❤️அஆ 3 ❤️

காற்று காதலுக்கு வேலியிட...
ஆகயத்துக்கும் பூமிக்குமாய்
காதல் வேறுபட்டிருக்க...
என் காதின் ஓரத்தில் உணர்ந்த உந்தன் மூச்சி காற்றும்...
என்னுள் உணர்ந்த உந்தன் இதயத்துடிப்பும்
சொல்கிறது மன்னவா...
நீ என்னவனென்று...
அன்பே ஆருயிரே...❤❤

வீட்டை வந்தடைந்ததும் நிஷா
பேச வார்த்தைகளின்றி தவித்தாள்... விடாமல் வாய் பேசும் அந்த பச்சை கிளி பேச மடந்தையாக மாறிப் போனாள்...

பிறந்த நாளன்று அவனிடமிருந்து அவள் பெற்ற பரிசு... கன்னத்தை தடவி பார்த்துச் சிரித்தவளை வைஷாலி விசித்திரமாக நோக்கினாள்...

'என்னாச்சி இவளுக்கு நல்லாதானே இருந்தா... லூசு மாதிரி தனியா கன்னத்த தடவி சிரிச்சிட்டு இருக்கா... ஆமா எங்க அந்த குட்டி சாத்தான்... பண்றதெல்லாம் பண்ணிட்டு நல்ல பிள்ளையாட்டம் ஒளிஞ்சிட்டு இருக்கா...', நிஷாவின் மீதிருந்த கவனம் கொஞ்ச கொஞ்சமாய் ஜிம்மியின் மீது திரும்ப அதை தேட தொடங்கினாள்...

வைஷாலிக்குப் பயந்து போன ஜிம்மி நிஷாவின் காலைக் கட்டிக் கொண்டு அவளை உரசிக் கொண்டு அமர்ந்திருந்தது...

"இங்கதான் ஒளிஞ்சிட்டு இருக்கிய நீ... பண்றத எல்லாம் பண்ணிட்டு நல்ல புள்ள மாதிரி ஒரு லுக் விடுற பத்தியா... ஒழுங்கா என்கிட்ட வந்துரு...", ஜிம்மியை அவள் மிரட்ட...

அதுவோ அவளை பாவமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு இன்னும் ஆழமாக நிஷாவிடம் புதைந்து கொண்டது... அதன் செயலில் வைஷாலியின் சிரிப்பு பீறிட்டாலும் நிஷாவை ஆபத்தான நிலையில் சிக்குவித்த அதன் மீது கொஞ்சமேனும் கோபம் அவளுக்கு இருக்கதான் செய்தது...

ஜிம்மி காதை திருகியவள்           "இனிமே இப்படி செய்வியா??? எல்லாம் அவ கொடுக்குற செல்லம்... உனக்கு ரொம்ப திமிரு வெச்சி போச்சி..." வைஷாலி மிரட்டும் தொனியில் சொல்ல

ஜிம்மி 'அவ்... அவ்...' என்று குரல் கொடுக்க நிஷாவின் கனவு கலைந்து நினைவுலகிற்கு வந்தாள்...

"ஏய் என் செல்லத்த என்னடி பண்ற நீ??? அவன விடுடி..." வைஷூவை முறைத்தவள் ஜிம்மியை அவளிடமிருந்து பிடிங்கி தன் மடியில் அமர்த்தி கொண்டாள்...

"எல்லாம் நீ கொடுக்குற செல்லம்டி... ரெண்டு பிசாசும் சேர்ந்துட்டு என் உயிர வாங்குறதுலே இருங்க... நீ இன்னிக்கு எங்கேயும் வர வேண்டாம்... நான் மட்டும் அங்க போய் குட்டிஸ பார்த்துட்டு வரன்... மவள இன்னிக்கு நீ வீட்ட விட்டு வெளிய வந்த என் கைல செத்த.. ", நிஷாவை எச்சரித்துவிட்டு மலர் இல்ல குழந்தைகளுக்காக அவர்கள் வாங்கியிருந்த பரிசு பொருட்களை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் வைஷூ...

வைஷாலியின் பேச்சு செவிகளைத் தீண்டினாலும் அவள் மனதில் பதியாமல் போனது... அதான் அவள் மனதில் அவன் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தானே...

தனிமையின் இனிமையில் அவள் தன் மனம் கவர்ந்தவனின் நினைவில் சுகமாக மூழ்கிப் போனாள்...

வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்த கௌதமின் மனம் உலக்கையாய் கொதித்து கொண்டிருந்தது... சற்று நேரத்திற்கு முன் அவன் பார்த்த பெண்ணின் மீதிருந்த கோபம் இன்னும் குறையாமல் இருந்தது... 'சிறிதேனும் உயிர் பயம் இருக்கிறதா அவளுக்கு... நான் மட்டும் சரியான நேரத்தில் அங்கு செல்லவில்லையெனில் அவளின் நிலை...',  நினைக்க நினைக்க அவனின் மனம் நிலைக்கொள்ளாமல் அலைந்தது... 'யாரென்று தெரியாத அந்த பெண்ணை பற்றி நான் ஏன் யோசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது... பெண்களை வெறுக்கும் நானா அவளை பற்றிய சிந்தனையில் சுழல்கிறேன்... இனி அவளை நினைக்கவே கூடாது...' முதல் சந்திப்பிலே அவள் மீது உருவான உணர்வை முனையிலே நசுக்கிப் போட்டான்...

20 நிமிட பயணத்தில் கௌதமின் வானகம் அவனது வீட்டை அடைந்தது... நவீன வசதிகளைக் கொண்ட மூன்றுமாடி வீடு... சுற்றிலும் கண்ணைக் கவரும் வகையிலானா பூந்தோட்டம்... ரம்மியமான சுற்றுச்சூழலில் காண்போரின் கண்ணைக் கவரும்... ஆனால் அந்த அழகினைப் பார்த்து இரசிக்க தான் ஆளில்லை...

கௌதமின் தாய் பார்வதி மட்டும்தான் அந்த பெரிய வீட்டில் தனியாக வசிக்கிறார்...

இரண்டு வருடங்களுக்கு முன் தன் தாயோடு ஏற்பட்ட மனக்கசப்பால் அந்த வீட்டை விட்டு வெளியேறியவன் வெளிநாட்டிலே தங்கி விட்டான்... ஒரு வாரத்திற்கு முன்தான் கௌதமின் குடும்ப மருத்துவர் செழியன் அவனை தொடர்பு கொண்டார்...

அவனுடைய தாயின் உடல் நிலை சரியாக இல்லையென்றும் மனதளவில் மிகுந்த கவலையைச் சுமந்து கொண்டிருக்கிறார் என்றும் இந்த நிலை தொடர்ந்தால் அவரின் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் கூறினார்...

என்னதான் தாயுடன் பேச்சு வார்த்தை இல்லை என்ற நிலையை அவன் ஏற்படுத்தி இருந்தாலும் அவர் மீது அவனுக்கிருந்த அன்பினை வார்த்தைகளில் அடக்கிட முடியாது...

சின்ன வயதில் அவர் கரம் பற்றி நடைபயின்றது... பள்ளி பருவத்தில் நண்பர்களோடு உருண்டு புரண்டு சண்டையிட்டதை அவரோடு பகிர்ந்து கொண்டது... அரும்பு மீசை முளைத்த சமயம் தோழியின் மீது உருவான ஈர்ப்பைச் சொல்லி வெட்கம் கொண்டது என கௌதமின் அத்துனை செயலிலும் அவனின் தாயின் துணை இருக்கும்...

கௌதம் தொழிலில் தன் முழு கவனத்தையும் செலுத்த கொஞ்சம் கொஞ்சமாய் அவனுக்கும் அவனின் தாய்க்கும் இடையே இருந்த அன்பில் விரிசல் விழ தொடங்கியது... கௌதம் இரவு பகல் பாராமல் தன் தொழிலில் மூழ்கிவிட வெற்றி எனும் போதை அவனைச் சூழ்ந்து கொண்டது...

பார்வதியோ தன் மகனுக்குத் தகுந்தார் போல் ஒரு வாழ்க்கை துணையைத் தேடினார்... அப்படி அவர்கள் வாழ்வில் நுழைந்தவள்தான் தர்ஷனா...

கௌதமின் வாழ்வையே புரட்டிப் போட்டவள்...

இன்றைய நாளில் கௌதம் பெண்களின் மீது வெறுப்பை உமிழ காரணமாய் இருந்தவள்...

பெண் உருவில் அவன் வாழ்விலிருந்த சந்தோஷத்தை பறித்துச் சென்றவள்...


❤️💜💜💜💜💜💜💜💜💜💜💜💜❤️

இணையுமா இருதயம்???

❤️💜💜💜💜💜💜💜💜💜💜💜💜❤️

தொடருமா ஒரு காதல் பயணம்???

❤️💜💜💜💜💜💜💜💜💜💜💜💜❤️

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top