38 திருமண வேலைகள்
38 திருமண வேலைகள்
"ஐ லவ் யூ, பவித்ரா..."
தூயவனிடமிருந்து அந்த மூன்று மந்திர வார்த்தைகளை கேட்ட பவித்ரா திகைத்து நின்றாள். அவளுக்கு மகிழ்ச்சி தான் என்றாலும், குழப்பமாகவும் இருந்தது. உன்னிடம் நான் ஒன்று கூற வேண்டும் என்று வெகு நாட்களுக்கு முன்பாகவே தூயவன் கூற துவங்கி விட்டிருந்தானே...! கண் இமைக்காமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் பவித்ரா
அவள் முகத்திற்கு முன்னால் தன் விரல்களை அவன் சொடுக்க, அவள் பின்னோக்கி நகர்ந்தாள்.
"நான் என்னமோ சொன்னேன்... நான் ஐ லவ் யூ சொன்னா, நீயும் என்னை காதலிக்கிறாயா இல்லயான்னு நீ சொல்லணும்..."
"ஐ... ஐ..." என்று தடுமாறினாள்.
"ஐ... ஐ...ன்னா என்ன அர்த்தம்?"
"ஐ டூ லவ் யூ" என்றாள் தலை குனிந்தவாறு.
அவளது முகத்தை நிமிர்த்தினான் தூயவன்.
"வாழ்க்கை பூரா வெக்கப்பட்டுக்கிட்டே தான் இருக்க போறியா?"
மீண்டும் வெட்கப்பட்டாள் பவித்ரா.
"அப்படியெல்லாம் இருக்காதுன்னு நம்புறேன்..." என்றான் அழகாய் தன் தலையை சாய்த்து.
பவித்ரா புன்னகை புரிந்தாள்.
"உண்மையிலேயே நீ என்னை காதலிக்கிறாயா?"
"யாரு தான் உங்களை காதலிக்க மாட்டா?"
"நான் மத்தவங்களை பத்தி பேசல... உன்னை த்தி தான் பேசுறேன்..."
"நான் உங்களை ரொம்ப காதலிக்கிறேன்"
"எப்போதிலிருந்து?"
நம்ம கல்யாணம் நிச்சயமானதிலிருந்து"
"அப்படின்னா, கடந்த ரெண்டு மணி நேரமா நீ என்னை காதலிக்கிற... அப்படியா?" என்றான் அதிர்ச்சியாக.
அவள் ஆம் என்று தலையசைத்தாள்.
"அப்படின்னா, அதுக்கு முன்னாடி நீ உனக்கு என்னை பிடிக்காதா?"
"அப்பவும் எனக்கு உங்களை பிடிக்கும். ஆனால் காதல் வித்தியாசமானது..."
"எப்படி?"
"நமக்கு யாரை வேணும்னாலும் பிடிக்கலாம்... ஆனா, வாழ்க்கை பூரா நம்ம கூட பயணிக்க போறவரை மட்டும் தான் நம்மால காதலிக்க முடியும்"
"பரவாயில்லயே... நீ ரொம்ப நல்லா பேசுற. இந்த மாதிரி அடிக்கடி ஏதாவது பேசு. கேட்க ரொம்ப நல்லா இருக்கு" என்று ஒரு தலையணையை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டான்.
இதற்கிடையில்...
வெண்மதி தனக்கு ஃபோன் செய்வதை பார்த்து சந்தோஷப்பட்டான் சந்தோஷ். அந்த அழைப்பை உடனடியாக ஏற்றான்.
"மதி..."
அவனது குரலில் பதற்றத்தை உணர்ந்தாள் வெண்மதி.
"வீட்டுக்கு வாங்க" என்றாள் நேரடியாக.
"வீட்டுக்கா? ஏன் மதி? ஏதாவது பிரச்சனையா?"
"ஏதாவது பிரச்சனையா இருந்தா மட்டும் தான் எங்க வீட்டுக்கு வருவீங்களா?" என்றாள் தன் சந்தோஷத்தை காட்டிக் கொள்ளாமல்.
"இல்ல, இல்ல, அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல..." என்று நீண்ட மூச்சை இழுத்து விட்டு,
"ஆன்ட்டி என் மேல அப்செட்டா இருக்காங்க. அதனால தான் கேட்டேன்"
"ஆனா, நானும் தூயாவும் உங்க மேல அப்செட்டா இல்ல"
"நான் ஏன் உங்க வீட்டுக்கு வரணும்னு சொல்ற?"
