17

பேருந்து நிலையத்திற்கு இன்னும் ஒரு ஸ்டாப் இருக்கையில் கௌதமோ ஜான்வியை எழுந்திரிக்க சொன்னான் .

அவள் "இன்னும் ஒரு ஸ்டாப் இருக்கு கௌதம் "என்க

அவனோ "தெரியும் ஜானு இறங்கு "என்க அவளும் என்ன செய்கிறான் என்று புரியாமல் இறங்கி அவனுடன் அந்த நடை பாதையில் நடந்தாள்.

அவளை ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோரிக்குள் அழைத்து சென்றவன் சாக்லேட் செக்ஷனிற்கு கூட்டி சென்றான் .அங்கு சென்று "என்ன வேணும் ?"என்க

ஜான்விக்கோ அவன் விலை உயர்ந்ததாக பரிசு வாங்கி தந்திருந்தால் கூட அவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாளா என்று சொல்ல முடியாது எனில் சாக்லேட் என்றதும் முகம் அதனை ப்ரகாசமடைய "கிட்கேட் வேண்டும் "என்றாள்.

அவன் "எத்தனை ?"என்று கேட்க

அவளோ "அத்தனையும் வாங்கி தந்தா நல்லா தான் இருக்கும் "என்று kit katலேயே கண்ணை வைத்து கூற அவனோ அவள் தலையிலேயே கொட்டியவன் இரண்டு பெரிய சைஸ் கிட்கேட் சாக்லேட் வாங்கி தந்தான் .

தன் தலையை தேய்த்தபடி முனங்கிய ஜான்வி "அவன் தான எவ்ளோ வேணும்னு கேட்டான் கேட்டதுக்கு கொட்டுறான் கொரங்கு "என்று முணுமுணுக்க அவனோ அது தெளிவாய் காதில் விழுந்தாலும் அவளிடம் காட்டிக்கொள்ளாது தனக்குள்ளே சிரித்தவன் அவளுடன் அந்த நடைபாதையில் நடக்க துவங்கினான்.

அவளோ எனக்கென்ன என்பதை போல் kitkatடை பிரித்து உண்டபடி நடக்க அவனோ அவள் உண்ணும் அழகை பார்த்தபடி நடந்தான் .

வெயிலின் தாக்கம் அதிகமாய் இருக்க நெற்றியில் வியர்வை பூக்க தனது கைக்குட்டையை எடுத்து நெற்றியில் துடைக்க அப்பொழுதே அவளிற்கு தனது கைக்குட்டையில் ஞாபகம் வந்தது .அவனிடம் திரும்பியவள் மிட்டாயை உண்டபடி "என்னோட kercheif எங்க ?"என்க

அவனோ "கேட்காமயே போயிருவியோன்னு நெனச்சேன் "என்று கூறி நின்றவன் தனது பாக்கெட்டிலிருந்து அதை எடுத்து கொடுக்க அதை வாங்கியவள் தனது கைப்பையில் அதை பத்திரப்படுத்திக்கொள்ள அவன் எடுத்து கொடுத்ததில் அவனின் purse கீழே விழுந்து உள்ளிருந்த கார்டுகள் சிதற அவளோ "அட லூசு ஒழுங்கா கவனிக்க மாட்டியா "என்று அதை எடுத்தவள் அதில் ஒரு தம்பதியினரின் புகைப்படம் இருப்பதை கண்டு அதிர்ந்தாள்.

ஏனெனில் இது அவனின் அம்மா அப்பாவின் புகைப்படம் இல்லை .

அவள் அந்த புகைப்படத்தை பார்த்துவிட்டதை உணர்ந்தவன் முகம் இறுக அவளோ அவனின் முகத்தை ஏறிட்டு பார்த்தாள்.அது பாறை போல் இறுகி இருந்தது .

இந்த சமயத்தில் எதுவும் கேட்க வேண்டாம் என்று நினைத்தவள் அப்படியே மூடி அவனிடம் கொடுத்துவிட அவனும் எதையும் கேட்காமல் வாங்கி தன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டான் .

