35 தூய்மை காதல்
35 தூய்மை காதல்
தனது கார் சீட்டில் சாய்ந்தமர்ந்து, கண்களை மூடி ஆழமாய் யோசித்தான் சிவா. ருத்ரன் எங்கே? பரமேஸ்வரனின் பேச்சை ஒட்டு கேட்பது யார்? இந்த விஷயத்தில் ருத்ரன் சம்பந்தப்பட்டிருக்க, ஏதாவது வாய்ப்பு இருக்குமோ? தனது நண்பன் உமாபதிக்கு ஃபோன் செய்தான் சிவா.
"சொல்லு சிவா"
"ருத்ரன் கேஸ்ல ஏதாவது பிராக்ரஸ் இருக்கா?
"இல்ல மச்சான்... சென்னை ரொம்ப பெரிய சிட்டி... அதுவும் பாப்புலேஷன் வேற எக்கச்சக்கம். எல்லாத்துக்கும் மேல, உங்க அண்ணன் இன்னும் சென்னையில தான் இருப்பார்னு நான் நம்பல. ஏன்னா,, அவர்கிட்ட ரொம்ப நல்ல கார் இருக்கு. இந்தியாவுல எங்க வேணும்னாலும் அவர் அந்த கார்ல போய்ட முடியும். உங்க யார் கையிலயும் சிக்க கூடாதுன்னு அவர் நினைச்சா, நிச்சயமா அவர் சென்னையில் இருக்க மாட்டாரு. ஏன்னா, அவருக்கு உன்னை பத்தி நல்லா தெரியும்"
"அதுக்கு என்ன தான் செய்றது?"
"அவருடைய கார் நம்பர் கிடைச்சா, நான் மேற்கொண்டு ப்ரொசிட் பண்ண சௌகரியமா இருக்கும்"
"அப்படின்னா, நீ இன்னும் வேலையை ஆரம்பிக்கலையா?"
"உங்க அண்ணனோட ஃபார்ம் ஹவுஸ்க்கு முன்னாடி தான் இருக்கேன்..."
"தட்ஸ் குட்"
அந்த இடத்தில், வெகு சொற்ப வீடுகளே இருந்தன... அதுவும், இங்கொன்றும், அங்கொன்றுமாய் வெகுவான இடைவெளியில் இருந்தன. ஃபோனில் பேசியபடி, தனக்கு வெகு அருகாமையில் இருந்த ஒரு வீட்டை நோக்கி நடக்க துவங்கினான் உமாபதி.
"நான் ருத்ரனோட கார் நம்பரை பத்தி மாமா கிட்ட கேட்டு பாக்குறேன். அவர் நிச்சயம் நோட் பண்ணியிருப்பார்னு நினைக்கிறேன்"
"அதை சீக்கிரம் செஞ்சா நல்லா இருக்கும்"
"இன்னொரு விஷயம் உமா, மாமா ஃபார்ம் ஹவுஸ்ல இருந்து வீட்டுக்கு வந்த போது அவரோட பாக்கெட்ல ஒரு மைக்ரோஃபோன் இருந்திருக்கு"
"மைக்ரோஃபோனா?"
"ஆமாம். அதை யார் அவர் பாக்கெட்டில் போட்டதுன்னு அவருக்கு தெரியல"
"அவரு உங்க அண்ணனை பார்க்க போனப்போ, அந்த மைக்ரோஃபோன் அவர் பக்கெட்ல இருந்துதா?"
"ஆமாம், ஆனா, அக்காவும் மாமாவும் அதை ருத்ரன் அவர் பாக்கெட்ல போட்டிருக்க வாய்ப்பே இல்லன்னு நிச்சயமா சொல்றாங்க"
யோசனையில் ஆழ்ந்தான் உமாபதி.
"உனக்கு ருத்ரன் மேல சந்தேகமா இருக்கா? " என்றான் சிவா.
"இருக்கலாம்... இல்லாமலும் இருக்கலாம்..."
"நம்ம மாமாவோட ஆப்போனன்ட் லாயர்ங்க மேல ஒரு கண்ணு வைக்கணும்"
"ம்ம்"
உமாபதிக்கு அதில் விருப்பமில்லை என்பது போல் உணர்ந்தான் சிவா.
"உங்க அண்ணனோட கார் நம்பரை மாமா கிட்ட கேட்டு சொல்லு" என்றான்.
"சரி" என்று அழைப்பை துண்டித்தான் சிவா.
