14
உறங்கி எழுந்ததும் சாருவிற்கு வேலைகள் தலைக்கு மேல் நிறைந்து விடும்.காலை வித்யுத்தை எழுப்பியவள் அவனை குளிக்க கூறி விட்டு அதிதியை எழுப்பி அவளை குளிக்க வைத்து அவளுக்கு உடை அணிவித்து அந்த வயதிலும் நீளமாய் இருக்கும் அவள் முடியை பின்னி விடுவாள் .பின் அவளை வித்யுதிடம் விட்டு விடுவாள் அவளுக்கு உணவூட்டுவது வித்யுத் தான் .அதன் பின் இருவரையும் பள்ளியில் சென்று விடுபவள் பின் தங்கள் அலுவலகத்துக்கு சென்று பணிகளை செய்வாள் .அனைத்து பெண் குழந்தைகளும் தந்தையிடமே ஓட்டுதல் அதிகம் பெற்று
இருப்பர் ஆனால் அதிதிக்கோ அவள் அன்னை தான் வேண்டும் அனைத்திற்கும் அன்னை இல்லையேல் அண்ணன் அவள் தந்தையிடம் அத்தனை நன்றாக ஒன்றியதில்லை வித்யுதும் அப்படி தான் .அதை பல முறை சாரு சரி செய்ய நினைத்து பிரயத்தனம் செய்திருந்தாலும் அது பலனளிக்கவில்லை. அன்று பணி முடிந்து வருகையில் அவர்கள் இருவரையும் பள்ளியில் இருந்து அழைத்து வந்தவள் வழக்கம் போல் அனைத்து வேலைகளையும் செய்ய அவளுக்கு விஷ்வாவிடம் இருந்து அழைப்பு வந்தது .
அவனின் பேரை பார்த்ததும் முகம் பிரகாசிக்க எடுத்தவள் "ஹான் விஷ்வா சொல்லுங்க சாப்டீங்களா என்ன பண்றீங்க ?என்று கேட்க
அவனோ மௌனமாய் இருந்தான் .பின் ஏதோ சரி இல்லை என்று உணர்ந்தவள் "என்னாச்சு விஷ்வா எதுவும் பிரச்னையா? "என்க
அவன் "சாரு இங்கயே 6 மந்த்ஸ் இருக்குற மாறி வரும் சாரு என்ன பண்ண இப்போ sign பண்ணதுகாப்புறோம் இப்டி சொல்றாங்க ?"என்று கேட்க அவன் கூறியதில்
அவளுக்கு வருத்தம் அதிகம் இருந்தாலும் அதை மறுத்தவள் "பரவால்ல விஷ்வா நீங்க இருந்து முடிச்சுட்டு வாங்க இது உங்களோட dream ப்ராஜெக்ட் monthly twice வருவீங்கல்ல ?"என்று அவள் கேட்ட விதத்தில் please வாங்க என்றவாறு இருக்க
அவன் "கண்டிப்பா சாரு உன்ன பாக்காம என்னால எப்படி இருக்க முடியும் கண்டிப்பா வரேன் sorryda ."என்க
அவள் தடுமாறியவாறே "ப....பரவால்ல விஷ்வா டேக் கேர் உடம்ப பாத்துக்கோங்க டெய்லி கால் பண்ணுங்க மிஸ் யு அண்ட்..."என்று அவள் இழுக்க அவன் முடித்தான் "லவ் யு சாரு குட் நைட் என்றவன் தொலைபேசியிலேயே ஒரு முத்தத்தை அவனுக்கு கொடுத்தவன் அதை வைக்க சாருவிற்கு தான் அவனது இந்த பல நாள் பிரிவு மனதை பாரமாய் அழுத்தியது .
எப்பொழுதும் மாதம் ஒரு முறை கடைசி வாரம் வெளி ஊரிற்கு சென்று அங்கிருக்கும் தங்கள் தொழில்களை கவனித்து வருவான் தான் ஆனால் இத்தனை மாதங்கள் அவன் இல்லாமல் அவள் இருந்ததே இல்லை .கண்ணை மூடி பெருமூச்சை இழுத்து விட்டவள் என்றும் போல் உறங்க சென்றால் த ன் பிள்ளைகளுடன் .
3 மாதங்களுக்கு பிறகு .....
பிள்ளைகளுக்கு விடுமுறை விட்டு விட காலையிலேயே எழுந்து ஆட்டம் போட்டு கொண்டிருந்தனர் அந்த வாண்டுகள் அவர்களுடன் சமமாய் விளையாண்டு கொண்டிருந்தவள் தொலை பேசி அழைப்பில் விலகி எடுத்து பார்த்தால் அது அவளின் கல்லூரி தோழி வாசுகியின் அழைப்பு .
