கலாட்டா 16

"மாம்ஸ்....நீங்க வேற லெவல், எல்லாம் ப்ளான் பண்ணிட்டு வந்துட்டு, இவ்வளவு நேரம் அமைதியா இருந்திருக்கிங்க, பாவம் சக்தி அத்தை, வாலண்டரியா வந்து டேமேஸ் ஆகிட்டாங்க" என்றாள் பவி.

"அடிப்பாவி அப்போ என்னைப் பார்த்து ப்ளேபாய் லெவலுக்கு உன் அத்தை பேசினாங்க, நான் பாவம் இல்லையா?" என அப்பாவி முகத்துடன் கேட்டான் சிவா.

"சாரி மாம்ஸ் சும்மா தான் அப்படி சொன்னேன், நீங்க சூப்பர் மாமா, அக்கா கொடுத்து வச்சவ, உங்களுக்கு ஒரு தம்பி இருந்திருந்தா என் ரூட்டும் கிளியர் ஆகிருக்கும், பட் மை டைம் நீங்க ஒரே புள்ளயா போயிட்டிங்க" என்ற பவியை பார்த்து கண்ணடித்த சிவா, "பவி, நீ கவலைப்படாத, நானே உன்னையும் கல்யாணம் பண்ணிக்குறேன்" என்றான் நக்கலாக. "அட ஆசையப்பாரு, முதல்ல என் அக்காவ கல்யாணம் பண்ணிக்கிட்டு சமாளிக்க முடியுதானு பாருக்க" என அவளும் சிவாவை வம்புக்கு இழுத்தாள்.

இவர்களின் கலகலப்புப் பேச்சில் நேரம் போனதே தெரியவில்லை, சூரியன் தன் பணியை முடித்துவிட்டு ஓய்வெடுக்க மேற்கு நோக்கி நகர்ந்தது.

"தம்பி, இந்தாங்க " என காப்பி டம்ளரை நீட்டினாள் பரிமளம். "அய்யய்யோ நேரம் போனதே தெரியாம அரட்டை அடிச்சிட்டு இருக்கோம்" என கூறி மடமடவென காப்பி குடித்துவிட்டு, "அத்தை காப்பி டேஸ்ட் சூப்பர்" என பரிமளத்தின் மனம் குளுரும்படி ஒரு சர்டிபிகேட் வழங்கிவிட்டு,  அனைவரிடமும் விடைப்பெற்றுக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் சிவா.

சிவா சென்றப்பின் வீடே அமைதியாக இருந்தது. "அம்மா மாம்ஸ் இருந்த வர எப்படி கலகலப்பா இருந்தது பத்தியா வீடு" என்றாள் பவி. "ஆமாம் பவி, தம்பி ரொம்ப நல்ல குணம் கொண்ட புள்ள" என்றாள் பரிமளம்.

"ம்ம்.. எனக்கும் இப்படித் தான் மாப்பிள்ளை பார்க்கனும் புரியுதா? " என்றாள் பவி.
"இன்னும் காலேஜே முடிக்கல அதுக்குள்ள மாப்பிள்ளை பத்தி பேசுது பாரு கழுதை, போ போயிட்டு ஒழுங்கா படிக்கிற வழியப்பாரு" என அவளை துரத்திவிட்டாள் பரிமளம்.

"ச்சே இந்த ஓல்டு ஜெனரேசனே இப்படித்தான், ஏதாச்சும் பேசினா ஆப் பண்ணி அனுப்பி விட்டிடுவாங்க" என புலம்பிக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள் பவி.

தொட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த பார்வதியின் கைப்பேசி அலரல் சப்தம் வீடு முழுக்க கேட்க, வேகமாக ஓடிவந்து எடுத்தாள் பார்வதி, மறுமுனையில் சிவா.

"ஹேலோ, என்னங்க இப்போ தான் கிளம்பனிங்க அதுக்குள்ள போன்??" என பார்வதி பேசிக்கொண்டிருக்க, "அம்மா... எந்த ஊரு நீங்க, இந்த தம்பிக்கு ஆக்சிடன்ட் ஆகிருக்கு மா" ஆஸ்பிட்டல்ல அட்மீட் பண்ணிருக்கோம், உங்ககிட்ட தான் கடைசியா இந்த தம்பி பேசிருக்கு அதான் இந்த நம்பருக்கே போட்டேன்" என்றார் எதிர்முனையில் பேசியவர்.

பார்வதிக்கு என்ன பேசுவது என்றே புரியாமல் அழ துவங்க, பவி ஓடி வந்து அந்த போனை வாங்கி பேசினாள். அடுத்த பத்து நிமிடத்தில் அனைவரும் மருத்துவமனையை அடைந்தனர். அங்கே சிவா கையில் கட்டுடன் மயக்க நிலையில் இருந்தான்.

சுப்பையா டாக்டரை பார்த்து விபரங்களை அறிந்தார். "பார்வதி, ஒன்னும் இல்லை டா, சின்ன அடி தான் இரண்டு வாரம் ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடும் அப்படினு டாக்டர் சொல்லிட்டாரு, தம்பி இன்னும் பத்து நிமிசத்துல கண் முழிச்சிடும், சிவா அம்மாக்கு தகவல் சொல்லனும் நம்பர் உன் கிட்ட இருக்கா தாயி" என கேட்டார்.

