கலாட்டா 11

"எனக்கு பிடிக்கலனா நீங்க வீட்டில கேட்கும் போதே சொல்லிருப்பேனே, இன்னும் நான் என்ன சொல்லனும்னு 
நீங்க எதிர்பாக்கரிங்க?" என்றாள் பார்வதி.

"ஐய்யய்யோ கண்டுபிடிச்சிட்டாளே, இவ வாயில இருந்து பிடித்திருக்கு, ஐ லவ் யூ என்று சொல்ல வைக்கவேண்டுமென பார்த்தால், முடியாது போலிருக்கே" என மனதிற்குள் எண்ணிக் கொண்டு சற்று வெறுமையுடன், "சரிங்க மேடம், நான் போனை வைக்குறேன்" என்றான்.

வைக்காதே மடையா, உன்னுடைய வார்த்தைகளுக்காகத்தான் செவி ஏங்கிக்கொண்டு இருக்கிறது, உன்னுடைய குரலை கேட்டால் என் மூளையும் சற்றே மங்கித்தான் போய்விடுகிறது, உனது சிரிப்பென்னும் அலையில்  எனது மனம் ஒய்யாரமாக ஏறி படகு சவாரி செய்கிறது, இதையெல்லாம் நான் எவ்வாறு உன்னிடம் உறைப்பது, பெண்களுக்கு மட்டுமே உரிதான நாணம் என்னை போட்டு வதைக்கிறது.
வார்த்தைகள் யாவும் வாய்வரை வந்து நிற்க, அவற்றை வெளியே விடாமல் தடுப்புச்சுவராய் தடுத்து நிறுத்தி இருக்கிறது என் உதடுகள். என் மனம் புரியுமாயின் நீ உன் அழைப்பை துண்டிக்கமாட்டாய், என்ற பார்வதியின் மன எண்ணங்கள் புரிந்ததோ இல்லையோ, அவள் இன்னும் சற்று நேரம் தன்னுடன் பேச நினைக்கிறாள் என்பதை மட்டும் சரியாக புரிந்துக்கொண்டு அழைப்பை துண்டிக்காமல் அமைதியாகவே போனை காதில் வைத்திருந்தான் சிவா.

"இன்னும் எவ்வளவு நேரம் அமைதியா ரிசிவரை காதில் வைத்திருக்கபோகிறாய் பார்வதி" என்ற சிவாவின் குரலைக்கேட்டப் பின்பு தான் பார்வதி நன்னிலையையே உணர்ந்தாள்.

"அடக்கடவுளே,  சாரிங்க நீங்க போனை வச்சிட்டு இருப்பிங்கனு நினைத்துதான்...." என பார்வதி இழுக்க, "நினைத்துதான் கனவு உலகுக்கு கிளம்பிட்டியோ" என சிவா கிண்டலடிக்க,  பார்வதி வெட்கத்தால் தலைகுனிந்தாள்.

"சரி, கொஞ்சம் வேலை இருக்கு, நாளைக்கு பேசுரேன்"  என்று கூறிவிட்டு சிவா போனை வைக்க, பார்வதியின் மனமோ ரெக்கை கட்டி பறந்தது.

தனது துணையாகப்போகிறவளின் விருப்பத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் ஒருவன் தன் கணவனாக போகிறான் என்ற எண்ணமே பார்வதியை மேலும் மகிழ்ச்சியடைய வைத்தது.

அடுத்த பத்து நிமிடத்தில் மீண்டும் பார்வதியின் போன் அலர, "அடடா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இங்கிருந்து போனதில் இருந்தே ஒரே போன் தான் போல, பேசாம இங்கயே தங்கிட்டு நாளைக்கு போக சொல்லிருக்கலாமோ??" என பவித்ரா நக்கலடிக்க, "ஒத வாங்குவ நீ" என கூறியவாரே போனை எடுத்துப்பார்த்தாள்.

'சரசு அத்தை' என திரையில் பெயர் வர, ஆவலாய் எடுத்தாள் பார்வதி. "அம்மா பார்வதி...." என்று வந்த குரலுக்கு " சொல்லுங்க அத்தை பார்வதி தான் பேசுரேன்" என்றாள்.
"என்னம்மா செம வேலையா??, இத்தனைப்பேர் வந்து போனாவ் அந்த வீட்டின் நிலை எப்படியிருக்கும் என்று எனக்கும் தெரியும், அதான் நையிட் டின்னர் வாங்கி கொடுத்திடுனு மணி கிட்ட சொல்லிட்டு வந்தேன், மறக்காம வாங்கிக்கோங்க"  என்ற சரசுவின்  அன்பான வார்த்தைகள் பார்வதிக்கு மிகவும் வித்தியாசமான ஒரு உணர்வை தந்தது.

வீட்டில் இருக்கும் அனைவரின் மீதும் அக்கறைக்கொண்டு யோசிக்கும் சரசுவின் குணம் பார்வதிக்கு பிடித்திருந்தது.

