போட்டி #12 - 02. கொடைக்கானல் சுற்றுலா
நண்பர்களுடன் கொடைக்கானல் சுற்றுலா. அதுகும் காரில் என்றால் எந்த இளைஞனும் மகிழ்ச்சியில் துளிகுதிப்பான். இக்கதையில் வரும் நண்பர்கள் அதற்கு பொருந்துவார்கள். படிக்கிற வயதை தாண்டிய பிறகு மனம் முதலில் தேடுவது தனிமை மற்றும் சுதந்திரம்.
இவர்கள் யாரும் கொடைக்கானலை காணாதவர்கள் இல்லை. தங்கள் குடும்பத்துடன் வந்தவர்கள் தான். குடும்பத்துடன் ஒரு வாடகை பேருந்தில் அமர்ந்தவாறே இயற்கை அழகை அவர்கள் குடும்பத்தினரின் வாந்தி வாசனையை ஒடுக்கிவிட்டு ரசிக்க வேண்டும்
ஆனால் நண்பர்களுடன் இந்த கார் பயணத்தில் 'மாஸ்க்கார போடு மயகிரிய', 'ஜிங்கி ஜிங்கி' என்று குடும்பத்துக்கு கேட்க முடியா பாடல்களை சத்தமாக கேட்டு அதே நேரத்தில் அதற்கு நடனம் ஆடிக்கொண்டே வருவது எவ்வளவு இனிமை
குடும்பத்துடன் வரும் போது இயற்கை அழகான அனுபவமாக இருந்தது என்றால் இப்பொழுது நண்பர்களுடனான ஆட்டம் அதை விட இனிமையானது.
கொடைக்கானலுக்கு எல்லாரும் செல்லும் இடங்களுக்கு சென்ற பிறகு கொடைக்கானல் ஏரி அருகில் கார் நிறுத்திவிட்டு உட்கார்தார்கள். வெளியில் மழை பெய்து கொண்டு இருந்தது இருந்த ஒரே குடையை எடுத்துக்கு கொண்டு நண்பர்கள் ஒரு ஒருவராக நடந்துவிட்டு வந்தனர்.
கடைசியாக சென்ற ராகவ் மட்டும் சோகமாக வந்ததை கண்ட நண்பர்கள் கேட்ட பொழுது அவன் சொன்னது, "நான் தனியா நடந்த இந்த பாதையில் என் நிவேதிதாவுடன் சென்றால் என்று நினைதேன்?"
ஒரு சிரிப்புடனே சபீர் சொன்னான், "திருத்தம், இப்பொழுது அவள் விஜயப்ரஸாடின் நிவேதிதா. அவளை அடைய நீ அவன் உதவியை நாடினாய். உன் பணத்திலேயே அவன் அவளுக்கு பரிசுகள் வாங்கி அவளை அவனுடையது ஆக்கினான் பின்பு இப்ப என்ன என்னுடைய நிவேதிதா."
ரமேஷ், "உனக்கு என்ன? எங்களுக்கு தான் காதல் வலி தெரியும்"
சபீர் அதுக்கும் ஒரு பதில் வைத்திருந்தான், "அவன் காதல் கதை சிரிப்பு என்றால் உன்னுடைய கதை மிக சிரிப்பு. உன் ஆளு உனக்கு புடித்த நடிகை யாரு என்று கேட்டால் சன்னி லியோன் சொல்லி இருக்க"
ரமேஷ் உடனே, "நான் யாரும் இல்லை என்று தான் சொன்னேன். அவள் தான் யாரு படம் அதிகமா பார்ப்பியோ அவள் தான் என்றால் நான் காதலியிடம் உண்மையை சொல்ல வேண்டும் என்று உண்மையை சொன்னேன்."
ரவி, "உனக்கு கடைசி வர ஆளு இருக்காது டா. சன்னி லியோன் ஓடவே இரு."
சபீர் சோகமாக, "மச்சான் இவனாவது பரவலா டா. நான் சன்னி லியோன் படம் புடிக்கும்னு சொன்ன என் ஆளு அவ மூஞ்சி நல்ல இல்ல மியா பாரேன்னு சொல்லுறா. அவளா எப்புடி கழட்டி விட்டுது வேற பொண்ணுடா போறதுன்னு தெரியல? கடவுள் தான் வழி காட்டணும்"
ரமேஷ் சோகமாக இருக்கிற ஜேம்ஸ் கேட்டான், "நீ ஏன் டா சோகமா இருக்க உனக்கும் காதல் தோல்வியா இல்ல காதல் தோல்வி இல்லை என்று சோகமா?"
ஜேம்ஸ் அதற்கு, "இப்ப தான் அவளிடம் பேசுனேன். அவ பத்திரமா இரு? ஏரில போன லைப் ஜாக்கெட் போட்டுக்க. நீ நல்ல சிரிக்கிற மாதிரி போட்டோ எடுத்து அனுப்பு. சிரிக்காம மொறச்சிரத. நல்ல சிரி சொன்ன."
ரமேஷ் அவனிடம், "நல்ல விஷயம் தான, என் ஆளு உன் நண்பர்கள் கூட போற இடமா கொடைக்கானல். அவனுக கூட போகணும்னா எதாவது பாலைவனத்துக்கு போ. கொடைக்கானல் என்னுடன் போக வேண்டிய இடம்னு சொல்லுறா"
சபீர் ஒரு சந்தோசத்தில், "அப்பிடியா மச்சி சொல்லுறா. அப்பிடியே இந்த வரிகளையா உபயோக படுதினா?"