"இருக்கு அப்பா, நான் போன் பண்ணி தரேன், நீங்க  பேசுங்க" என கூறி நம்பரை டயல் செய்துக்கொடுத்தாள் பார்வதி.

சுப்பையா நடந்ததை கூறி அவர்களை அழைத்தார். பதரியடித்துக்கொண்டு சிவாவின் பொற்றோர்  அங்கே வந்து சேர்ந்தனர். இந்தச்செய்தி சக்திக்கும் தெரியவர அவர்களுக்கும் வந்து சேர்ந்தனர்.

சிவா ஒரே பிள்ளை என்பதால் சரசுக்கு அவன் மீது சிறு கீரல் பட்டால் கூட தாங்க இயலாது. மேலும் அவன் பார்வதியின் ஊருக்கு சென்று அவளை பார்க்கப்போகும் விசயத்தையும் சரசுவிடன் கூறவில்லை. இவை யாவும் சரசுவின் மனதில் பெரிய குழப்பத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.

சரசுவின் மன அலையில் ஓட்டத்தை தன் பார்வையாலே அளந்துவிட்டாள் சக்தி, தன் பங்கிற்கு செய்ய வேண்டிய வேலையை செய்யாமல் விட்டாள் அவளுக்கு மனம் தாங்காது, எனவே சரசு பக்கம் சென்று நின்றாள்.

"அக்கா, என்னக்கா தம்பிக்கு இப்படி ஆகிடுச்சி, நான் மதியம் தம்பிய வீட்டுல பார்க்கும் போதே சொன்னேன், இருட்டுரதுக்குள்ள வீடு போயி சேருப்பானு, இதெல்லாம் என்னனு சொல்லுரது, தம்பியோட நேரமோ இல்ல அந்த பார்வதியோட நேரமோ தெரியல" என பேசிவிட்டு அவளின் முகத்தை பார்க்க, சரசுக்கு கோபம் உச்சிக்கு ஏறி இருந்தது.

"என்னது மதியம் பார்த்தியா?" என சரசு கேட்க, "அட உங்க கிட்ட சொல்லிட்டு வரலையா? மதியம் இங்க அண்ணன் வீட்டுல பார்வதி கையால சமைச்ச சாப்பாட்டை தான் சாப்பிட்டுச்சி" என தன் வேலையை சிறப்பாக செய்தாள் சக்தி.

தன்னிடம் கூறாமல் சென்றது, சாப்பிட்டது, இப்போது அடிப்பட்டு இருப்பது என சரசுவின் மனம் அனைத்தையும் எண்ணி கோபமாய் கொப்பளிக்க, இதனைப்பார்த்த சரசுவின் கணவர் அவளை சமாதானப்படுத்த முயற்சித்தார்.

"இல்லைங்க, இது வர சிவா என்கிட்ட சொல்லாம எங்கயுமே போனது இல்ல" என சரசு கூற, " அவன் திடீரென கூட ப்ளான் போட்டு போயிருப்பான், உன்கிட்ட வீட்டுக்கு வந்து சொல்லலாம்னு நினைச்சிருப்பான் அதுக்குள்ள இப்படி ஆகாடுச்சி" என்றார் சிவாவின் தந்தை சங்கரன்.

எவ்வளவு எடுத்துக்கூறிமும் சரசுவின் மனம் சமாதானம் அடையவில்லை, இவை அனைத்தையும் பார்வதி பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். சக்தி கூறியதையும் பார்வதி கேட்டுக்கொண்டுதான் இருந்தாள்.

பார்வதியின் நேரமோ சிவாவின் நேரமோ என சக்தி கூறியவது பார்வதியின் மனதில் அம்பினை பாய்ச்சியதைப்போல இருந்தது. இவை  யாவையும் வெளிகாட்டிக்கொள்ளாமல் அமைதியாக சிவா எப்போது கண் விழிப்பான் என அவனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

சரசுவின் கோபத்திற்கு தெரிந்தோ தெரியாமலோ ஆளாகிவிட்டோம், சிவா விழித்ததும் அவர்களிடம் இருவரும் சேர்ந்து மன்னிப்பு கேட்டுவிட வேண்டும் என பல மன கணக்குகள் போட்டு வைத்தாள் பார்வதி, அவை யாவும் சுக்குநூறாக உடையும் வண்ணம் இருந்தது சரசுவின் பேச்சி.

"நீங்க எல்லாரும் உங்க வீட்டுக்கு கிளம்புங்க, சிவா விழிச்சதும் நாங்க டிஸ்சார்ஜ் பண்ணி அவன கூட்டிட்டு போகிறோம்" என்றாள் சரசு.

அனைவரும் அவளை குழப்பத்துடன் பார்த்தனர். சுப்பையாவுக்கு என்ன பேசுவது என்றே புரியாமல் அமைதியாக நின்றார்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top