத்தனர் .


பின் அர்ஜுனிடம் பிரியா "என்ன சார் நீங்க மட்டும் எந்த கிப்ட்டும் வாங்கலையோ?"என்று வினவ 

அவனோ "நா அவளுக்கு ஒரு பெரிய surprise வச்சுருக்கேன்" என்று கூறி ஒரு உறையை அவளிடம் கொடுக்க அதை படித்து பார்த்தவளோ "ஊஹூ thank  யு சோ மச் அண்ணா "என்று துள்ளி குதித்தாள் .

அது வேறொன்றும் இல்லை நிவேதாவிற்கு கொல்கத்தாவிலிருக்கும் "தி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டிஜிட்டல் ஆர்ட் அண்ட் அனிமேஷன் இல் படிக்க வேண்டுமென்பது கனவு.

அவினாஷின் பொறுப்பும் தன்னிடம் இருக்க அவளது பகுதி நேர படிப்பின் சொற்ப வருமானத்தைக் கொண்டு அங்கு படிக்க இயலாது என்றே இங்கு ஒரு கலைக்  கல்லூரியில் சேர்ந்து படிக்கிறாள் .

இதை அவினாஷ் மூலம் தெரிந்து கொண்ட அர்ஜுன் அவளது சான்றுகளைக் கொண்டு அவளுக்கு அக்கல்லூரியில் தனக்கு தெரிந்த நண்பரின் மூலம் அவளுக்கும் அவினாஷிற்கு அங்குள்ள ஒரு நவோதய பள்ளியிலும் சீட்டு வாங்கி அவளுக்கு அங்கு ஒரு கால் சென்டரில் ஒரு பகுதி நேர வேலையும் வாங்கி கொடுத்திருக்கிறான் .

அதற்கான அழைப்பு கடிதம் தான் அவள் கையில் இருப்பது. பிரியா மீண்டும் அவனை காதலுடன் நோக்க மித்ராவோ அவன் அருகில் வந்து "அர்ஜுன் நான் உன்ன அண்ணனு கூப்பிடலாமா?"என்று வினவினாள் .

அவனும் "இதை கேட்கணுமா மித்ரா என்னைக்கும் நீ எனக்கு தங்கச்சி தான் ":என்று கூறினான்.பின் அடுத்த நாள் நிவேதாவையும் அவினாக்ஷயும் கொல்கத்தாவிற்கு கண்ணீரோடு வழி அனுப்பி வைத்தனர்.

பின் ஒருநாள் இரவு அனைவரும் தூங்கி கொண்டிருக்க ப்ரியாவிற்கோ தூக்கம் வராதவாறு பல பல எண்ணங்கள் அவளது தூக்கத்தை திருடிக் கொண்டிருந்தது.

பின் அர்ஜுன் "ஆ "என்று கத்துவது போல் கேட்க தூக்கத்தில் இருந்து அர்ஜுன் என்று கத்தி கொண்டே விழித்தாள் .

அவளது நெற்றியில்  வியர்வை துளிகள் துளிர்த்திருந்தது .பதட்டமாக இருக்க அவள் எழுந்து சென்று தண்ணீர் குடித்தால் பின் அவள் மேஜையை நோக்க அங்கிருந்த பேட்டி அவள் கண்களை ஈர்த்தது .

அதை கையில் எடுத்தவள் ஜன்னல் திரையை விளக்கி விட்டு பௌர்ணமி நிலவின் ஒளியில் அதைக் கண்டு கொண்டிருக்க அந்த பேட்டியின் மேல் இருந்த கல்லோ மிகவும் பிரகாசமாக ஒளி வீசியது .

அவ்வொளி கண்களைக் கூசச் செய்ய பிரியா தன ஒரு கையால் தன கண்களை மூடினாள் பின் அந்த ஒளி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.பின் பிரியா அப்பெட்டியை திறக்க அதில் இருந்தது தங்கத்தால் செய்யப் பட்ட ஒரு வட்ட பொருள் .

அதில் நாக உருவம் பொறிக்கப் பட்டிருந்தது.பின் அதை சிறிது நேரம் கண் கொட்டாமல் பார்த்தவள் ஏதோ ஒன்று தோன்ற அச்சித்திரத்தின் அருகில் சென்று அதை வருடியவள்."நீங்க யாருமே எனக்கு தெரியாது ஆனா உங்கள பாத்தாலே ஏதோ மரியாதை வருது .உங்க கண்ணா பார்கேள நீங்க ஏதோ என்கிட்டே சொல்ல வர மாதிரி இருக்கு .இது உங்களுக்கு சொந்தமானது ஆனா இது என்ன இது எங்க இருக்கணும்னு தெரியல .ஆனா அதா கண்டிப்பா உரிய இடத்துல செப்பேன்னு நம்பிக்கை இருக்கு ."என்று கூறி நிம்மதியாக உறங்க சென்றால் .அந்த சித்திரம் இப்பொழுது அவளை பார்த்து சிரிப்பதை போல் இருந்தது அவளுக்கு.

இங்கு ஓர் இருள் சூழ்ந்த பகுதியில் ஓர் உருவம்

(நாம் 5 வது பகுதியில் பார்த்த அதே உருவம்) வெள்ளைப் பந்தின் மேல் கையை வைத்துக் கொண்டு சிரிக்கிறது பழம் பழுத்து அறுவடைக்கு தயாராகி விட்டது .உன்னை இங்கு வர வைப்பேனடி .என்று கூறி பயங்கரமாக சிரித்தது.

அந்த நாகம் பொறிக்கப் பட்டிருந்த பொருள் யாருக்கு சொந்தமானது ??

அடுத்து ப்ரியாவின் வாழ்வில் நடக்க விருப்பது என்ன??

stay tuned to know

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top