"சரிங்க அத்தை, நீங்களும் ஓய்வெடுங்க, பயண களைப்பு அதிகமா இருக்கா?" என பார்வதி வினாவ, "ஆமாம்மா, வயசாயிடுச்சில்ல" என்றாள் சரசு. இவர்களின் வழக்கமான பேச்சு சற்று நேரம் நீள, பரிமளத்தின் அழைப்புக்குரல் கேட்க, பார்வதி சரசிடம் கூறிவிட்டு போனுடன் கீழே சென்றாள்.

அங்கே பெரிய பூகம்பம் காத்திருப்பது தெரியாமல், தன் சேலையின் முத்தானையை பிடித்துக்கொண்டு,  சினிமாப்பாடல் வரிகளை வாயில் முனுமுனுத்தவாரே கீழே வந்தாள் பார்வதி.

சோபாவில் ஒய்யாரமாக கால்மீது கால்போட்டவனாய் அமர்ந்திருந்த அந்த உருவத்தை பார்த்ததும், மனமெங்கும் குடியிந்து அத்தனை மகிழ்ச்சியும் நீரில் எழுதப்பட்ட எழுத்துக்கள் போல காணாமல் போனது.

அவனின் முகத்தை கூட பார்க்க விரும்பாதவள், நேராக கிட்சனுக்குள் நுழைந்தாள்.

பெயரில் மட்டுமே ஆனந்தத்தை வைத்திருப்பவன், அவனால் தான் தன் அனைத்து மரியாதையையும் இழந்தது, மனம் இன்னும் ஆறாத ரனமாக இருக்கிறது. இவன் ஏன் தேவையில்லாமல் இங்கே வந்திருக்கிறான் என மனதில் பல குழப்பத்துடன் அம்மாவை பார்த்தாள் பார்வதி.

"ஆனந்த் வந்திருக்கான் பார்த்தியா?" என்ற பரிமளத்தை பார்த்தவள், ம்ம் என தலையசைத்தாள்.  "இப்போ தான் ஊரில் இருந்து வந்தானாம், சக்தி அத்தை நேரா இங்க கூட்டிட்டு வந்திடுச்சி, போ போயிட்டு பேசிக்கிட்டு இரு, நான் இங்க வேலையெல்லாம் முடிச்சிட்டு வரேன்" என்ற பரிமளத்திற்கு மறுப்பு தெரிவிக்க முடியாத நிலை என்பதால் காபியுடன் ஆனந்த் முன் வந்தாள் பார்வதி. 

"வாங்க பார்வதி, உங்களுக்கு தான் வையிட்டிங், ஏன் என் போன் கால் அட்டன் பண்ணல " என்றவனை சுட்டெரிக்கும் பார்வையால் பார்த்தவள், அவனுக்கு எதிரே இருந்த டீபாயில் காபி கப்பை வைத்துவிட்டு வெளியே நகர்ந்தாள்.

அந்த கப்பை கையில் எடுத்துக்கொண்டு அவள் பின் தொடர்ந்தவன், அவள் வீட்டு வாசலில் நிற்க, அவளின் முன் சென்று நின்றான். 

அவனை பார்த்தவள், ஏரிமலையாய் வெடிக்க துவங்கினாள், "எதற்கு என் பின்னே வருகிறாய்?, உன் முகத்தை பார்க்க கூட எனக்கு பிடிக்கல, ப்ளீஸ் லீவ் மீ அலோன்" என கத்த, "ஹேய் கூல்... " நான் உனக்கு விஷ் பண்ணத்தான் வந்தேன், "வாழ்த்துக்கள்" என அவள் முன்னே கைகளை நீண்ட, அவளோ அவனை தன் பார்வையாலே சுட்டெரித்துக்கொண்டு இருந்தாள்.

சற்று நேரம் பார்த்தவன், அவனே அவளின் கையை இழுத்து குலுக்கி வாழ்த்துக்கள் என மீண்டும் கூற, பளீர் என தன் கன்னத்தில் அடிவாங்கினான். அவளை முறைத்தவாரே சோபாவை நோக்கி நடந்தான் ஆனந்த்.

"இவன யாரு இப்போ இங்க வர சொன்னது, ச்சே தேவையில்லாம கண்முன் வந்து டென்சன் பண்ணுறான்" என புலம்பிக்கொண்டே உள்ளே சென்றாள் பார்வதி.

"என்னம்மா தம்பிக்கு கொடுத்துட்டயா?" என பாரிமளம் பார்வதியிடம் கேட்க, "ஆம் கொடுத்துட்டேன் அம்மா, பத்தலையினா இன்னும் கொஞ்சம் கூட தரேன்" என பார்வதி கூற, இருவரையும் விழித்த கண்ணுடன் பார்த்தான் ஆனந்த். 

அங்க அடுப்பு மேலயே இருக்கு பாரு பார்வதி,  வேணும்னா எடுத்து வந்து கொடு,  என பரிமளம் கூறிய பின் தான் இவர்கள் காபியைப்பற்றி தான் பேசுகிறார்கள் என உணர்ந்தான் ஆனந்த்.

"வேண்டாம் அத்தை இதுவே போதும்" என கூறிவிட்டு தன் கன்னத்தை தடவிய வண்ணம் காபியை குடித்து முடித்தான்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top