75 செய்தி

75  செய்தி

நித்திலவை நோக்கி ஓடிச் சென்று அனைவரும் அவள் முன்பு முழங்காலிட்டு அமர்ந்தனர்.

"அக்கா ப்ளீஸ் உங்களை திடப்படுத்திக்கோங்க" என்றாள், தன்னை திடப்படுத்திக் கொள்ள முடியாத பார்கவி.

மற்ற மூவருக்கும் எப்படி அவளை சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை.

"அக்கா, ப்ளீஸ் அழாதீங்க" என்றான் இனியவன்.

தன் கரங்களை குவித்து,

"என்னை மன்னிச்சிடு இன்னு. என்னோட முட்டாள்தனத்தால தான் உன் வாழ்க்கை நாசமாயிடுச்சு" என்றாள்.

"இல்லக்கா. அது முட்டாள் தனம் இல்ல. உண்மையான அன்பு. நம்ம யார் மேல் அன்பு வைக்கிறோமோ, அவங்க மேல நமக்கு சந்தேகப்பட தோணாது. அதைத்தானே நீங்க செஞ்சீங்க? அதே நேரம், ஆழ்வியை கொண்டு வந்து என் வாழ்க்கையை மாத்தி வச்சிருக்கீங்க" என்று அவளை சமாதானப்படுத்த முயன்றான் இனியவன்.

"ஆமாம் நித்திலா. மாப்பிள்ளை தப்பானவர் தான். அவரோட தப்பான வேலை ஆழ்வியால முடிவுக்கு வந்திருக்கு. அந்த பாராட்டு உன்னை தான் சேரும். உன்னால தான் ஆழ்வில் இங்க வந்தா. ஆழ்வியால நம்ம இன்னு குணமானான். அவ இல்லாம இன்னுவால எப்படி குணமாகி இருக்க முடியும்?"

"நீ எதுக்காக அவரை தப்பிக்க விட்ட?" பேச்சை மாற்றினாள் நித்திலா, அவர்கள் கூறும் சமாதானத்தை ஏற்க முடியாமல்.

"இல்லக்கா, நமக்கு இருக்கிற ஒரே துருப்புச்சீட்டு அவர் தான். அவரை வச்சு தான் நம்ம மத்த எல்லாரையும் பிடிக்க முடியும். சித்திரவேல் நிச்சயமா கல்ப்ரிட்டுக்கு ஃபோன் பண்ணுவாரு"

"நீ அவரை சும்மா விடக்கூடாது. அவருக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கணும்"

"நிச்சயம் கிடைக்கும்"

"என் வாழ்க்கையில அந்த துரோகி தேவையில்ல. அவன் ஒரு ஏமாத்துக்காரன். அவனோட ரோல் என் வாழ்க்கையில முடிஞ்சு போச்சு"

"அக்கா, ப்ளீஸ் எமோஷனல் ஆகாதிங்க. வாங்க உங்க ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுங்க" 

அவளது அறைக்கு அழைத்துச் சென்று, அவளை இனியவன் கட்டிலில் படுக்க வைத்து போது, அவன் கையைப் பற்றிக் கொண்டாள் நித்திலா. அவள் அருகில் அமர்ந்தான் இனியவன். நீ

"என் மேல கோவமா இருக்கியா, இன்னு?"

"இல்லக்கா. நான் ஏன் உங்க மேல கோவமா இருக்க போறேன்?"

"நான் கருவை கலைச்சிட்டேன். என் குழந்தையை கொன்னதோடு மட்டுமில்லாம, ஒரு அம்மாவுக்கான பெருமையை இழந்துட்டேன். நான் தானே என் குழந்தையை பொத்தி பாதுகாக்கணும்? ஆனா, நானே அவளை கொன்னுட்டேன்" என்றாள் அவன் தோள்களில் சாய்ந்து அழுதபடி.

அவளது தலை முடியை வருடி கொடுத்த அவன்,

"நீங்க அப்படி செஞ்சிருக்கக் கூடாது கா" என்றான்.

"என்னை வேற என்ன செய்ய சொல்ற இன்னு?"

"அவங்க அப்பா தப்பானவர் அப்படிங்கிறதுக்காக குழந்தையை தண்டிப்பாங்களா கா?"