"தூயா உங்ககிட்ட எதோ முக்கியமான விஷயம் பேசணுமாம்"
"முக்கியமான விஷயமா?"
"ஆமாம்"
"அவர் எதைப் பத்தி என்கிட்ட பேசப்போறார்னு உனக்கு தெரியாதா?"
"தெரியும்"
"எதைப்பத்தி, மதி?"
"நம்ம கல்யாணத்தைப் பத்தி"
"ஆனா ஏன்..."என்று ஏதோ மேற்கொண்டு கூறப்போனவன் சற்றே நிறுத்தி,
"இப்போ நீ என்ன சொன்ன?" என்றான்
"நான் என்ன சொன்னேனோ அதைத்தான் சொன்னேன்"
"நீ சொன்னது உண்மையா? நான் கனவு ஒன்னும் காணலயே...?"
"உங்களுக்கு சந்தேகமா இருந்தா கிள்ளி பார்த்துக்கோங்க"
"நான் வரேன்" என்று அழைப்பை துண்டித்து விட்டு அவர்களது வீட்டை நோக்கி புறப்பட்டான் சந்தோஷ்.
தன் கைபேசியை பார்த்து புன்னகை புரிந்தாள் வெண்மதி.
....
தனது துப்பட்டாவின் முனையை முறுக்கி கொண்டிருந்த பவித்ராவை பார்த்து,
"பவித்ரா, உன்னை பேச வைக்க நான் ஏதாவது டாபிக் கொடுக்கணுமா?" என்றான்.
"என்னை பேச சொல்றதுக்கு பதில், நீங்க ஏதாவது பேசலாமே?" என்றாள் அவள்.
"இதுவும் நல்ல ஐடியா தான். ஆனா, நான் பேசுறது எல்லாம் உனக்கு பிடிக்குமான்னு எனக்கு தெரியலயே"
"ஒன்னும் பிரச்சனை இல்ல. நீங்க எக்கனாமிக்ஸ் பத்தியும், ஷேர் மார்க்கெட் பத்தியும் பேசினாலும் நான் கேட்பேன்" என்றாள் சாதாரணமாக.
அதைக் கேட்டு தூயவன் முகத்தை சுருக்கினான்.
"என்னது? எக்கனாமிக்ஸ்... ஷேர் மார்க்கெட்டா?" என்று சிரித்தான்.
அவனை விசித்திரமாய் பார்த்தாள் பவித்ரா, இப்பொழுது அவள் என்ன கூறிவிட்டாள் என்று அவன் இப்படி சிரிக்கிறான்?
"நீ என்னை ரொம்ப போரானவன்னு நினைச்சுகிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன்"
சங்கடத்துடன் சிரித்தாள் பவித்ரா.
"நான் நம்ம ஃப்யூச்சரை பத்தி உன்கிட்ட பேசலாம்னு நெனச்சேன்" என்று அவன் கூற, வெட்கத்தோடு புன்னகை புரிந்தாள் பவித்ரா.
"உனக்கு எத்தனை குழந்தைகள் வேணும், பவித்ரா?" என்று அவன் கேட்க, அதிர்ச்சியோடு விழி விரித்து அவனைப் பார்த்தாள் பவித்ரா.
"நான் என்ன கேட்டுடேன்னு நீ அப்படி பார்க்கிற? நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா?" என்றான்.
பவித்ரா யோசனையில் ஆழ்ந்தாள் அவன் குணமாவதற்கு வெறும் இருபது சதவீதம் தான் வாய்ப்பு இருக்கிறது என்று கூறிவிட்ட பிறகு, அவன் எப்படி இவ்வளவு நம்பிக்கையோடு பேசுகிறான்?
"நீங்க இவ்வளவு நம்பிக்கையோட இருக்கிறத பார்க்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நம்பிக்கை தான் நம்மளை குணப்படுத்தும்"
"குணப்படுத்துமா? நீ எதை பத்தி பேசுற, பவித்ரா?"
"உங்க ட்ரீட்மென்ட் பத்தி தான் பேசுறேன். நம்ம தான் உங்க ட்ரீட்மென்ட்காக அமெரிக்காவுக்கு போறோம் இல்ல?"
"ஓ, நீ அதை பத்தி பேசுறியா?"
"ஆங்..."
"ஆமாம் எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு" என்றான் புன்னகையோடு.
"அதனால தான் நான் உங்களை சிங்கம்னு சொன்னேன்" என்று அழகாய் சிரித்தாள்.