உமாபதியின் கவனம் ருத்ரன் மீது மட்டும் தான் இருந்தது அவனுக்கு புரிந்தது.
அங்கிருந்த ஒரு வீட்டை வந்தடைந்த உமாபதி, அந்த வீட்டின் கதவை தட்டினான். முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் கதவை திறந்து, கேள்விக்குறியுடன் அவனைப் பார்த்தார்.
"சார், அந்த பார்ம் ஹவுஸில் இருந்தவர் எனக்கு ஃப்ரெண்ட். அவரு நேத்து நைட்ல இருந்து காணோம். உங்களுக்கு ஏதாவது விஷயம் தெரிஞ்சா கொஞ்சம் சொல்ல முடியுமா?"
தெரியாது என்பது போல் தலையசைத்துவிட்டு கதவை சாத்திக் கொண்டான் அந்த மனிதன். அங்கிருந்த மற்றொரு வீட்டை நோக்கி நடந்தான் உமாபதி. கதவை தட்டி விட்டு காத்திருந்தான். ஒரு வயதான பெண்மணி கதவை திறந்து, உமாபதியை பார்த்து முகம் சுருக்கினார். முன்பு கூறிய அதே கதையை அவரிடமும் கூறினான் உமாபதி. அவரும் தெரியாது என்று தலையசைத்து விட்டு கதவை சாத்திக் கொண்டார். ஏமாற்றமாய் போனது உமாபதிக்கு. அடுத்த வீடு அந்த வீட்டில் இருந்து வெகு தொலைவில் இருந்தது. என்ன செய்வது என்று யோசித்தபடி அங்கிருந்து நடந்தான். அப்பொழுது,
"இஸ்ஸ்..." என்ற சத்தம் கேட்டு, அங்கும் இங்கும் பார்த்தான். ஒரு பெண்மணி அந்த வீட்டின் ஜன்னல் வெளியே கை நீட்டி அவனை அழைத்தார். சுற்றும் முற்றும் பார்த்த படி அவரை நோக்கி சென்றான் உமாபதி.
"நேத்து ராத்திரி, அந்த ஃபார்ம் ஹவுஸ் பக்கத்துல ஒரு கார் நின்னுக்கிட்டு இருந்ததை நான் பார்த்தேன்" என்றாள் அந்த பெண் மெல்லிய குரலில்.
"என்ன கார்?" என்றான்.
"கருப்பு கலர் ஷவர்லெட் பீட்... நம்பர், TN 09, H 9999"
"இங்கிருந்து பார்த்தா, அந்த கார் அங்க நிக்கிறது உங்களுக்கு எப்படி தெரிஞ்சது?"
"எங்க அம்மாவுக்கு நேத்து நெஞ்சுவலி வந்துருச்சுன்னு அவங்க வீட்டுக்கு போனேன். அப்போ தான் நான் அந்த காரை பார்த்தேன். இன்னிக்கு விடியற்காலையில, நான் வீட்டுக்கு திரும்பி வரும் போதும், அந்த கார் அங்க தான் நின்னுகிட்டு இருந்தது"
"ஓ...,"
"அந்த காரை இதுக்கு முன்னாடி இந்த ஏரியாவில் நான் பார்த்ததே இல்ல. அது அந்த ஃபார்ம் ஹவுஸோட, எதிர்ல, லெஃப்ட் கார்னர்ல இருந்தது"
"தேங்க்யூ சோ மச். உங்களுக்கு ரொம்ப நல்ல அப்சர்வேஷன் பவர்"
"எனக்கு கார்னா ரொம்ப பிடிக்கும். செகண்ட் ஹாண்ட் கார் வாங்கலாம்னு பார்த்துக்கிட்டு இருக்கோம். அதனால தான் அந்த கார் மேல என்னோட கவனம் போச்சு"
"நீங்க இன்னைக்கு காலையில எத்தனை மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்தீங்க?"
"காலையில 6:00 மணிக்கு வந்தேன்"
"ரொம்ப தேங்க்ஸ் மேடம்" என்று நன்றி கூறிவிட்டு, அந்த இடத்தை விட்டு கிளம்பினான், யாருக்கோ ஃபோன் செய்த படி.
"சொல்லுங்க, உமாபதி சார்"
"நான் சொல்ற நம்பரை எழுதிக்கோங்க, பைரவன்."