"நான் அவளை தண்டிக்கல. அவளை பழியிலிருந்து காப்பாத்தி இருக்கேன். அப்படி செய்யாம இருந்திருந்தா, அவங்க அப்பா செஞ்ச தப்பை சொல்லி சொல்லி இந்த உலகம் அவளை தண்டிச்சிருக்கும். அவ வாழ்க்கை நரகமாகி இருக்கும்"

"நீங்க என்னை நம்பலயா கா? நான் அப்படியெல்லாம் நடக்க விட்டுடுவேன்னு நினைச்சீங்களா? நான் அவளை பாதுகாக்க மாட்டேனா?"

"போதும் இன்னு. நீ எங்களுக்காக இன்னும் என்னவெல்லாம் செய்வ? நம்ம குடும்பத்தை காப்பாத்தின, என்னை காப்பாத்தின, கவியை காப்பாத்தின. இன்னும் என் குழந்தையை வேற நீ காப்பாத்தணுமா? உனக்கும் குடும்பம் இருக்கு. உனக்கும் வாழ்க்கை இருக்கு. நீ அதை பாரு"

அவளுக்கு இனியவன் பதில் கூறும் முன், ஆழ்வி கூறினாள்.

"நீங்களும் அவர் குடும்பம் தான் கா. உங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கு. அதை அவர் முழு மனசோட செய்வார். அது உங்களுக்கும் தெரியும்"

"ஆனா, ஒரு நல்ல அக்காவா நான் என் தம்பியை காக்க தவறிட்டேன்"

"என்ன செய்யணுமோ அதை நீங்க செஞ்சீங்க. உங்களை நீங்க குற்றம் சொல்லிக்காதீங்க" என்றான் இனியவன்

கண்ணீரைத் துடைத்துக் கொண்டு படுத்துக்கொண்டாள் நித்திலா. அவர்களை பார்த்துக் கொள்ளுங்கள் என்பது போல், பாட்டியிடம் செய்கை செய்து விட்டு அங்கிருந்து சென்றான் இனியவன்.

மறுபுறம், கைபேசியில் தொண்டை கிழிய கத்திக் கொண்டிருந்தான் சித்திரவேல்.

"நான் இப்போ நடு ரோட்டில் நின்னுகிட்டு இருக்கேன். என் பொண்டாட்டி வீட்டைவிட்டு என்னை வெளிய அனுப்பிட்டா. அவ என் மேல கடும் கோபத்துல இருக்கா. அவ என்னை வெறுக்கிறா. அவர் என் முகத்தை பார்க்க கூட விரும்பல. இது எல்லாத்துக்கும் காரணம் நீ தான்"

"......."

"ஆமாம். இதெல்லாம் உன்னால தான் நடந்தது. நீ தான் இனியவனை பைத்தியமா வைக்கணும்னு நினைச்ச. உன் ஈகோவை சேட்டிஸ்ஃபை பண்ணத்தான் நான் அதை செஞ்சேன். டாக்டரும் செத்துட்டான். போலீஸ் என்னை எப்ப வேணாலும் அரெஸ்ட் பண்ணிடுவாங்க. ஏதாவது செய். இல்லனா, நான் அப்ரூவரா மாறிடுவேன். அவங்க கிட்ட எல்லா உண்மையையும் சொல்லிட்டா, நீ எப்பவுமே ஜெயிலை விட்டு வெளியே வர முடியாது"

"........"

"நான் ஒரு லாயர்னு எனக்கு தெரியாதா? இந்த விஷயத்துல இறங்கின நேரத்தில் இருந்தே, இதிலிருந்து வெளியில வர எல்லா லூப்ஹோலையும் யோசிச்சுக்கிட்டு தான் இருக்கேன். அதை எப்படி செய்யணும்னு எனக்கு தெரியும். எனக்காக இந்த கேஸ்ல நானே ஆஜராவேன். எனக்கு யாருடைய உதவியும் தேவையில்ல. ஆனா, எனக்கு என்னோட வைஃப் வேணும். அவ தான் எனக்கு எல்லாமும். அவ மறுபடி எனக்கு கிடைக்கலன்னா, நான் உன்னை கொன்னுடுவேன்" என்று பைத்தியம் போல் கத்தினான் சித்திரவேல்.