சிறிது நேரம் மௌனமே ஆட்சி புரிய கௌதம் தொடங்கினான் "அது யாருனு கேட்க மாட்டியா ?"என்று

ஜான்வி "யார்?" என்பதை போல் பார்க்க

ஒரு பெருமூச்சை விட்டவன் "என்னோட அம்மா அப்பா "என்க அவள் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தாள்.

அவளின் அதிர்ந்த தோற்றத்தை பார்த்தவன் ஒரு நிமிடம் தன்னை நிதானித்துவிட்டு "எனக்கே ரெண்டு நாள் முன்னாடி தான் தெரியும் .அப்போ தான் என்னோட அம்மாவோட விலகளுக்கான காரணமும் தெரிஞ்சது "என்க

அவள் "அப்போ உன் அம்மா அப்பா ?"என்க

அவனோ விரக்தியாய் சிரித்தவன் "என் பெரியப்பா பெரியம்மா தான் அவங்க .அம்மா அப்பா எனக்கு ஒரு வயசு இருக்கேலயே விபத்துல இறந்துட்டாங்களாம் .பெரியம்மா ஹோம்ல சேர்த்து விட சொல்லிருக்காங்க என்னோட பெரியப்பா அதாவது அப்பா தான் என் பையன நான் தான் வளர்ப்பேன்னு இத்தனை நாளா வளர்த்துருக்கார் ."என்றவன் அந்த புகைப்படத்தை காட்டி "இவங்க போட்டோ எப்போவுமே என் கூட இருக்குற மாதிரி தான் என் அப்பா பாத்துக்கிட்டாரு. ஹாஸ்டல் போரப்போல இருந்து எப்போவுமே என் purseல இவங்க போட்டோ வச்சு விடுவாரு.யாருனு கேட்டதுக்கு சித்தப்பா சித்தினு சொன்னாரு.இது வரைக்கும் யாரும் என்கிட்ட இவங்க உன் அம்மா அப்பா இல்லனு சொன்னதில்லை அப்பா சொல்ல விட்டதில்லன்னு நினைக்குறேன் "என்க

ஜான்வி "அப்போ இப்ப எப்படி தெரிஞ்சது ?"என்க

அவனோ "ஸ்டோர் ரூம்ல அப்பாவோட பழைய டைரி கெடச்சுது அதுல படிச்சு தெரிஞ்சுகிட்டேன் .கேட்டேன் ஒத்துக்கிட்டாரு "என்க அவளிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை பாதி உண்ட கிட்கேட் அப்படியே கையில் உருக ஆரம்பிக்க

அவளை பார்த்த கௌத்தமோ சிரித்தவன் "ஹே ஹே ரொம்ப feel பண்ணாத செட் ஆகல "என்க

அவளோ சிரித்தவள் மீதி kitkatடை உன்ன அவனோ "ஒரு பேச்சுக்காவது வேணுமான்னு கேட்க மாட்டியாடி ?"என்க

அவளோ இருந்த கடைசி துண்டையும் அவனையும் மாத்தி மாத்தி பார்த்து திரு திருவென்று விழிக்க அவளின் முழிப்பில் புன்னகைத்தவன் அவள் தலையிலேயே கொட்டி "அதையும் நீயே தின்னு "என்று அவள் வாயில் திணித்து விட்டான் .

அவள் சாப்பிட்டு முடித்து வாயை துடைக்க அவளின் இதழின் ஓரத்தில் ஒரு துளி சாக்லேட் மட்டும் ஒட்டிக்கொண்டிருந்தது .அதை பார்த்தவன் "ஒழுங்கா தொட டி "என்று கூற அவளோ அங்கு இங்கு என்று மாற்றி மாற்றி துடைக்க அதுவோ போகவில்லை பின் தலையிலேயே தட்டிக்கொண்டவன் "ஒன்னையும் உருப்படியா பண்ணாத "என்று அதை தானே துடைத்துவிட அவனின் திடீர் தொடுகையில் உறைந்தவள் பின் உதட்டில் ஒரு புன்னகை சூடி கொண்டாள்.

இருவரும் பேசியபடி நடந்ததில் பேருந்து நிலையம் வந்துவிட தனக்கென்று அங்கே மால்லிலேயே ஒரு சாப்பாடு பொட்டலம் வாங்கி இருந்தவன் பேருந்திற்குள் ஏறி விட ஜான்வியின் முகம் தொங்கி விட்டது .