"சொல்லுங்க சார்"
"TN 09 H 9999... இந்த கார் ஓனர் அட்ரஸ் எனக்கு வேணும்"
"அரைமணி நேரம் டைம் கொடுங்க சார்"
"ஷ்யூர்..."
அழைப்பை துண்டித்தான் உமாபதி. அந்த கார், ஃபார்ம் ஹவுஸ்க்கு அருகில் அன்று காலை வரை நின்று இருந்திருக்கிறது. ருத்ரன் நடு இரவே அங்கிருந்து புறப்பட்டு விட்டதாய் அந்த வீட்டின் காவலாளி கூறினான். அப்படி என்றால், அந்த காரில் இருந்தது யார்? எதற்காக அவன் அங்கு காத்திருக்க வேண்டும்? ஒருவேளை அது தற்செயலாக நடந்ததாக இருக்குமோ?
இதற்கிடையில்,
பரமேஸ்வரனுக்கு ஃபோன் செய்து, ருத்ரனின் கார் எண்ணை அவனிடம் கேட்டான் சிவா.
"ஆமாம். நான் அந்த நம்பரை நோட் பண்ணேன். TN 02 T 8467" என்றான் பரமேஸ்வரன்.
"தேங்க்ஸ் மாமா"
அழைப்பை துண்டித்த சிவா, தனக்குத் தெரிந்த ஒரு போலீஸ் அதிகாரிக்கு ஃபோன் செய்தான்.
"ஹலோ சிவா எப்படி இருக்கீங்க?"
"நல்லா இருக்கேன் சார். எனக்கு நீங்க ஒரு உதவி செய்யணுமே"
"தாராளமா செய்றேன்"
"ஒரு கார் எந்த பக்கம் போச்சுன்னு எனக்கு தெரியணும்"
"கார் நம்பர்?"
"TN 02 T 8467"
"ஓகே, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. நான் செக் பண்ணி சொல்றேன்"
அழைப்பை துண்டித்தார் அந்த போலீஸ் அதிகாரி. ருத்ரன் எப்பொழுதுமே தனது கார்களுக்கு ஃபேன்சி நம்பரை பெறுவது தான் வழக்கம். ஆனால், இந்த முறை அதை செய்ய அவனுக்கு நேரம் இருக்கவில்லை. அதனால் தான், ஃபேன்சி நம்பருக்காக காத்திராமல், கிடைத்த நம்பரை வாங்கிக் கொண்டு சக்தியை சந்திக்க சேலம் சென்றிருக்கிறான்.
ருத்ரனுக்கு பலதரப்பட்ட மாநிலங்களிலும், தமிழ்நாட்டின் சில மாவட்டங்களிலும், சில பண்ணை வீடுகளும், பங்களாக்களும், காட்டேஜ்களும், எஸ்டேட்டுகளும், இருக்கிறது என்பதை சிவா நன்கறிவான். இவற்றில் அவன் எங்கே இருக்கிறான் என்று எப்படி தேடி கண்டுபிடிப்பது? அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
ஓசூர்
மதிய உணவை சமைத்து, அதை ருத்ரனுடன் சேர்ந்து உண்டாள் சக்தி.
"உனக்கு ரொம்ப நல்ல கை பக்குவம் சக்தி" என்றான் ருத்ரன் சாப்பிட்டு முடித்து, தன் கைகளை துடைத்தவாறு.
மென்மையாய் அவனைப் பார்த்து புன்னகைத்தாள் சக்தி.
"இப்போ நீ என்ன செய்யப் போற?"
"கிச்சனை அரேஞ்ச் பண்ணலாம்னு இருக்கேன் "
"அதை அரேஞ்ச் பண்ண, நான் ஆளை அரேஞ்ச் பண்றேன். இப்போ நீ என்கூட வா" அவளை இழுத்துக் கொண்டு தங்கள் அறைக்கு வந்தான் ருத்ரன்.
அவன் கதவை சாத்தி தாளிட, அங்கிருந்த பெரிய ஜன்னலை நோக்கி ஓடிச் சென்றாள் சக்தி.
"இந்த இடம் ரொம்ப அழகா இருக்குங்க"
அங்கு வந்து அவளை பின்னால் இருந்து அணைத்துக் கொண்ட ருத்ரன்,
"உன்னைவிட ஒன்னும் அழகா இல்ல" என்றான் ரகசியமாய்.
"உங்களுக்கே இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலையா?" என்றாள் சக்தி சீரியஸாக.