உற்சாகமாய் அதை எடுத்தவள் "ஹான் சுகி எப்படி இருக்க சாப்டியா நா சொன்ன காரியம் என்னாச்சு?"என்று வரிசையாய் அடுக்க அங்கே
அவளது தோழி வாசுகி "ஹே எக்ஸ்பிரஸ் train பொறுமை பொறுமை நல்லா இருக்கேன் .சாப்பிட்டேன் .நீ சொன்னதை செஞ்சாச்சு உன் husband வாடகைக்கு இருக்குற வீட்டை உன் பேர்ல வாங்கியாச்சு ஹே நீ சவுத் ல தான இருக்க ஏன் டெல்லில சம்மந்தமே இல்லாம வீட வாங்குன ?"என்க
அவளோ"அவரு ஒவ்வொரு தடவ பேசேலையும் அந்த வீட்டுல இருக்கேல சந்தோஷமாவும் நிம்மதியாவும் இருக்குனு அடிக்கடி சொல்லுவாருடி அதான் அவரோட பொறந்த நாளுக்கு அத வாங்கிட்டேன்" என்க
அவளோ "என்னமோப்பா அடியேய் நானும் டெல்லில தான இருக்கேன் எனக்கு கொழந்த பொறந்தப்போ வந்தவ அதுகாப்புறோம் என்ன பாக்கவே வரல பசங்களுக்கும் லீவு தான இங்க வாயேண்டி "என்க
அவளோ"ஆமாடி அவரோட birthdayku அவருக்கே தெரியாம அங்க வந்து surprise பண்ணனும்னு நெனச்சுருக்கேன் நாளைக்கு கெளம்பிருவேன் உன் வீட்டுல நாளைக்கு தங்கிக்கிறேன் ஓகேவா?"என்க
வாசுகியோ "இதை கேக்கணுமாடி தாராளமா வா உன் அண்ணன்(அவள் கணவனை சாரு அண்ணா என்றே அழைப்பாள் அவருக்கும் தங்கை இல்லாத காரணத்தால் அவளை தங்கையாகவே கருதுவார்) தான் உன்ன கேட்டுட்டே இருந்தாரு .பசங்களையும் கூட்டிட்டு வா .நாளைக்கு எப்போ flight?"என்க
அவளோ "6 :௦௦ மணிக்கு டி 10 :௦௦க்கு reach ஆய்ருவேன் "என்க
வாசுகியோ"நீ ஒண்ணும் பண்ண வேணாம் நா கார் அனுப்புறேன் வந்து சேறு byedi "என்றவள் அலைபேசியை வைத்து விட்டு நாளை தன் கணவனுக்காக தான் கொடுக்கப்போகும் இன்ப அதிர்ச்சியை நினைத்து சிரித்தவள் நிம்மதியாய் உறங்கினால்.
அடுத்த நாள் காலையில் கிளம்பியவர்கள் டெல்லியில் இறங்க அவர்களுக்காகவே காத்திருந்தனர் வாசுகியும் அவளது கணவனும் .
அவளை கண்ட வாசுகி அவளை ஓடி வந்து அணைத்து கொள்ள இவளும் அவளை அணைத்து கொண்டால் .பல நாள் பிரிவிற்கு பின் சந்திக்கும் தோழிகளின் மனமகிழ்ச்சியை வாய் வார்த்தையாளா கூற முடியும் .வாசுகியின் கணவன் சுரேஷ் "ஏன்மா சாரு friendah பாத்ததும் அண்ணனை மறந்துட்டியேம்மா" என்க
அவரிடம் சென்றவள் "இவ்ளோ பெரிய உருவத்தை மறப்பேனானா ?"என்று அவன் உயரத்தை வைத்து அவனை வழக்கம் போல் கேலி செய்ய
அவள் தலையில் வலிக்காமல் கொட்டியவன் "வாய் வாய் அப்டியே இருக்க "என்றவன் பின் குழந்தைகளிடம் திரும்பி ஹாய் மறுமக புள்ளைகளா எப்படி இருக்கீங்க ?"என்று வினவ
அவர்களிடம் வாரம் ஒரு முறையாவது தொலை பேசியில் போசுவதால் அவர்களுடன் மனதளவில் ஒன்றியே இருக்கும் குழந்தைகள் அவனிடம் சகஜமாக பேசி கொண்டே நகர வாசுகியும் சாருவும் தங்களுக்குள் பேசி கொண்டே மகிழ்வுந்திற்குள் ஏறியவர்கள் அவளின் வீட்டை நோக்கி பயணப்பட்டனர்.
அங்கே அவர்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் அவள் பிள்ளைகள் ஸ்னேஹாவும் ரித்விக்கும் வித்யுத்துடனும் அதிதியுடனும் ஒட்டிக்கொள்ள இவர்கள் மூவரும் தங்கள் அரட்டையை தொடர்ந்தனர்.அன்றைய நாள் மிகவும் இனிமையாக கழிய அடுத்த நாள் காலை எழுந்தவள் விஷ்வாவிற்கு மிகவும் பிடித்த சிகப்பு நிறத்தில் சேலை உடுத்தியவள் அவனிற்கு போன் செய்யாமல் போக்கு காட்டி கொண்டிருந்தாள் .
பின் கோயிலிற்கு சென்று வந்தவள் வித்யுத் மற்றும் அதிதியை வாசுகியின் பொறுப்பில் விட்டு விட்டு அவ்வீட்டின் வேறொரு சாவியை வாங்கிவிட்டு சென்றால்.
அவ்வீட்டிற்கு சென்றவள் அது பூட்டியிருக்க உள்ளே திறந்து சென்றவள் அது இருபுறமும் பூட்டும் படியான கதவை கொண்டதால் உள் வழியாக பூட்டி அவன் அறியாதவாறு செய்தால் .பின் அவனிற்காக உள் அறையில் காத்திருந்தவள் கதவு திறக்கும் சத்தம் கேட்டு அவனிற்காய் ஆவலாக வெளியே செல்ல போக ஏதோ பெண்ணின் சத்தமும் கேட்க சட்டென்று கதவின் பிடியிலிருந்து கையை எடுத்தவள் அவர்களின் உரையாடலை கேட்க மனம் விரும்ப கதவை லேசாக திறந்தவள் அதன் வழியாய் வெளியில் நடப்பதை பார்த்தால்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top