அவளின் வாடிய முகத்தை காண சகியாதவன் "என்னடி ?"என்க

அவளோ அதே வாடிய முகத்துடன் ஒன்றுமில்லை என்று தலை அசைத்தாள் .

சிறிது நேரம் பார்த்தவன் "ஆபீஸ் போகலையா ?"என்க

அவளோ இல்லை என்று அதே முகத்துடன் தலையாட்ட அவனிற்கு தன் ஐயோ என்றிருந்தது .

கௌதம் "அப்படி பாக்காத ஜானு நீ சிரிச்சபடி வழி அனுப்புனா தான நானும் சந்தோஷமா போவேன் "என்க அவளோ கண்களாலேயே போக வேண்டுமா என்றாள் .கண்களில் அத்தனை ஏக்கம் கண்ணீர் இப்பவோ அப்பாவோ என்று எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க இதற்கு மேல் தாங்காது என்று பேருந்தை விட்டு கீழே இறங்கியவன் உன் ஆபீஸ் எந்த பஸ் போகும் ?"என்க

அவளோ குழப்பத்துடன் எதிரில் கிளம்பும் தருவாயில் இருந்த பஸ்சை காட்ட அவனோ அவள் கையை பற்றி இழுத்து சென்றவன் அந்த பஸ்ஸில் ஏற்றிவிட்டு விட்டான் .

நொடியில் நடந்ததை யூகித்தவள் இறங்க பார்க்க அவனோ "சுப் அப்டியே உக்காரு "என்க அவள் பாவமாய் அவனை பார்க்க

அவனிற்கு அவளின் செய்கையில் சிரிப்பு வந்தாலும் அவள் இப்படி பார்த்தாள் நிச்சயம் தன்னால் நிம்மதியாக ஊர் பொய் சேர முடியாது என்று உணர்ந்தவன் முகத்தில் கடுமையை ஏற்றி "ஆபீஸ் போனதும் போன் பண்ணு நா கிளம்புறேன் "என்று கூற அவளோ ஒழுங்கு காட்டி முகத்தை திருப்பி கொண்டாள் .

அவளின் செய்கையில் அவனிற்கு புன்னகை தோன்ற பேருந்தும் அதே நேரம் கிளம்பி இருந்தது .அவள் கம்பியில் கை வைத்தவாறு அவன் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்தபடி செல்ல அந்த பேருந்து சென்ற இரண்டு நிமிடத்திற்கு பின்னும் அந்த திசையையே வெறித்தவன் பின் ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு தனது பேருந்தில் ஏறிக்கொண்டான் .

இருவரும் வெவ்வேறு பாதையில் பயணிக்க இதனை நேரமாய் மனதை நிறைத்த மகிழ்ச்சி வடிந்து இருவரின் மனதையும் வெறுமை சூழ்ந்துகொண்டது.பேருந்தில் தனது இருக்கையில் சாய்ந்தவன் அவள் கொடுத்த keychainai எடுத்து அதை வருட அவள் அவனின் grip bandai வருடி இனி slowaaவே போடா என்று கண்களால் கெஞ்சியபடி கேட்டது ஞாபகம் வர தனக்குள்ளே முணுமுணுத்துக்கொண்டான்" ராட்சசி ரொம்ப மாத்துர டி என்ன "என்று .

பின் ஜான்வி அலுவலகத்திற்கு சோர்ந்த முகத்துடன் வர ப்ரவீனும் ஜீவிதாவும் இவளின் வரவையே எதிர்பார்த்து காத்திருந்தனர்.அவளின் முகம் வாடியிருப்பதை கண்டவர்கள் தங்களுக்குள்ளே பார்த்துக்கொள்ள ஜான்வியோ அந்த kitkattai எடுத்து மேஜையின் மேல் வைத்தவள் அதையே பார்த்துக்கொண்டிருந்தாள் .