...........

மறுபுறம்,

முத்துவிடமிருந்து வந்த அழைப்பை ஏற்றான் குரு.

"சொல்லு முத்து"

"அண்ணா நித்திலாக்கா கருவை கலைச்சிட்டாங்க"

"என்ன்னனது?" என்று அதிர்ந்தான் குரு.

"சித்திரவேலை பத்தின எல்லா உண்மையும் அவங்களுக்கு தெரிஞ்சிடுச்சி"

"அது எப்படி நடந்தது?"

"அவருக்கு வந்த ஃபோன் காலை அவங்க கேட்டாங்களாம்"

"ஆனா இதைப் பத்தி யாருக்கு தெரியும்?"

"அந்த மோசமான மருந்தோட சம்பந்தப்பட்ட யாரோ தான் சித்திரவேலுக்கு ஃபோன் பண்ணி இருக்காங்க. அதை அவருக்கு பதில் அக்கா எடுத்துப் பேசிட்டாங்க"

"அடக்கடவுளே!" என்று கண்களை மூடினான் குரு.

"அக்கா அவரை வீட்டை விட்டு வெளிய அனுப்பிட்டாங்க"

"நிஜமாவா சொல்ற? நித்திலா அப்படி செஞ்சாங்களா?"

"ஆமாம். அவரை ரெண்டு தடவை கோவமா அறைஞ்சாங்க. அவர் மேல சொல்ல முடியாத அளவுக்கு கோவமா இருக்காங்க. அந்த கோவத்துல தான் கருவை கலைச்சிட்டாங்க"

அவனுக்கு நித்திலாவின் வலியை புரிந்து கொள்ள முடிந்தது.

"இனியா எப்படி இருக்கான்?"

"அவர் இடிஞ்சு போயிட்டாரு. ஏன் தான் இப்படிப்பட்ட பிரச்சனை எல்லாம் அவர் வாழ்க்கையில வந்துகிட்டு இருக்கோ. அக்காவை அவர் எப்படி சமாதானப்படுத்தப் போறாரோ தெரியல" என்றான் முத்து சோகமாய்.

"இதுல நம்ம செய்யறதுக்கு எதுவும் இல்ல முத்து. நம்ம இந்த சூழ்நிலையை எதிர்பார்த்துக்கிட்டு தானே இருந்தோம்? எப்போ இந்த விஷயத்துல சித்திரவேல் உடந்தைன்னு தெரிஞ்சிதோ, இதெல்லாம் நடக்கும்னு நமக்கு தெரியும் தானே? ஆனா நித்திலா இப்படி ஒரு முடிவை எடுப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கல"

"அவங்க வேற என்ன செய்வாங்க அண்ணா? நமக்கு தெரியாதா சித்திரவேல் மேல அவங்க எவ்வளவு கண்மூடித்தனமா பாசம் வச்சிருந்தாங்கன்னு?"

"உண்மை தான். அதனால தான் அவங்க எந்த முடிவு எடுப்பாங்கன்னு என்னால புரிஞ்சிக்க முடியாம போச்சு... இப்போ சித்திரவேல் எங்க இருக்கான்?"

"அவர் ஓடிட்டாரு"

"ஓடிட்டானா? எப்படி இனியா அதை நடக்க விட்டான்?"

"அவர் அப்படி செஞ்சதுக்கு ஏதாவது காரணம் இருக்கும்"

"இருக்கலாம்...

"நீங்க இங்க வரிங்களா?"

"வருவேன். ஆனா இப்போ இல்ல. நாளைக்கு வரேன்" என்று அழைப்பை துண்டித்தான் குரு.

.......

இனியவனும் ஆழ்வியும் அவர்கள் அறைக்கு வந்தார்கள். முழுவதும் நொறுங்கிய நிலையில் சோபாவில் அமர்ந்து முகத்தை மூடினான் இனியவன். அவன் நிலையை எண்ணி பரிதாபம் கொண்ட ஆழ்வி, அவன் அருகில் அமர்ந்து,

"ப்ளீஸ் கவலைப்படாதீங்க" என்றாள்.