"ஏன்? நீ உன்னை கண்ணாடியில் பார்த்ததில்லையா?" என்றான்
அதை கேட்டு சிரித்த சக்தி,
"இந்த இடத்தை எப்படி தேடி கண்டுபிடிச்சீங்க?" என்றாள்.
"ஒரு தடவை பெங்களூருக்கு கான்ஃபரன்ஸ்காக வந்திருந்தேன். அப்போ ஒரு புரோக்கர் இப்படி ஒரு பங்களா இருக்குன்னு என்கிட்ட வந்து சொன்னாரு. வந்து பார்த்தேன் எனக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு... வாங்கிட்டேன்"
"இந்த வீட்டைப் பத்தி உங்க அக்காவுக்கு தெரியாதா?"
"யாருக்கும் தெரியாது... சிவாவுக்கு கூட தெரியாது. அதனால தான் நான் உன்னை இங்க கூட்டிகிட்டு வந்தேன்"
"யார் சிவா?" என்றாள் சக்தி.
தன் புருவம் உயர்த்தினான் ருத்ரன். ஆம்... சக்திக்கு தான் சிவாவை பற்றி தெரியாதே...
"அவன் என்னோட ட்வின் பிரதர்..."
"ஓ... நீங்க ட்வின்ஸா?" என்றாள் ஆர்வமாக.
ஆமாம் என்று தலையசைத்தான் ருத்ரன்.
"அப்படின்னா, நீங்க ரெண்டு பேரும் பார்க்க ஒரே மாதிரி இருப்பீங்களா?"
"இல்ல... நாங்க ட்வின்சா இருந்தாலும், பார்க்க ஒரே மாதிரி இல்ல"
"ஓ...."
"ஒரு வெகேஷனுக்கு அக்காவை இங்க கூட்டிகிட்டு வரணும்னு நான் பிளான் பண்ணி வச்சிருந்தேன். ஆனா, அதுக்கு முன்னாடி எல்லாமே மாறிப்போச்சு"
"வருத்தப்படாதீங்க..."
"இல்ல... நான் வருத்தப்படல... நான் ஏன் வருத்தப்படணும்? நீ தான் என் கூட இருக்கியே"
"நான் உங்க கூட இருந்தா, நீங்க எதுக்காகவும் வருத்தப்பட மாட்டீங்கள?"
"மாட்டேன்..."
"ஒருவேளை நானே உங்களை அப்செட் பண்ணிட்டா, என்ன செய்வீங்க? அப்படியும் நடக்க வாய்ப்பிருக்கு இல்லையா?"
"ஆனா, என்னோட மூடை மாத்த நீ என் கூட இருப்பியே... அப்படி இல்லன்னா, உன்னை பார்த்து என் மூடை நானே மாத்திக்குவேன்"
"உங்களுக்கு ஏன் என் மேல இவ்வளவு காதல்?"
"அது தான் நான். எதை செஞ்சாலும் முழுசா செய்வேன்..."
"உண்மையை சொல்லனும்னா, சில சமயம் நீங்க என்னை ரொம்ப பயமுறுத்துறீங்க"
"ஓ... உன்னை கொன்னுடுவேன்னு
சொன்னேனே, அதை சொல்றியா?"
"இல்ல. நான் அதை பத்தி பேசல..."
"உனக்கு உண்மையிலேயே அதை நினைச்சு பயம் இல்லையா?"
"இல்ல. நான் உங்களை நினைச்சு தான் பயப்படுறேன். நான் எப்பவும் உங்க கூடவே இருக்கணும்"
"நிச்சயம் இருப்ப..."
"உங்களை தனியா விட்டுட்டு, உங்களுக்கு முன்னாடி நான் செத்துட கூடாதுன்னு நினைக்கிறேன்"
"அது உன்னால முடியாது... நான் உன்னை சாக விடமாட்டேன்... நீ இதை பத்தி பேசுறது கூட எனக்கு பிடிக்கல"
"சரி, உங்களுக்கு பிடிக்கலைன்னா, நான் அதை பத்தி பேசல"
"உனக்கு ஏன் என் மேல இவ்வளவு காதல்?"
"உங்களோட அன்பு ரொம்ப தூய்மையானது. அப்புறம் ஏன் நான் உங்களை மனசார காதலிக்க மாட்டேன்?"
அவனுடைய காதல் தூய்மையானது என்று அவள் கூறியது, அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டு அவளை ஆரத்தழுவிக் கொண்டான் ருத்ரன்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top