அவளின் அருகில் வந்த ஜீவிதா அவளின் தலையை வருட அவளின் வயிற்றில் சாய்ந்து கொண்டவள் சிறிது நேரம் அமைதியாகவே இருந்தாள்.அவள் தலையை வருடிய ஜீவிதா "என்னாச்சுடி ?"என்க

ஜான்வி "தெரியலடி ஒரு மாதிரி இருக்கு அவன் ஊருக்கு போனது "என்க புரியவேண்டியவளை தவிர்த்து மற்ற இருவருக்கும் அவளின் நிலை புரிந்தது .பிரவீன் கண்களில் அப்பட்டமாய் பயம் தெரிந்தது தன் தோழியின் நிலையை எண்ணி ஜீவிதாவை அவன் பார்க்க அவளிற்கு அவ்விதமே .

ஜீவிதா இன்று அவளிடம் பேச வேண்டுமென்று நினைத்தவள் "ஜான்வி "என்க ஜான்வி நிமிர .

ஜீவிதா "ஆர் யூ இன் லவ் ?"என்க ஜான்விக்கு ஒரு நிமிடம் இதயம் நின்று துடித்தது என்று தான் கூற வேண்டும் .இல்லை என்று மொத்தமாக மறுக்கவும் முடியவில்லை ஆம் என்று ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை .

அவள் மௌனமாய் இருக்க பிரவீன் "கேக்குறால்ல சொல்லுடி "என்க

ஜான்வியோ "தெரியல டா"என்றாள் உதட்டை பிதுங்கிக்கொண்டு .அவளை நினைத்து இருவராலும் வருத்தப்பட தான் முடிந்தது .

ஜீவிதா "தெரியலேனா என்ன அர்த்தம் ?"என்க

அவளோ "தெரியலன்னா தெரியலன்னு தான் அர்த்தம் .அவனோட இருக்கேல சந்தோஷமா இருக்கு ஆனா அதுக்கு பேர் லவ்வானு கேட்டா எனக்கு தெரியல அதை தெருஞ்சுக்கவும் விரும்பல"என்க

ஜீவிதா "இப்டி சொன்னா என்னடி அர்த்தம் ?"என்க

அவளோ "ஹே ப்ளீஸ் டி லவ் அது இதுனு பேசாதீங்க "என்றவள் கம்ப்யூட்டர் புறம் திரும்ப

அவளின் நாற்காலியை சுழற்றி தன்னை பார்க்க செய்த ஜீவிதா "பேசாதீங்கன்னா புரியல ?"என்க

ஜான்வியோ"எதிர்காலமே இல்லாத ஒன்ன பத்தி எதுக்கு யோசிக்கணும் ?இப்போதைக்கு இந்த feel நல்லா இருக்கு அவ்ளோ தான் .இதுக்கு மேல யோசிச்சா அவனுக்கும் நல்லதில்லை எனக்கும் நல்லதில்லை .ஏன் உனக்கு தெரியாதா என் குடும்பத்தை பத்தி ?"என்க அவளிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை .

தள்ளி நின்று பார்க்கும் அவர்களுக்கே தெரிகிறது இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பையும் தாண்டி காதல் கொண்டுள்ளனர் என்று எனில் சம்மந்தப்பட்ட இருவரும் அதை ஏற்க தயாராக இல்லை என்றால் பரவாயில்லை உணரவே தயாராய் இல்லை எனும் பொழுது அவர்களால் என்ன செய்ய முடியும் ?

பெருமூச்சொன்றை வெளியிட்டவர்கள் தத்தம் இருக்கைக்கு சென்று அமர ஜான்வி அப்படி ஒரு வாக்குவாதம் நடந்ததையே மனதில் பதிய வைக்காமல் தனது keyboard எனும் காதலனுடன் ஒட்டி உறவாட துவங்கிவிட்டாள்.

அவள் கண் ஒருமுறை அவன் வாங்கி தந்த kitkatன் மேல் பதிய உதட்டில் ஒரு சிறு புன்னகை தோன்ற தனது மோபிளேக்கை எடுத்து தான் பத்திரமாய் ஆபீஸ் வந்துவிட்டதை அவனிற்கு தெரியப்படுத்த குறுஞ்செய்தி அனுப்ப அவனோ ஒரு நிமிடத்திற்கு பின் பார்த்தவன் "ஓகே ஜானு பை "என்று அனுப்ப அவளின் உதடுகள் "மிஸ் யூ"என்று முணுமுணுத்தது .

காலம் தான் காதலை உணர்த்திடுமோ?

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top