ரமேஷ், "ஆமாம். கூடவே அந்த நாய்களுக்கு உனக்கு ஒரு ஆளு இருக்குனு தெரியுமா தெரியாத. மச்சி நீ அவ கூட போனு சொல்ல மாட்டானுகள கேட்டா"
சபீர், "இதை என் ஆளு சொல்லி இருந்த அவுனுக யாரு முட்டா பசங்கனு சொல்லிட்டு வந்து இருப்பேன் ஆனால் அவள் பக்கத்துல இருக்குற ஹோட்டல் கூட வரமாட்டா."
ஜேம்ஸ் அவர்களிடம், "உங்களுக்கு புரியல டா. ஒரு பொண்ணு இந்த அளவுக்கு என்னைய பற்றி யோசிக்கிற நான் எங்க எதிர்காலம் பற்றி யோசிக்கவே இல்ல. இப்ப எனக்கு எதுக்குமே ரசிக்க தோணல இந்த மழை குளுர் காற்று. என் மனம் அவளுடனான என் வாழ்க்கையை பற்றி தான் தோன்றுகிறது."
ஒரு நிமிடம் அவன் எல்லாரையும் சிந்திக்க வைத்தான். அவர்கள் செலவு செய்யும் அனைத்தும் அவர்கள் பணம் இல்லை. தங்களுக்கு என்று ஒன்றும் இல்ல என்று புரிந்தது மனம் தங்கள் எதிர்காலம் பற்றி யோசித்தது
வாழ்கை என்றுமே கவலைகளுடன் தான். படிக்க ஒன்றும் இல்ல என்பதால் கவலை இல்லை என்று அர்த்தம் இல்லை. படிக்க ஒன்றும் இல்லாத பொது தான் மிக பெரிய கவலையே
வாழ்க்கையில் இருந்து கவலைகளை பிரிக்க முடியாது. கவலைகளை விட்டு ஓடுவது முட்டாள்தனம்
ஆண் இனம் கவலைகளை விட்டு ஓட தான் விரும்பும். ஆண் என்பவன் அதில் இருந்த தப்ப பெண்களிடம் தான் செல்ல முடியும். ஆணுக்கு பொறுப்பும் தைரியம் பெண்கள் தான்
அது அவன் தாயாக இருக்கலாம் இல்லை மனைவியாக கூட இருக்கலாம். இன்று பல ஆண்களிடம் பொறுப்பு இருப்பது பெண்களால் தான்.
சபீர் இந்த மிக பெரிய அமைதி அழிக்க, "டேய் முருகா, நீ எப்பவும் வெளிய வரவே மாட்ட உனக்கு என்றால் காதல் இல்லை. வேலை அமேசான் காத்து இருக்கிறது நீ ஏன் சோகமாக இருக்க?"
அதற்கு அவன், "நான் ஒரு தமிழ் எழுத்தாளர் குரூப் இருக்கிறேன் அவர்கள் என்னை குறிஞ்சி தினை பற்றி எழுத சொன்னார்கள் அதனால் தான் இங்கு வந்தேன் குறிஞ்சி திணை மலைகளும் அதில் வாழும் மக்களையை குறிக்கும் ஆனால் எனக்கு என்ன எழுந்துவந்து என்று தெரியவில்லை. இங்கு வந்தால் உதவும் என்று நினைதேன் ஆனால் அதுக்கும் நடக்க வில்லை."
ஜேம்ஸ் அதற்கு, "குறிஞ்சி திணை என்றால் தலைவன் தலைவியின் காதல் மற்றும் பிரிவு வரும் அதனால் நம்முடைய உரையாடலை எழுது."
முருகன் அதற்கு, "புரியாம பேசாத. அவை பொருள் தேடி சென்ற தலைவன் மற்றும் அழகியிடம் மயங்கிய தலைவன் மற்றும் காதல் சண்டைகளை சொல்லும் பாடல்கள். தெய்விகமான காதல் டா."
சபீர் அதற்கு, "அதுக்கு என்ன பண்ணுறது இப்ப காதல் இப்புடி தான். ராமர் காதல் இப்ப இல்லை. இப்ப இருக்குற காதலை எழுது"
ரமேஷ் அவனிடம், "தப்புனு சொன்ன ஐயோ எனக்கு தெரியாதுனு சொல்லு டா."
முருகன் தனக்குளே சொல்லி கொண்டான், "அகி அக்கா இதை குறிஞ்சி தினைனு ஏற்றுக்கொள்ளனும் சாமீ"
இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் யாரையும் குறிப்பன அல்ல.
உங்களுக்கு தெரிந்தவர்கள் பெயர் இருந்தால் அது இடர்ச்சியாக நடக்கவில்லை.
கொஞ்சம் விளையாட்டாக செய்தது தான்.
இக்கதையில் வரும் ராகவ் நிவேதிதா மற்றும் விஜயப்ரசாத் மட்டும் என்னுடன் பயின்றவர்கள். அவர்களுடைய கதை மற்றும் உண்மை.
****
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top