"என் நம்பிக்கையோட அளவு என்னன்னு நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நீயே தெரிஞ்சிக்குவ"
"சந்தோஷ் அண்ணன் இப்போ இங்க வருவாரா?"
"ஆமாம், அக்கா இந்நேரம் அவருக்கு ஃபோன் பண்ணி இருப்பாங்க. அவர் வந்துகிட்டு இருப்பார்"
"சந்தோஷ் அண்ணன் அக்காவை ரொம்ப காதலிக்கிறார்னு நினைக்கிறேன்"
"அக்காவும் அவரை ரொம்ப காதலிக்கிறாங்க."
"அவங்க உங்ககிட்ட சொன்னாங்களா?"
அவங்க என்கிட்ட சொல்லணும் எந்த அவசியமும் இல்ல. எனக்கே தெரியும். அவங்க வாழ்க்கையில ரொம்ப மோசமான காலகட்டத்தை கடந்து வந்திருக்காங்க. அதனால இப்போதிலிருந்து அவங்க சந்தோஷமா இருக்கணும்னு நான் விரும்புறேன்" என்றான்.
"அக்காவோட புருஷன் தாலி கட்டும்போது ஸ்டேஜ்ல விழுந்துட்டாருன்னு சொன்னீங்க. அக்காவை நீங்க அங்க இருந்து கூட்டிகிட்டு வந்துட்டீங்க. அப்படி இருக்கும் போது, அவர் எப்போ இறந்து, அக்கா விதவையானாங்க?"
"உனக்கு அதைப் பத்தி தெரியாதா?"
தெரியாது என்று தலையசைத்தாள்.
"அவன் ஒரு மொடா குடிகாரன். நான் கல்யாணத்தை நிறுத்தி, அக்காவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன். வழக்கம் போலவே மாதேஷ் அங்கிள் தீராஜோட அம்மா அப்பாவை வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்து, எங்க அம்மா அப்பாவை சமாதானப்படுத்த முயற்சி பண்ணினார். அப்போ நான் வீட்ல இல்ல. அவனோட அப்பா அம்மா, எங்க அப்பா அம்மா கிட்ட அவனை அடிக்ஷன் சென்டருக்கு அனுப்பி, அவனை திருத்தி கூட்டிகிட்டு வறோம்னு ப்ராமிஸ் பண்ணாங்க. அதை எங்க அப்பா உடனே ஒத்துக்கிட்டாரு"
"அப்புறம்?"
"குடிகாரன், குடிகாரனா தானே இருப்பான்! அடிக்ஷன் சென்டருக்கு போறதுக்கு முன்னாடி, ஃபிரண்ட்ஸ் கூட ஒரு தடவை பார்ட்டி வைக்கணும்னு நினைச்சான் தீரஜ். அந்த பார்ட்டியை முடிச்சிட்டு திரும்பி வரும் போது அவனோட கார் ஆக்சிடென்ட் ஆகி, அவன் ஸ்பாட்லயே அவுட்"
"அடக்கடவுளே...!"
"ஆமாம், அவனுடைய சாப்டர் முடிஞ்சு போச்சு"
சந்தோஷ் பளீரென்ற புன்னகையோடு உள்ளே நுழைவதை அவர்கள் பார்த்தார்கள்.
"வாங்க சந்தோஷ்"
"எப்படி இருக்கீங்க, தூயவன்?"
"ரொம்ப நல்லா இருக்கேன்னு சொல்ல முடியாது. இந்த பொண்ணு என்கிட்ட பேசவே மாட்டேங்குறா..."
முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு அவனை ஏறிட்டாள் பவித்ரா.
"ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க தூயவன். அவங்க இப்ப தான் இப்படி இருப்பாங்க. கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு நிமிஷம் கூட வாய் மூடாம பேச போறாங்க" என அவன் கூற,
"அப்படியா பவித்ரா?" என்று அவளை கிண்டலாய் கேட்டான் தூயவன்.
"ஆமாம், நான் பேசுறதை கேட்டு, நீங்க என்கிட்டயிருந்து ஓடிப் போக போறீங்க" என்று கூறியவாறு கட்டிலை விட்டு எழுந்து நின்றாள்.
அவள் கையைப் பிடித்து இழுத்து மீண்டும் அவளை அமர வைத்து,
"எங்க போற நீ?" என்றான்.
"நான் போறேன்... சந்தோஷ் அண்ணன் தான் உங்ககிட்ட பேசறதுக்கு வந்துட்டாருல்ல?" என்றாள்.