"இந்த உலகத்திலேயே ரொம்ப மோசமான ஒரு விஷயம் நம்பிக்கை. ஒருத்தரோட நம்பிக்கையை அடையுறது கஷ்டமில்ல. ஆனா, கடைசி வரைக்கும் அவங்களுக்கு நம்பிக்கை உள்ளவங்களா இருக்கிறது ரொம்ப கஷ்டம். சித்திரவேல் என் குடும்பத்தில் இருந்த அத்தனை பேருடைய கண்ணையும் கட்டிட்டு, அந்த நம்பிக்கையை சம்பாதிச்சிட்டான்"

"அவர் அக்காவை ஏதோ ஒரு வழியில சந்திக்க முயற்சி பண்ணுவார்"

"நான் அப்படி நடக்க விட மாட்டேன்"

சார்ஜரோடு பொருத்தப்பட்டிருந்த தனது கைபேசியை எடுத்த இனியவன், அதில் மூன்று மிஸ்டுகால்கள் இருந்ததை பார்த்தான். அந்த எண்ணுக்கு ஃபோன் செய்து,

"யார் நீங்க?" என்றான்.

"இனியவனா பேசுறீங்க?"

"ஆமாம்"

"நான் டாக்டர் சீமா பேசுறேன். நித்திலாவோட ஃப்ரெண்ட்"

"நீங்களா கா, எப்படி இருக்கீங்க?" என்றான் விருப்பமில்லாமல்.

"நான் நல்லா இருக்கேன். நித்தி இப்போ எப்படி இருக்கா? அவளுக்கு தலைசுத்தல் பரவாயில்லயா? அவ கருவை கலைக்க போறேன்னு சொன்னப்போ. நான் ரொம்ப அதிர்ச்சியாயிட்டேன். இதுக்காக அவ எவ்வளவு நாளா காத்துக்கிட்டு இருந்தா...!"

"அவங்க எவ்வளவு நாளா காத்துக்கிட்டு இருந்தாங்கன்னு தெரிஞ்சி, நீங்க எப்படி அவங்க கருவை கலைக்க ஒத்துக்கிட்டீங்க? அவங்களை நிறுத்த நீங்க முயற்சி பண்ணலயா? முன்னாடியே நீங்க எனக்கு ஃபோன் பண்ணி சொல்லி இருக்கலாம்ல? நான் அப்படி நடக்காம தடுத்திருப்பேனே... எங்க யாருக்கும் தெரியாம அவங்க அப்படி பண்ணிட்டாங்க" என்று கோபத்தில் கத்தினான் இனியவன்.

"எனக்கு தெரியும். அவ தனியா வந்த போதே நான் அதை புரிஞ்சுகிட்டேன். அவ குழந்தையை கலைக்கணும்னு சொன்னப்போ, அவளை நான் சமாதானப்படுத்த முயற்சி பண்ணேன். ஆனா அவ சொல்றத கேட்க தயாரா இல்ல. அதனால அவளுக்கு சும்மாவே மயக்க மருந்து மட்டும் கொடுத்து அபார்ஷன் பண்ணிட்டதா பொய் சொல்லிட்டேன்"

"பொய் சொன்னீங்களா? அப்படின்னா, அக்காவுக்கு நீங்க அபார்ஷன் பண்ணலையா?" என்றான் மகிழ்ச்சியோடு.

"இல்ல. நான் எப்படி அதை செய்வேன்? அவ புருஷன் மேல கோவமா இருக்கிறான்னு எனக்கு நல்லா புரிஞ்சுது. அவ குழப்பமா இருக்கா. இப்போ அதை செஞ்சுட்டு அதுக்கு பிறகு அப்படி ஒரு முடிவை எடுத்ததுக்காக நிச்சயம் வருத்தப்படுவா. இப்போதைக்கு அவகிட்ட இந்த உண்மையை சொல்லாதீங்க. முதல்ல அவளை சமாதானப்படுத்த முயற்சி பண்ணுங்க. அதுக்கப்புறம் சொல்லுங்க"

"ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அக்கா"

"அவ என் ஃப்ரெண்ட். அதை நீ மறந்துடாத" என்று புன்னகை புரிந்தார் சீமா.

