போட்டி #1 - 08. பெயர் தேவையில்லை.....
"இந்த பொண்ண பாத்தீங்களா???", என்று அந்த தம்பதியர் அந்த ரோட்டில் இருந்த அனைவரிடமும் கேட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் யாரும் அவர்கள் கேள்விக்கு பதிலளிக்கவில்லை. அவர்கள் முகத்தில் இருந்த கலவரத்தை ஏனோ யாரும் கண்டுகொள்ளவில்லை.
திடீரென அவர்கள் முகத்தில் ஒரு மகிழ்ச்சி... கண்ணில் ஆனந்தக் கண்ணீர்...
அவர்கள் பார்த்த திசையில் உற்றுநோக்கினால்... ஒரு பெண் குழந்தை. 4-5 வயது இருக்கும். அழகாக பள்ளிச்சீருடை அணிந்து பள்ளிப்பேருந்தில் இருந்து இறங்கினாள்.
அவர்கள் அந்த குழந்தையை நோக்கி ஓடினர். அந்தக்குழந்தை ஒரு ஆதரவற்றோர் இல்லத்தினுள் நுழைந்தது. அவர்கள் எப்படியோ அந்த பிள்ளையை நிறுத்தி, "செல்லம்... எங்கடா போன... உன்ன பாக்காம நாங்க எவ்ளோ பதறீட்டோம் தெரியுமா???", என்றனர்.
அதை கண்டுகொள்ளாத அச்சிறுமி தன் கையில் இருந்த புகைப்படத்தை பார்த்து கண்ணீர் விட்டாள். அதை பார்த்த அவள் தோழியிடம், "இவங்க தான் என்னோட அம்மா அப்பா... இவங்க சாமிக்கிட்ட போயிட்டாங்க", என்றாள்.
அதைக்கேட்டு அவர்கள் கண்கள் கலங்கின.....
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top