"வெயிட் பண்ணு" என்று கூறிவிட்டு சந்தோஷை பார்த்த அவன்,
"சந்தோஷ், அம்மாவையும் அக்காவையும் கூப்பிடுங்க" என்றான்.
"நான் வர்றதை மதி பார்த்தா. அவ ஆன்ட்டியை கூட்டிக்கிட்டு வருவாள்னு நினைக்கிறேன்" என்றான்.
சந்தோஷ் கூறியபடி குணமதியுடன் வந்தாள் வெண்மதி. ஓடிச் சென்று குணமதியின் பக்கத்தில் நின்று கொண்டாள் பவித்ரா.
"உக்காருங்க சந்தோஷ்" என்றான் தூயவன்.
ஒரு நாற்காலியை இழுத்து போட்டு தூயவனுக்கு முன்னால் அமர்ந்தான் சந்தோஷ்.
"நீங்க அக்காவை கல்யாணம் பண்ணிக்க விருப்பத்தோட இருக்கீங்கன்னு நினைக்கிறேன்"
"அதுல என்ன சந்தேகம்? நான் ஆரம்பத்தில் இருந்தே அவளை கல்யாணம் பண்ணிக்கணும்னு தான் நினைச்சேன்"
"ஆனா நீங்க இன்னும் பத்து நாள்ல ஃபிரான்சுக்கு போறீங்க" என்று அவன் கூற, வெண்மதியை பார்த்தான் சந்தோஷ்
"நான் என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க தூயவன்?" என்றான்.
"நான் பவித்ராவை கல்யாணம் பண்ணிக்க போறேன். எங்க கல்யாணம் அடுத்த வாரம் ஃபிக்ஸ் ஆகி இருக்கு. நீங்களும் அக்காவை கல்யாணம் பண்ணிக்க தயாரா?"
"நிச்சயமா... எங்க கல்யாணத்தை சிம்பிளா நடத்துங்க. நான் அவளை என்னோட ஃபிரான்ஸ்க்கு கூட்டிக்கிட்டு போறேன்"
"அப்படின்னா பிரிப்பரேஷன்சை ஸ்டார்ட் பண்ணுங்க"
"க்ளாட்லி..."
"நம்ம ரெண்டு பேரோட அப்பாவையும் கல்யாணத்துக்கு கூப்பிடுங்க" என்றான் தூயவன்.
வெண்மதியும் குணமதியும் அவனை அதிர்ச்சியோடு பார்த்தார்கள்.
"ஆனா, தூயா..." என்று வெண்மதி ஏதோ சொல்ல போக,
"அக்கா, அவங்க பிள்ளைகளோட கல்யாணம் நடக்குது. அவங்களும் வரட்டும், கா" என்றான்.
சந்தோஷும் வெண்மதியும் குணமதியை பார்த்தார்கள்.
"மாம், இதுல உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கா?" என்றான் தூயவன்.
அமைதியாய் நின்றார் குணமதி.
"மாம் பயப்படுறாங்கன்னு நினைக்கிறேன். அவங்க புருஷனை கண்ணு முன்னாடி பார்த்தா, அவங்க உருகிடுவாங்க. நான் சொல்றது சரி தானே மாம்?" என்றான் கிண்டலாய்.
அவனை பார்த்து முறைத்த குணமதி,
"அவர் வரட்டும். நான் யாருன்னு அவருக்கு காட்டுறேன்" என்றார்.
"அப்படி போடு..." என்று சிரித்தான் தூயவன்.
அவனை வெண்மதியும் பவித்ராவும் குழப்பத்தோடு பார்த்தார்கள்.
"தூயா, உனக்கு அவங்க மேல கோவம் இல்லயா?" என்றாள் வெண்மதி.
"நிறைய இருக்கு கா..."
"அப்புறம் எதுக்காக அவங்க கல்யாணத்துக்கு வரணும்னு நீ நினைக்கிற?"
"அதனால தான் அவங்க கல்யாணத்துக்கு வரணும்னு நினைக்கிறேன்"
"நீ என்ன சொல்ற?"
"ரிலாக்ஸா இருங்க கா. எல்லாத்தையும் ஓப்பனா சொல்ல முடியாது. நான் சொல்றது சரி தானே சந்தோஷ்...? இல்ல, இல்ல, சரி தானே மாமா?" என்றான்.
அவன் ஆம் என்று கூற, கள்ள புன்னகை வீசினான் தூயவன்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top