"நீங்க செஞ்ச உதவி மறக்க மாட்டோம்" என்று அழைப்பை துண்டித்தான் இனியவன்.

கைபேசியை கட்டிலின் மீது வீசி,விட்டு ஆழ்வியை பார்த்து மகிழ்ச்சி புன்னகை சிந்தினான் இனியவன்.

"குழந்தை சேஃபா இருக்கு. டாக்டர் அந்த குழந்தையை அபாஷன் பண்ணலையாம்" என்றான் மிகுந்த மகிழ்ச்சியோடு.

"இந்த அதிசயம் எப்படி நடந்தது?"

"அக்காவோட ஃப்ரெண்ட் அவங்களை காப்பாத்திட்டாங்க"

"கடவுளுக்கு தான் நம்ம நன்றி சொல்லணும்"

"இப்போதைக்கு அக்கா கிட்ட இந்த விஷயத்தை சொல்லாத. அக்கா குழந்தையை கொஞ்சம் மிஸ் பண்ணட்டும். அப்போ தான் அவங்க இந்த மாதிரியான முடிவை மறுபடியும் எடுக்கணும்னு நினைக்க மாட்டாங்க"

"நல்லவங்களோட வாழ்க்கையிலயிருந்து கடவுள் கெட்டவங்களை மட்டும் தான் நீக்கி வைப்பாரு. நல்லவங்களை தவிர்க்க மாட்டார்" என்றாள் ஆழ்வி

அவளை சந்தோஷமாய் அணைத்துகொண்டு,

"அதனால தான் என் வாழ்க்கையில நீ வந்திருக்க" என்றான்.

"அக்காவுக்கு மனசை மாத்திக்க, இந்த குழந்தை ரொம்ப அவசியம்"

"ஆனா அக்கா கேரிங்கா இருக்கும் போது அவங்க ஸ்ட்ரெஸ் பண்ணிக்க கூடாது. ப்ளீஸ், என்னை எப்படி பார்த்துக்கிட்டியோ, அதே மாதிரி அக்காவையும் நீ தான் பாத்துக்கணும்"

"நீங்க என்னை ரெக்வஸ்ட் பண்றது அவசியமா?"

"இல்ல... நீயாவே அதை செய்வேன்னு எனக்கு தெரியும். இப்போதைக்கு இந்த குடும்பத்துக்கு உன்னை விட்டா வேற யாருமே இல்ல ஆழ்வி. உன்னை தவிர வேற யாரையும் என்னால நம்ப முடியல"

அவனைப் பார்க்க பாவமாய் இருந்தது ஆழ்விக்கு.

"இந்த பிரச்சனையை எப்படி கையாள்றதுன்னு நான் ரொம்பவே தவிச்சு போயிட்டேன். அதுவும் அக்கா பிரக்னண்டா இருக்காங்கன்னு தெரிஞ்சப்போ எனக்கு என்ன செய்யறதுன்னு புரியல. ஆனா நம்ம யாருமே எதிர்பார்க்காத ஒரு விதத்துல உண்மை வெளிய வந்துருச்சு. அக்காவே சித்திரவேலை நம்ம வீட்டை விட்டு துரத்தி அடிச்சிட்டாங்க. குழந்தையும் இப்போ சேப்பா இருக்கு"

"ஆனா அக்கா நொறுங்கிப் போய் இருக்காங்க"

"வேற வழி இல்ல. நம்ம அந்த விஷயத்துல எதுவுமே பண்ண முடியாது. குழந்தையாவது சேஃபா இருக்குன்னு நம்ம சந்தோஷப்பட வேண்டியது தான்"

அப்பொழுது இனியவனுக்கு குருவிடமிருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்றான் இனியவன்.

"இனியா, டிவியை ஆன் பண்ணி நியூஸ் பாரு" என்றான்

"என்ன ஆச்சு?" என்றபடி ரிமோட்டை எடுத்து டிவியை ஆன் செய்தான் இனியவன்.

*டாக்டரின் லாக்கப் மரன வழக்கில் ராஜா சர்மாவும், ரீனா சர்மாவும் கைது செய்யப்பட்டார்கள்* என்ற தலைப்புச் செய்திகள் ஓடிக்கொண்டிருந்தது.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top